கல்வி ஒரு அறிமுகம்
கல்வி என்பது எங்கு எப்போது தோன்றியது என்றால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்திலியே கல்வியும் தோன்றிவிட்டது.கல்வியின் தோற்றம் என்பது இந்த பூமியில் உயிர்கள் தங்கள் உயிர்களை காத்துக்கொள்ள இயற்கையகவே இயற்கையால் உருவாக்கப்பட்டதுதான் கல்வி.ஒரு உயிர்க்கு இயற்கை பேரிடராலோ, அல்லது மற்ற உயிரங்களாலோ பாதிப்பு ஏற்படும்போது அதன் உயிரை எப்படி காத்துக்கொள்வது என்ற புள்ளியிலிருந்து அனுபவம் சார்ந்த கல்வி அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.இந்த அனுபவம் சார்ந்த கல்வி இல்லை என்றால் இன்று இந்த பூமியில் எந்த உயிர்களும் இருந்திருக்காது.
ஒரு உயிரின் பரிணாம மாற்றத்திற்கு இந்த அனுபவ சார்ந்த கல்வியானது எப்படி செயல்படுகிறது என்றால் ஒருஉயிரானது இயற்கை விபத்தில் சிக்கி உயிர் பிழைக்கும் போது ஒரு புது விடையத்தை கற்று மறுபடி அதேபோல் ஒரு நிகழ்வு நடந்தால் எப்படி சமாளிப்பது என்ற அறிவை பெறுகிறது அந்த அறிவை அது அடுத்த தலைமுறைக்கும் கற்று கற்றுக்கொடுக்கிறது.அதிலும் சில விடயங்கள் மரபணுநினைவகத்தில் அதாவது (genetic memory) இல் இயற்கையாகவே பதியவைக்கபடுகிறது .இதனை மரபணு நினைவாற்றல் என்று கூறுவார்கள்.ஒரு அனுபவம் சார்ந்த அறிவு எப்படி ஒரு உயிரினத்தின் மரபணு மூலம் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் சில கோடி வருடங்களுக்கு முன்னாள் டைனோஸரஸ் என்ற உயிரினம் இந்த பூமியில் வாழ்ந்தது நமக்கு தெரியும். அதனுடைய பரிணாம வளர்ச்சி தான் இன்று பூமியில் வாழும் பறவை இனம் என்றால் நம்ப முடிகிறதா.இந்த மிக பெரிய மாற்றத்திற்கு காரணமே அனுபவம் சார்ந்த கல்வியும் அதனால் ஏற்பட்ட மரபணு மாற்றமும் தான் காரணம்.
கல்வியானது மனிதர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல.கல்வி அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று.இந்த அனுபவம் சார்ந்த கல்வி அறிவால்தான் இன்று பூமியில் வாழும் உயிரினங்கள் நிலைத்து வாழுகின்றன.இந்த அனுபவம் சார்ந்த கல்வி அறிவுதான் வேட்டை விலங்குகளின் வேட்டை தன்மையை மேம்படுத்தி அதற்கான உடலமைப்பு போன்றவற்றை மேற்படுத்தியுள்ளது.அதே போல் வேட்டை விலங்குகளிடம் இருந்து தங்கள் உயிரை காத்து கொள்ளவும் சில விலங்குகள் அதற்கேற்ப அதன் அனுபவம் சார்ந்த கல்வியையே பயன்படுத்தி இந்த பரிணாம வளர்சியில் தன்னை தானே மேப்படுத்தி இன்னும் உயிர் வாழுகின்றது.இந்த பூமியில் வாழும் அணைத்து உயிர்களுக்கும் எதோ ஒரு விதத்தில தற்காப்பிற்கு தனிப்பட்ட முறையில் அதனதன் உடலில் இயற்கையாகவே ஆயுதமோ அல்லது மற்ற திறமிக்க தனிப்பட்ட ஒரு விசேஷ சக்தி ஒன்று இருக்கும்.அனால் மனிதனுக்கு அதுபோல் எதுவும் இல்லை. அவனுக்கு இருந்தது மேம்பட்ட சிந்திக்கும் ஆற்றல் மட்டும் தான்.
அனுபவம் சார்ந்த கல்வி எப்படி செயல்படுகிறது என்றால் இயற்கையால் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் ஒன்று மற்றொன்றை சார்ந்துள்ளது .ஒரு சிங்கமானது அதன் பசிக்கு ஒரு விலங்கை வேட்டையாடும் போது அதனை பார்க்கும் மத்த மிருகங்கள் அனுபவரிதியாக சிங்கம் என்றால் உயிர்களை கொன்று உணவாக உட்கொள்ளும் ஒரு வேட்டை பிராணி என்று பார்த்து தெரிந்து கொண்டு அதனை அதன் அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுக்கிறது.
இன்னும் சொல்ல போனால் மனிதனுக்கு சிந்திக்கும் திறன் எப்போது தொடங்கியது என்றால் அவன் உணவை எப்போது சமைத்து உட்கொள்ள தொடங்கினானோ அதிலிருந்துதான் மனிதனின் சிந்திக்கும் திறன் வந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.இப்படி மாமிசத்தை நெருப்பு மூட்டி சமைத்து சாப்பிட மனிதனுக்கு கற்று கொடுத்ததே இயற்கை தான்.இதே இயற்கைதான் மனிதனுக்கு நெருப்பை உருவாக்கவும் கற்றுக்கொடுத்தது.
நெருப்பை உருவாக்க தொடங்கிய மனிதன் அதை எப்படி உருவாக்குவது என்பதில் தொடங்கி இன்று பூமியில் முதல் விண்வெளி வரை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு மனிதன் முன்னேறிருக்க காரணம் இந்த அனுபுவம் சார்ந்த கல்விதான் காரணம் . பூமியில் வாழும் அணைத்து உயிர்களும் சிந்திக்கும் திறன் படைத்ததுதான் ஆனால் மனிதர்கள் மட்டும் அறிவு வளற்சியில் முதன்மையானவர்களாக திகழ காரணம் மனிதர்கள் கூட்டமாக வாழக்கூடியவர்கள்.இப்படி கூட்டமாக வாழ்வதன் மூலம் தங்கள் அனுபவ அறிவை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளமுடிந்தது.இந்த பரிமாற்றம் தான் மனிதர்களை இன்றளவும் அறிவில் முன்னோடியா இயற்கை வைத்திருக்கிறது .
இன்று மனிதர்கள் பையிலும் கல்வியில் பல பிரிவுகள் உள்ளது.1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை அனைவருக்கும் தமிழ் ,ஆங்கிலம் ,கணிதம் , அறிவியல் ,சமுக அறிவியல் மற்றும் விளையாட்டு என்ற பொதுவான ஒரு படப்பிரிவுதான் இருக்கும்.10ம் வகுப்புக்கு பின் 11மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுவான பாடப்பிரிவிகள் இல்லாமல் உயர்நிலை கல்வி வழங்கும் நோக்கத்தில் முக்கியம் என்று ஒரு சில பாடத்தை தேர்ந்தெடுத்து அவற்றை தனித்தனி பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.இங்கு நாம் தேர்தெடுக்கும் பிரிவை பொறுத்துதான் நமது கல்லூரி கல்வி அமையும் இது தான் இன்று நாம் பின்பற்றும் கல்வி முறை ஆகும்.
இன்று நாம் கற்கும் இந்த கல்வி முறை எப்படி வந்தது என்று யாராவது எண்ணியது உண்டா ஒரு இயந்திர பொறியியல் அதாவது (mechanical engineering) என்ற ஒரு பாடத்தை எடுத்து கொள்வோம் இந்த இயந்திர பொறியியல் பாடம் என்பது எப்படி தோன்றியது இயந்திரங்கள் கண்டுபிடித்த பின்புதான் இயந்திரவியல் என்ற ஒருபாடப்பிரிவை நாம் இன்று கல்லுரியில் பயிலுகிறோம் அப்போது இயந்திரங்கள் கண்டுபிடிக்காதபோது இயந்திரவியல் என்ற ஒரு பாட பிரிவு இருந்திருக்குமா
by
Raj
Good
பதிலளிநீக்கு