மரண வீரன் 1
7000 வருடங்களுக்கு முன்பு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் மகனாக பிறந்த வீரன் இந்திரஜித்.இவன் பிறந்து முதன்முதலில் அழுதபோது இடியும் மின்னலும் ஒரு வீரனின் பிறப்பை வெளிபடித்தன .சிறுவயதிலேயே சிறந்த வீரனாகவும் இவனது இளமைப்பருவத்தில் பிரம்மாஸ்திரம் வைணவஸ்திரம் மற்றும் பாசுபத அஸ்திரங்களை வைத்திருந்தான் .இந்திரஜித்துக்கும் பாம்புகளின் அரசனான சேச நாகனின் மகளான சுலோச்சனா என்ற என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டான் . தந்தை ராவணனை மீட்க விண்ணுலகம் மீது போர்தொடுத்து தேவர்களை தோற்கடித்து அவர்களது ஆயுதங்களையும் கைப்பற்றி ராவணனை மீட்டு தேவர்களை சிறைபிடித்தான் .ராமாயண போரில் ராமனையும் லட்சுமணனையும் திக்குமுக்கு ஆட செய்தவன் 670 லட்சம் வானரங்களை ஒரே நாளில் கொன்று குவித்தான் அதுமட்டுமின்றி சிவனின் அவதாரமான அனுமன் எனும் வானரத்தை ஒரே வீரனாக அடக்கினான் இந்த இந்திரஜித் எனும் வீரன் ராமாயண போரில் லட்சுமணனால் கொல்லப்படுகிறான். அதன்பிறகு ராவணனும் கொள்ளப்பட இந்த போர் முடிவுக்கு வருகிறது
2022 நிகழ்காலம்
இரவு நேரத்தில் சீனாவின் வடக்கு இமயமலையில் உள்ள 22000 அடி உள்ள கைலாய சிகரத்தை சுற்றி கார் மேகம் சூழ்ந்துஇருக்க இடியும் மின்னலும் மிரட்ட அந்த மின்னல்வெட்டு வெளிச்சத்தில் ஒரு மனிதன் பலர் முயற்சித்து தோல்வியுற்ற கயிலாய மலையை உச்சியை நோக்கி ஒரு அசாதாரணமான ஒரு வீரன் ஏறிக்கொண்டிருந்தான் மழை துளிகள் அவன் முகத்தை நனைக்க இடியும் மத்தளமாய் ஒலிக்க மின்னல் வெளிச்சத்தில் பாதையை கண்டு கைலாய உச்சி அடைந்தான் உச்சியை அடைந்த அவனுக்கு அவனது மரணம் காத்திருந்தது .திடீரென ஒரு வெளிச்சம் .அந்த வெளிச்சத்தில் இருந்து ஒரு பாதி மனிதனும் பாதி காளையும் கலந்த நந்தி அந்த வெளிச்சத்தில் இருந்து தென்பட்டது
its only rough draft its not a fair draft