ஞாயிறு, 17 டிசம்பர், 2023

இம்சை அரசன் 1ம் புலிகேசி 2

                   இம்சை அரசன் 1ம் புலிகேசி (2) 

பேருரை நோக்கி நடக்க ஆரமிச்சி தவுடுக்கு பசி எடுக்க ஆரமிச்சது. உடனே எங்கட உட்காந்து சாப்பிடறது யோசிக்கிட்டே கொஞ்ச தூரம் நடந்தான் தவுடு.கொஞ்ச தூரம் போன தவுடு ஒரு ஆத்தங்கரையை பாக்குற உடனே ஆத்தங்கரையை நோக்கி வேகமாக நடந்து போனான்.அங்க போய் பாத்த ராஜாவோட போருக்கு பயன்படுத்துர யானைங்க குதிரைங்க எல்லாத்தையும் படை வீரர்கள் குளிப்பாட்ட தவுடு அவன் கொண்டு வந்த சாப்பாட எடுத்து திறந்து வச்சிட்டு கை,கால் கழுவ ஆத்துல இறங்குன தவுடு அந்த நேரம் பாத்து பக்கத்துல இருந்த யானை ஒன்னு தவுடு திறந்து வச்ச சாப்பாட சாப்பிட கை கால் கழுவ போன தவுட கொஞ்ச நேரம் கழிச்சி வந்து பாத்த அவன் திறந்த வச்ச சாப்பாட்டை காணும் என்னடானு பாத்த இவன் சாப்டா வச்சிருந்த சாப்பாட பக்கத்துல இருந்த யானை சாப்பிட இத பாத்த தவுடுக்கு ஒரே கோவம் வேகமா அது கிட்ட போய் எப்படி என்னோட சாப்பாட நீ சாப்பிடலாம் ஒரு குத்து குத்துனா தவுடு குத்துன உடனே யானை பொத்துனு கீழ விழ அங்கிருந்த படைவீரன் ஒருத்தன் படை தளபதிகிட்ட போய் சொல்ல யானை குத்துன விஷயம் ஊர் முழுக்க பரவ உடனே தளபதியும் இந்த விஷயத்தை மன்னர்கிட்ட சொன்ன தளபதி.உடனே மன்னரும் அவனை கைது பன்ன சொல்லி உத்தரவு போட தவுட கைது செஞ்சி அரண்மனை கொண்டு போனாங்க.
 
வழக்கை விசாரிக்க மன்னர் வந்தார் மக்களும் கூடியிருந்தாங்க.தவுடு விசாரணை செய்ற இடத்துக்கு கொண்டுவரபட்டா.வழக்கை விசாரிக்க தொடங்கிய மன்னர் என்ன நடந்தது என்று கேட்க அதற்கு யானை குளிப்பாட்டுன வீரன் மன்னா இவ வந்து யானையை ஒரு குத்து குத்துனா யானை பொத்து கீழ விழுந்து செத்துப்போச்சி சொன்ன படைவீரன்.
 

உடனே மன்னர் தவுடை பார்த்து என்ன நடந்தது என்று கேட்டார் அதற்கு தவுடு மன்னா நா இந்த மாதரி சந்தைக்கு வந்த வந்து வேலைய முடிசிட்டு வீட்டுக்கு கெளம்பி போய்கிட்டிருந்த போகும்போது பசி தாங்க முடியாம சாப்பிடலாம்னு ஆத்துல இறங்கி சாப்பாட பிரிச்சி வச்சிட்டு
கை கால் கழுவ ஆத்துல இறங்கி கழுவிட்டு வந்து பார்த்த என்னோட சாப்பாடு எல்லாத்தையும் யானை சாப்டறிச்சி அதா கோவம் தாங்க முடியாம எப்படி என்னோட சாப்பாட நீ சாப்பிடலாம்னு ஒரு சும்மா தா குத்துன்னு யானை கிழ விழுந்திரிச்சி  என்று பயந்து கொண்டே சொன்னா  தவுடு.இத கேட்டு மன்னருக்கு ஒரே ஆச்சிரியம் எப்படி ஒரே குத்துல யானையை கொன்றுபா என்று எண்ணிக்கொண்டே சரி  இப்படி ஒரு வீரன்தான் எனக்கு வேணும் இந்த வீரனை நம்மளோட படையில சேத்துருங்க தளபதினு மன்னர் சொல்ல தளபதியும் சரினு சொல்லி படையில சேத்துக்கிட்டாரு . ஒரு நாள் மன்னர் தளபதியை கூப்பிட்டு நம்ம ஆட்டு பண்ணையில கொஞ்ச நாளா ஆடுங்க திருடு போகுது அத கண்டுபுடிக்க நல்ல வீரர்கள ஆட்டு மந்தைக்கு காவல் போடுங்க தளபதினு மன்னர் உத்தரவு போட்டாரு உடனே தளபதியும் சரினு சொல்ல அன்னைக்கு இரவு காவலுக்கு சில முக்கியமான வீரர்களை காவலுக்கு போட்டாரு தளபதி அந்த காவல்காக்கும் வீரர்கள் கூட்டத்துல தவுடு ஒரு ஆளு.தவுடுக்கு என்ன பண்றதுனு ஒன்னும் புரியல.
 
அந்த யானையை சும்மா தா குத்துன்னு அது எப்படி செத்துச்சுனு தெரியல இவங்க வேர இதுதான் சாக்குன்னு என்ன வேர ராணுவத்துல சேத்துப்புட்டாங்க எனக்கு சண்டையும் போட தெரியாது இன்னைக்கு எப்டியாச்சம் இங்க இருந்து தப்பிச்சி ஓடிடனும்முனு முடிவு பன்னி காவலுக்கு நின்ன தவுடு. அவ நெனச்சது போல நடுராத்திரி காவலுக்கு இருந்தவங்கள நல்லா தூங்க இதுதான் சரியான நேரம் இங்கிருந்து தப்பிக்கனு முடிவு பண்ணி மந்தையை விட்டு வெளிய போக அந்த நேரம் டக்குனு ஒரு யோசனை தவுடு  மண்டையில நம்ம சும்மா போறதுக்கு பதிலா போகும்போது ஒரு நல்ல ஆடா பாத்து தூக்கிட்டு போய்டலாம்னு முடிவு செஞ்சி ஆட்டு மந்தைக்குல போன தவுடு அந்த இருட்டுல ஆடு மாதரி குணிஜிக்கிட்டு ஒவொரு ஆடா தடவி பாக்க எந்த ஆடும் பெருசா இல்ல டக்குனு அவனோட கை ஒரு ஆடு மேல பட்டது.நல்ல பெருசா இருந்துது சரி தூக்கிட வேண்டியதுதான் முடிவு பண்ணி அந்த ஆட தூக்கி தோளுல வைக்கவும் பக்கத்துல இருந்த ஆடுங்க எல்லாம் சத்தம் போட சத்தம் கேட்டு ஒரு காவலாளி மட்டும் எழுந்து பாக்க ஒரு உருவம் ஆட தூக்கிட்டு போறத பாத்துட்டு  திருடன் திருடனு கத்த மத்த காவலாளிகளும் எழுந்து ஓடி போய் திருடனை புடிச்சி அரண்மனைக்கு கொண்டு போக அரசரும் எழுந்து வந்து திருடனை பார்த்து ஒரு நிமிஷம் அதிரிச்சி ஆயிட்டாரு உடனே யானையை கொன்ற வீரன் நீயா என்று கேட்க உடனே பக்கத்துல இருந்த சி காவலாளிகள ஒருத்த மன்னா கொஞ்சம் மேலே பாருங்கனு சொல்லி தீ  பந்தத்தை காட்ட மன்னர்க்கு இனொரு அதிர்ச்சி என்ன தவுடு ஆட்டு மந்தையில தூக்குனது ஆடு இல்ல இதனை நாளா அங்க இருந்த ஆடுகளை வேட்டையடிக்கிட்டு இருந்த புலி.அந்த புலியை பார்த்ததும் மன்னர் ஒரு நிமிடம் பயந்து போய் தவுட பார்த்து நீ பலே ஆளுதாயானு பாராட்ட தவுடுக்கு ஒன்னும் புரியல என்னது அப்ப நா தூக்குனது ஆடு  இல்லையா இது புலியா என்று அழுகை கலந்த சிரிப்போடு சிரிக்க தவுடக்கு ராணுவத்துல பதவி உயர்வு கெடச்சிது.தவுடுக்கு ஒன்னுமே புரியல நம்ம ஒன்னு நெனச்ச அது ஒன்னு நடக்குதுனு நெனசிகிட்டே எப்டியச்சம் இங்க இருந்து தப்பிச்சி ஓடிடனும் னு முடிவுல இருந்தா தவுடு.இப்டியே ஒரு வருஷம் ஓடிப்போச்சி.
 
திடீர்னு ஒரு நாள் பக்கத்துக்கு நாட்டு அரசன் போர்தொடுத்து வர மன்னரும் அவரோட படைகளை திரட்டிக்கிட்டு போர் பூமிக்கு போனாரு.இரண்டு நாட்டு படைகளும் சண்டைக்கு தயாரா இருந்தாங்க.அந்த நேரம் பாத்து தவுடு வந்து மன்னா இந்த போர்ல முதல் வீரனா நா போறன் என்னை ஒரு குதிரைல கீழ விழாத அளவுக்கு கட்டி குதிரைக்கு பின்னால ஒரு சூடு போடுங்க மத்தத நா பாத்துக்குறனு உடனே அரசரும் ஏன் கூட கேட்காம தவுடு சொன்ன மாதரி செய்ய குதிரை வலி தாங்க முடியாம வேகமா எதிரி நாட்டு படைகளை நோக்கி வேகமா ஓட தவுடுக்கு ஒரு பதற்றம் குதிரைக்கு சூடு வச்ச வேகத்துக்கு வேற எங்கியாவது ஓடுன்னு பார்த்த இது என்ன எதிரி படைக்கிட்டே போகுதே புலம்ப குதிரையோ வலி தாங்க முடியாம வேகமா ஓட அந்த நேரம் பார்த்து ஒரு வீனா போன பனைமரம் மேல இருந்த கீழ வரைக்கு உள்ளாரா பொந்து அடிச்சி போய் காத்துல எப்ப வேணும்னாலும் கிழே விழுந்திரலாம் போலனு இருந்த பனைமரத்தை தவுடு புடிக்க பனைமரம் அடியோடு பேத்துக்கிட்டு வர எதிரி நாட்டு படைவீரர்கள் எல்லாம் டேய் யாருடா இவன் பனைமரத்தையே புடிங்கிகிட்டு வரணு பயந்து ஓட பயந்து ஓடுன படைகளை ஓடஓட விரட்டி போர்ல வெற்றியை கைப்பற்றுனாங்க தவுடும் அவனோட படைகளும்.
 
போர்ல வெற்றியை  வாங்கி குடுத்தது நீதான் தவுடுனு தவுட பாராட்டி தவுடுக்கு மன்னரோட 3 பொண்ணுகளை கட்டி கொடுத்து தவுட  நாட்டோட அரசனா நியமிக்க தவிடும் நாட்டின் அரசான ஆனா.தவுடோட மூத்த பொண்டாட்டி ரெண்டு பேரும் அவங்க கிராமத்துல இருந்தாங்க ஆனா தவுடு அரண்மையில சநதோஷமா இருந்தான்.
 
சோம்பேறி தனத்தால வயலுல சரியா பயிர் செய்யாம வேலை செய்யாம சோம்பேறி தனத்தால வந்த வறுமையை போக்க மாடு விக்க பட்டணத்துக்கு போய் ராஜாவன கதை       
 
       

                                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...