புதன், 17 டிசம்பர், 2025

Hindi Is Not a Purely Indian Language”

 Hindi language: its origin, history, and evolution:





The Origin and Evolution of the Hindi Language

Hindi, one of the most widely spoken languages in the world, is the official language of India and a vital part of its cultural heritage. Its history spans over a millennium and reflects a complex interplay of linguistic, cultural, and historical influences. Understanding Hindi requires tracing its roots, evolution, and transformation into the modern language spoken today.


1. Linguistic Origins

Hindi belongs to the Indo-Aryan branch of the Indo-European language family, making it linguistically related to Sanskrit, Prakrit, Pali, and other Indo-Aryan languages. Its ancestry can be traced back to Vedic Sanskrit (1500–500 BCE), the language of the ancient Vedas. Sanskrit gradually evolved into Prakrit languages, which were more accessible to the general population. Among these Prakrits, Shauraseni Prakrit played a particularly significant role in the development of early Hindi dialects.

During the medieval period (around 600–1200 CE), Shauraseni Prakrit evolved into Apabhraṃśa dialects, which served as the immediate precursor to Hindi. Apabhraṃśa, meaning “corrupt” or “non-standard language,” was widely used in poetry, literature, and daily communication. It formed the linguistic bridge between classical Sanskrit and the modern Indo-Aryan vernaculars.


2. Emergence of Early Hindi

The Hindi language, in recognizable form, began to emerge around the 10th–12th centuries CE in the northern regions of India, particularly in areas corresponding to modern-day Uttar Pradesh, Madhya Pradesh, Bihar, and Rajasthan. The language was known as “Dehlavi” or “Hindavi”, reflecting the influence of Delhi as a political and cultural center.

Hindavi was a vernacular language, used for communication among ordinary people, while Sanskrit remained the language of scholarship and formal literature. Over time, Hindavi absorbed elements from Persian, Arabic, and Turkic languages, especially during the Delhi Sultanate (1206–1526) and Mughal Empire (1526–1857). These influences enriched Hindi vocabulary, grammar, and expressions, giving rise to what became known as Modern Hindi-Urdu.


3. Literary Development

Early literary works in Hindi were mostly devotional or poetic, often associated with Bhakti movement saints such as Kabir (1440–1518) and Tulsidas (1532–1623). Kabir’s dohas (couplets) and Tulsidas’s Ramcharitmanas were composed in forms of early Hindi and became immensely popular among common people. The vernacularization of literature helped Hindi gain widespread recognition as a language of expression and culture.

During the Mughal period, the influence of Persian and Arabic reached its peak. Court poets and administrators used a blend of local dialects and Persian vocabulary, which contributed to the development of Rekhta, the predecessor of modern Urdu. Over time, the spoken Hindi in northern India diverged into two strands: one incorporating more Persian-Arabic vocabulary (Urdu) and the other emphasizing Sanskrit-derived words (Modern Standard Hindi).


4. Standardization of Hindi

The modern form of Hindi began to take shape during the 19th and early 20th centuries, largely as part of India’s social and political reform movements. Scholars and writers sought to standardize Hindi grammar, script, and vocabulary. Bhagwan Das, Mahavir Prasad Dwivedi, and Bharatendu Harishchandra were instrumental in developing Hindi as a literary and formal language.

The Devanagari script was adopted as the official writing system for Hindi, distinguishing it from Urdu, which continued to use the Perso-Arabic script. Sanskrit vocabulary was deliberately emphasized in Modern Standard Hindi to create a linguistic identity distinct from Urdu, fostering a sense of national unity and cultural pride during the Indian independence movement.


5. Hindi in the Modern Era

Today, Hindi is spoken by over 500 million people in India and abroad. It serves as the official language of the Government of India alongside English. Hindi continues to evolve, absorbing words from English and other regional languages, reflecting India’s dynamic linguistic landscape.

Hindi literature, cinema, and media have played a significant role in promoting the language. Bollywood films, television shows, and radio programs have popularized Hindi and spread it internationally. Moreover, Hindi has become a medium for education, administration, and mass communication, solidifying its status as a central component of Indian identity.


6. Conclusion

The Hindi language is the product of centuries of linguistic evolution, shaped by Sanskrit, Prakrit, Apabhraṃśa, and regional dialects, as well as by Persian, Arabic, and Turkic influences. From its early vernacular form as Hindavi to its modern standardized version, Hindi reflects India’s rich cultural and historical heritage. Its journey from the villages of northern India to becoming a language spoken by hundreds of millions worldwide demonstrates its adaptability, resilience, and enduring relevance in both literature and everyday life.





வியாழன், 4 ஜனவரி, 2024

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூமியில் தான் தோன்றினோமா இல்லை வேற்றுகிரகத்தில் இருந்து வந்தோமா ,அப்படி வேற்று கிரகத்தில் இருந்து வந்திருந்தால் எங்கிருந்து வந்திருப்போம் ஒரு வேலை நாம் இந்த பூமியில் படைக்கப்பட்டிருந்தால் நாம் இயற்கையால் படைக்கபட்டோமா அல்லது இறைவன் என்று அழைக்கக்கூடிய மரணமில்லா சக்தி வாய்ந்தவர்களால் படைக்க பெற்றோமா இல்ல வேற்றுகிரகவாசிகள் நம்மை இந்த பூமியில் தோற்றுவித்தார்களா   என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு. இந்த  கேள்விக்கு விடை பொருட்டு இன்றளவும் பல அறிவியலாளர்கள் பல தேடல்களில் உள்ளனர்.

இந்த பூமியில் இரண்டு விதமான மனிதர்கள் உள்ளனர் அதில் ஒரு விதமான மனிதர்கள்  அபூர்வ சக்திகொண்ட என்றும் மரணில்லாத இறைவன் என்பவன் இந்த பிரபஞ்சத்தை படைத்தான் என்று இறைவன் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்கள் கூறுகின்றனர் . இந்த கடவுள் நம்பிக்கைக்கு எதிராக உள்ள மனிதர்கள்   இயற்கை தான் இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள உயிர்களையம்  தோற்றுவித்தது என்று கூறுகின்றனர். மனிதர்களின்  இது போன்ற பல  கேள்விக்கு இன்றளவும் விடை கிடைக்காமல் விடையை  தேடுகிறான் மனிதன்.

கடவுள் ஏற்பாளர்கள் 


 

இந்த பூமியில் வாழும் மனிதர்கள் பல குழுக்களாக பல இனங்களாக பிரிந்து வாழ்வதால் ஒவொரு இனக்குழுவிற்கும் தனித்தனி கடவுள்கள்  தனித்தனி வழிபாடு முறைகள்  தனித்தனி புராணக்கதைகள் உள்ளன .இந்த தனிப்பட்ட ஒவொரு புராணக்கதைகளிலும்  இந்த பிரபஞ்சம் எப்படி இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. உலகில் அதிகம் இருக்கும் கிறித்துவ மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதங்களில் இறைவன்  ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் அதன்  பிறகு வானம், நீர் ,வெளிச்சம் ,ஆகாயம் ,இரவு பகல் என அனைத்தையும் படைத்தார் என்றும் அதன் பிறகு தாவரங்கள்,விலங்குகள்,கடல்வாழ் உயிரினங்களை  படைத்தார் கடைசில் மனிதனை படைத்தார் என்று  பைபிளும்,குரானும் கூறுகிறது.

 


இதே விடயம் ஹிந்து புராணக்கதைகளில் சிவபெருமான் தனது தாண்டவ நடனத்தின் மூலம் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்று கூறுகிறது இப்படி உலகம் முழுவதும் இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்று கூறும் மனிதர்களிடத்திலேயே மதரீதியான பிரிவுகள்,போர்கள்  ,சண்டைகள்  ஏற்பட்டாலும் அவர்களின் நம்பிக்கை இறைவன் தான் முழு பிரபஞ்சத்தை படைத்தான் என்பதிலிருந்து மாறுவது மிக கடினமான ஒன்றாக இருக்கும்.

கடவுள் மறுப்பாளர்கள் 

கடவுள் மறுப்பாளர்களின்  கொள்கையை பொறுத்தவரை கடவுள் என்பவர் இல்லை.இந்த மொத்த பிரபஞ்சமும் அதில் உள்ள உயிர்களும்  இயற்கையால் தோற்றுவிக்கப்பட்டது என்பது இவர்களின் நம்பிக்கை ஆகும் . இறை நம்பிக்கை நிறைந்திருந்த காலத்தில் இறைவன் தான் அனைத்தையும் படைத்தான் என்று நம்பப்பட்ட காலத்தில் தோன்றியதுதான் "இறைவன் என்று எவனும் இல்லை" இறைவனால் நாம் படைக்கபடவில்லை என்ற கருத்தும் . இவர்கள் இறைவன் இல்லை என்றுகூறுவதற்கு காரணம் அறிவியலும் அறிவியல் சார்ந்த தேடலும் அந்த தேடலில் கிடைக்கின்ற புதுப்புது பதில்களும் தான் காரணம் . அப்படி ஒரு தேடலில் தோன்றியதுதான் big bang theory ,steady state theory ,the cold bang theory ,eternal inflation theory ,mirror universe theory ,black hole theory ,big bounce theory இது  போன்ற பல  கோட்பாடுகள் உள்ளன . ஆனால் மேலே கூறப்பட்டுள்ள இந்த கோட்டபாடுகளில் இன்று பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு தான் அண்ட பெரு வெடிப்பு கோட்பாடு  அதாவது ஆங்கிலத்தில் (big bang theory) என்று அழைக்கப்படும் இந்த கொள்கை தான் இன்று பரவலாக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


பெரு வெடிப்பு கொள்கை 

 அண்ட பெரு வெடிப்பு கொள்கை என்பது இந்த அண்டம் எப்படி தோன்றியது என்பதை பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு ஆகும் . பெரு வெடிப்பின் கோட்பாடுகளின் படி ஆரம்பக்காலத்தில் இருள் மட்டுமே இருந்தது  12 முதல் 14 பில்லியன்  ஆண்டுகளுக்கு முன்னாள் மிக அடர்த்தி உடன் கூடிய சிறிய அளவிலான எதோ ஒரு பொருள் மிக பெரிய ஆற்றலோடு வெடித்ததன்  காரணமாக மிக பெரிய  இந்த பெரு வெடிப்பு நிகழ்ந்தது.இந்த பெரு வெடிப்பில் ஏற்பட்ட தீ பிழம்பால் இன்று அறியப்படாத எதோ ஒரு காரணத்தால் இந்த பிரபஞ்சம் வேகமாக விரிவடைய தொடங்கிற்று.இப்படி பெருவெடிப்பு நிகழ்ந்த தருணமே காலமும் (time),வெளியும் (space ) தோன்றியது . அடுத்த கணமே ஈர்ப்பு விசை தோன்றியது .ஈர்ப்பு விசை தோன்றிய பின்பு அணுத்துகளைகளை உருவாக்க கூடிய " குவார்க்குகள்  " தோன்றின . குவர்க்குகளை கொண்டு உருவான அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டதால் புரோட்டானும் , நியூட்ரானும் தோன்றின.பெரு வெடிப்பு நிகழ்த்து மூன்றவது நிமிடம் புரோட்டானும், நியூட்ரானும் தம்முடைய வெப்பத்தை தனித்ததால் இரண்டும் சேர்ந்து அணு கருவை மட்டும் கொண்ட ஹைட்ரஜனும் ,ஹீலியமும், இலித்தியமும் உருவாகின .அதன் பிறகு 5 லட்சம் ஆண்டுகள் கழித்து எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால்   சிறைபிடிக்கப்பட்டு  அணுத்துகள் தோன்றின.அதன் பிற்பாடு 30 கோடி ஆண்டுகள் கழித்தே வின்மீன்களும்,விண்மீன் பேரடைகளும் உருவாகின. 

 


இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த பின்னரே நமது சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின . இவை தோற்றம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை ஏறத்தாழ 500 கோடி ஆண்டுகள் அக்கிருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர் .  

பிரபஞ்சம் 

  அண்டம் அல்லது பிரபஞ்சம் என்பது பரவெளி ,நேரம் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களான கோள்கள் ,விண்மீன்கள் ,விண்மீன் திரள்கள்கல்,பாறைகள் என அனைத்து வகையான பெட்களையும் மற்றும் ஆற்றல்களையும் உள்ளடக்கியது தான் பிரபஞ்சம் . நாம் இந்த பிரபஞ்சமானது  எண்ணிலடங்காத  அளவிலான நட்சத்திரங்களையும் ,கிரங்களையும் கொண்டுள்ளது .

பூமியின் தோற்றம் 



இன்று நாம் வாழும் இந்த பூமி 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் சூரிய படலத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு சிறு  பகுதிதான் இந்த பூமி. ஆரம்பகாலத்தில் இந்த பூமி நெருப்பு குழம்பாய் இருந்தது .அதிலிருந்து வெளிப்பட்ட வாயுக்கள் ரசாயனம் கலந்த வாயுக்களாகவே இருந்தது . பூமி பந்து உருவாக்கிக்கொண்டு இருந்தபோது அதன் அருகில் இருந்த சிறுகோள்களையும் ,பெரும் பாறைகளையும் தன்னுள் ஈர்த்து கொண்டது .தன்னை சுற்றி உள்ள தூசுகள் ,பாறைகள் சிறு கோள்கள் என அனைத்தையும்  தன்னுள் ஈர்த்து கொண்டது  பூமி .இப்படி தன்னை சுற்றி உள்ள அணைத்து பொருட்களையும் தன்னுள் ஈர்த்து  கொண்டதால் தான்  பூமி அளவில் புதன் மற்றும் வெள்ளி கிரகத்தை விட பெரிதாக  உள்ளது       

 பூமி உருவாகும்போது அதனை சுற்றியுள்ள பாறைகளை பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் அப்படி ஈர்க்கப்பட்ட பாறைகள் பூமியையை நோக்கி வந்து பூமியில் விழும்  அப்படி பூமியில் விழும்  பாறைகள்  அணைத்து வெறும் பாறைகளாக மட்டும் இல்லாமல்  பலதரப்பட்ட தனிமைகளையும்   கொண்டவந்து பூமியில் சேர்த்து இன்று பயன்படுத்து அணைத்து  விதமான தனிமங்களுக்கும் எதோ ஒரு விண்கல் மூலம் பூமிக்கி கொண்டுவரப்பட்டதுதான்  .இப்படி  தான் பூமிக்கு உயிர்கள் தோன்ற காரணமாக இருந்த நீரும் பூமிக்கு வந்தது .

நீரின் தோற்றம் 



நீர் என்பது  H2O வேதியல்  வாய்ப்பட்டால் விவரிக்கப்படும் ஒரு  வேதியல் சேர்மமாகும் .நீரானது நிறம்மற்று மனமற்று  ஒளி புகும் தன்மை கொண்டது .பூமியில் உள்ள ஓடைகள் ,ஆறுகள்,ஏரிகள் ,குளங்கள் ,குட்டைகள் ,கடல்கள் என அனைத்தும் நீரால் நிரப்பப்பட்டவை .மேலும் பூமியில் வாழும்  உயிர்நிகளின் அணைத்திலும்  நீரானது நீர்ம வடிவில் காணப்படுகிறது .இந்த திரவ நிலையில் நீராகவும் ,திட நிலையில் பனிக்கட்டியாகவும் ,வாயு நிலையில் நீராவியாகவும்  தன்னை மாற்றி கொள்ளும் பண்புடையது இந்த நீர் .  பூமி தோன்றிய கலகட்டத்தில் தன்னை சுற்றி உள்ள பொருட்களை பூமி  தன்னுள்  ஈர்த்துக்கொண்டது  அப்படி  பூமியால் ஈர்க்கப்பட்டு  பூமியில் வந்து விழுந்த பல பாறைகளில் பனிப்பாறைகளும் உண்டு .இப்படி பூமியில் வந்து விழுந்த பனிப்பாறைகள்  பூமியின் அதீத வெப்பத்தால் பனிப்பாறைகள் உருக்கப்பட்டு  ஆவியாக்கப்பட்டு மேகங்களாக  உருவெடுக்க  தொடங்கின   இந்த நிகழ்வு பல கோடி ஆண்டுகளாக நிகழ்ந்ததால் தான்  பூமியில் நீர் தோன்றியது"நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவன் சொல்லிற்கேற்ப  பூமியில்  உயிர்கள் தோன்ற மிக முக்கிய  காரணமாக  அமைந்தது இந்த நீர் தான் .


செவ்வாய், 26 டிசம்பர், 2023

                                        

கல்வி ஒரு அறிமுகம்                                     

 கல்வி என்பது எங்கு எப்போது  தோன்றியது என்றால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்திலியே கல்வியும் தோன்றிவிட்டது.கல்வியின் தோற்றம் என்பது இந்த பூமியில் உயிர்கள் தங்கள் உயிர்களை காத்துக்கொள்ள இயற்கையகவே இயற்கையால் உருவாக்கப்பட்டதுதான் கல்வி.ஒரு உயிர்க்கு  இயற்கை பேரிடராலோ, அல்லது மற்ற உயிரங்களாலோ பாதிப்பு ஏற்படும்போது அதன் உயிரை எப்படி காத்துக்கொள்வது என்ற புள்ளியிலிருந்து அனுபவம் சார்ந்த கல்வி அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.இந்த அனுபவம் சார்ந்த கல்வி இல்லை என்றால் இன்று இந்த பூமியில் எந்த உயிர்களும் இருந்திருக்காது.

ஒரு உயிரின் பரிணாம மாற்றத்திற்கு இந்த அனுபவ சார்ந்த கல்வியானது எப்படி செயல்படுகிறது என்றால் ஒருஉயிரானது  இயற்கை விபத்தில் சிக்கி உயிர் பிழைக்கும் போது ஒரு புது  விடையத்தை கற்று மறுபடி அதேபோல் ஒரு நிகழ்வு நடந்தால் எப்படி சமாளிப்பது என்ற  அறிவை பெறுகிறது அந்த அறிவை அது அடுத்த தலைமுறைக்கும் கற்று கற்றுக்கொடுக்கிறது.அதிலும் சில விடயங்கள் மரபணுநினைவகத்தில் அதாவது (genetic memory) இல் இயற்கையாகவே பதியவைக்கபடுகிறது .இதனை மரபணு நினைவாற்றல் என்று கூறுவார்கள்.ஒரு அனுபவம் சார்ந்த அறிவு எப்படி ஒரு உயிரினத்தின் மரபணு மூலம் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் சில கோடி வருடங்களுக்கு முன்னாள் டைனோஸரஸ் என்ற உயிரினம் இந்த பூமியில் வாழ்ந்தது நமக்கு தெரியும். அதனுடைய பரிணாம வளர்ச்சி தான் இன்று பூமியில் வாழும் பறவை இனம் என்றால் நம்ப முடிகிறதா.இந்த  மிக பெரிய மாற்றத்திற்கு காரணமே அனுபவம் சார்ந்த  கல்வியும் அதனால் ஏற்பட்ட மரபணு மாற்றமும் தான் காரணம்.


 கல்வியானது மனிதர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல.கல்வி அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று.இந்த அனுபவம் சார்ந்த கல்வி அறிவால்தான் இன்று பூமியில் வாழும் உயிரினங்கள் நிலைத்து வாழுகின்றன.இந்த அனுபவம் சார்ந்த கல்வி அறிவுதான் வேட்டை விலங்குகளின் வேட்டை தன்மையை மேம்படுத்தி அதற்கான உடலமைப்பு போன்றவற்றை மேற்படுத்தியுள்ளது.அதே போல் வேட்டை விலங்குகளிடம் இருந்து தங்கள் உயிரை காத்து கொள்ளவும் சில விலங்குகள் அதற்கேற்ப அதன் அனுபவம் சார்ந்த கல்வியையே பயன்படுத்தி இந்த பரிணாம வளர்சியில் தன்னை தானே மேப்படுத்தி இன்னும் உயிர் வாழுகின்றது.இந்த பூமியில் வாழும் அணைத்து உயிர்களுக்கும் எதோ ஒரு விதத்தில தற்காப்பிற்கு தனிப்பட்ட முறையில் அதனதன் உடலில் இயற்கையாகவே  ஆயுதமோ அல்லது மற்ற திறமிக்க தனிப்பட்ட ஒரு விசேஷ சக்தி ஒன்று இருக்கும்.அனால் மனிதனுக்கு அதுபோல் எதுவும் இல்லை. அவனுக்கு இருந்தது மேம்பட்ட சிந்திக்கும் ஆற்றல் மட்டும் தான்.
 
அனுபவம் சார்ந்த கல்வி எப்படி  செயல்படுகிறது என்றால் இயற்கையால் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் ஒன்று மற்றொன்றை சார்ந்துள்ளது .ஒரு சிங்கமானது அதன் பசிக்கு ஒரு விலங்கை வேட்டையாடும் போது அதனை பார்க்கும் மத்த மிருகங்கள் அனுபவரிதியாக சிங்கம் என்றால் உயிர்களை கொன்று உணவாக உட்கொள்ளும் ஒரு வேட்டை பிராணி என்று பார்த்து தெரிந்து கொண்டு அதனை அதன் அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுக்கிறது.

இன்னும் சொல்ல போனால் மனிதனுக்கு  சிந்திக்கும் திறன் எப்போது தொடங்கியது என்றால்  அவன் உணவை எப்போது  சமைத்து உட்கொள்ள தொடங்கினானோ அதிலிருந்துதான் மனிதனின் சிந்திக்கும் திறன் வந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.இப்படி மாமிசத்தை நெருப்பு மூட்டி சமைத்து சாப்பிட மனிதனுக்கு  கற்று கொடுத்ததே இயற்கை தான்.இதே இயற்கைதான் மனிதனுக்கு நெருப்பை உருவாக்கவும் கற்றுக்கொடுத்தது.


நெருப்பை உருவாக்க தொடங்கிய மனிதன் அதை எப்படி உருவாக்குவது என்பதில் தொடங்கி இன்று பூமியில் முதல்  விண்வெளி வரை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு மனிதன் முன்னேறிருக்க காரணம்  இந்த அனுபுவம் சார்ந்த கல்விதான் காரணம்  . பூமியில் வாழும் அணைத்து உயிர்களும் சிந்திக்கும் திறன் படைத்ததுதான் ஆனால் மனிதர்கள் மட்டும் அறிவு வளற்சியில் முதன்மையானவர்களாக திகழ காரணம் மனிதர்கள்  கூட்டமாக வாழக்கூடியவர்கள்.இப்படி கூட்டமாக வாழ்வதன் மூலம்  தங்கள் அனுபவ அறிவை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளமுடிந்தது.இந்த பரிமாற்றம் தான் மனிதர்களை இன்றளவும் அறிவில் முன்னோடியா இயற்கை வைத்திருக்கிறது .

இன்று மனிதர்கள் பையிலும் கல்வியில் பல பிரிவுகள் உள்ளது.1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை அனைவருக்கும் தமிழ் ,ஆங்கிலம் ,கணிதம் , அறிவியல் ,சமுக அறிவியல் மற்றும் விளையாட்டு என்ற பொதுவான ஒரு படப்பிரிவுதான் இருக்கும்.10ம் வகுப்புக்கு பின் 11மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுவான பாடப்பிரிவிகள் இல்லாமல் உயர்நிலை கல்வி வழங்கும்  நோக்கத்தில் முக்கியம் என்று ஒரு சில பாடத்தை தேர்ந்தெடுத்து அவற்றை தனித்தனி பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.இங்கு நாம் தேர்தெடுக்கும் பிரிவை பொறுத்துதான் நமது கல்லூரி கல்வி அமையும் இது தான் இன்று நாம் பின்பற்றும் கல்வி முறை ஆகும்.

இன்று நாம் கற்கும் இந்த கல்வி முறை எப்படி வந்தது என்று யாராவது எண்ணியது உண்டா ஒரு இயந்திர பொறியியல் அதாவது (mechanical  engineering) என்ற ஒரு பாடத்தை எடுத்து கொள்வோம் இந்த இயந்திர பொறியியல் பாடம் என்பது எப்படி தோன்றியது இயந்திரங்கள் கண்டுபிடித்த பின்புதான் இயந்திரவியல் என்ற ஒருபாடப்பிரிவை நாம் இன்று கல்லுரியில் பயிலுகிறோம் அப்போது இயந்திரங்கள் கண்டுபிடிக்காதபோது இயந்திரவியல் என்ற ஒரு பாட பிரிவு இருந்திருக்குமா        

                                                                                     by 
                                                                                    Raj 
 


 
  

 

 

 
 

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

இம்சை அரசன் 1ம் புலிகேசி 2

                   இம்சை அரசன் 1ம் புலிகேசி (2) 

பேருரை நோக்கி நடக்க ஆரமிச்சி தவுடுக்கு பசி எடுக்க ஆரமிச்சது. உடனே எங்கட உட்காந்து சாப்பிடறது யோசிக்கிட்டே கொஞ்ச தூரம் நடந்தான் தவுடு.கொஞ்ச தூரம் போன தவுடு ஒரு ஆத்தங்கரையை பாக்குற உடனே ஆத்தங்கரையை நோக்கி வேகமாக நடந்து போனான்.அங்க போய் பாத்த ராஜாவோட போருக்கு பயன்படுத்துர யானைங்க குதிரைங்க எல்லாத்தையும் படை வீரர்கள் குளிப்பாட்ட தவுடு அவன் கொண்டு வந்த சாப்பாட எடுத்து திறந்து வச்சிட்டு கை,கால் கழுவ ஆத்துல இறங்குன தவுடு அந்த நேரம் பாத்து பக்கத்துல இருந்த யானை ஒன்னு தவுடு திறந்து வச்ச சாப்பாட சாப்பிட கை கால் கழுவ போன தவுட கொஞ்ச நேரம் கழிச்சி வந்து பாத்த அவன் திறந்த வச்ச சாப்பாட்டை காணும் என்னடானு பாத்த இவன் சாப்டா வச்சிருந்த சாப்பாட பக்கத்துல இருந்த யானை சாப்பிட இத பாத்த தவுடுக்கு ஒரே கோவம் வேகமா அது கிட்ட போய் எப்படி என்னோட சாப்பாட நீ சாப்பிடலாம் ஒரு குத்து குத்துனா தவுடு குத்துன உடனே யானை பொத்துனு கீழ விழ அங்கிருந்த படைவீரன் ஒருத்தன் படை தளபதிகிட்ட போய் சொல்ல யானை குத்துன விஷயம் ஊர் முழுக்க பரவ உடனே தளபதியும் இந்த விஷயத்தை மன்னர்கிட்ட சொன்ன தளபதி.உடனே மன்னரும் அவனை கைது பன்ன சொல்லி உத்தரவு போட தவுட கைது செஞ்சி அரண்மனை கொண்டு போனாங்க.
 
வழக்கை விசாரிக்க மன்னர் வந்தார் மக்களும் கூடியிருந்தாங்க.தவுடு விசாரணை செய்ற இடத்துக்கு கொண்டுவரபட்டா.வழக்கை விசாரிக்க தொடங்கிய மன்னர் என்ன நடந்தது என்று கேட்க அதற்கு யானை குளிப்பாட்டுன வீரன் மன்னா இவ வந்து யானையை ஒரு குத்து குத்துனா யானை பொத்து கீழ விழுந்து செத்துப்போச்சி சொன்ன படைவீரன்.
 

உடனே மன்னர் தவுடை பார்த்து என்ன நடந்தது என்று கேட்டார் அதற்கு தவுடு மன்னா நா இந்த மாதரி சந்தைக்கு வந்த வந்து வேலைய முடிசிட்டு வீட்டுக்கு கெளம்பி போய்கிட்டிருந்த போகும்போது பசி தாங்க முடியாம சாப்பிடலாம்னு ஆத்துல இறங்கி சாப்பாட பிரிச்சி வச்சிட்டு
கை கால் கழுவ ஆத்துல இறங்கி கழுவிட்டு வந்து பார்த்த என்னோட சாப்பாடு எல்லாத்தையும் யானை சாப்டறிச்சி அதா கோவம் தாங்க முடியாம எப்படி என்னோட சாப்பாட நீ சாப்பிடலாம்னு ஒரு சும்மா தா குத்துன்னு யானை கிழ விழுந்திரிச்சி  என்று பயந்து கொண்டே சொன்னா  தவுடு.இத கேட்டு மன்னருக்கு ஒரே ஆச்சிரியம் எப்படி ஒரே குத்துல யானையை கொன்றுபா என்று எண்ணிக்கொண்டே சரி  இப்படி ஒரு வீரன்தான் எனக்கு வேணும் இந்த வீரனை நம்மளோட படையில சேத்துருங்க தளபதினு மன்னர் சொல்ல தளபதியும் சரினு சொல்லி படையில சேத்துக்கிட்டாரு . ஒரு நாள் மன்னர் தளபதியை கூப்பிட்டு நம்ம ஆட்டு பண்ணையில கொஞ்ச நாளா ஆடுங்க திருடு போகுது அத கண்டுபுடிக்க நல்ல வீரர்கள ஆட்டு மந்தைக்கு காவல் போடுங்க தளபதினு மன்னர் உத்தரவு போட்டாரு உடனே தளபதியும் சரினு சொல்ல அன்னைக்கு இரவு காவலுக்கு சில முக்கியமான வீரர்களை காவலுக்கு போட்டாரு தளபதி அந்த காவல்காக்கும் வீரர்கள் கூட்டத்துல தவுடு ஒரு ஆளு.தவுடுக்கு என்ன பண்றதுனு ஒன்னும் புரியல.
 
அந்த யானையை சும்மா தா குத்துன்னு அது எப்படி செத்துச்சுனு தெரியல இவங்க வேர இதுதான் சாக்குன்னு என்ன வேர ராணுவத்துல சேத்துப்புட்டாங்க எனக்கு சண்டையும் போட தெரியாது இன்னைக்கு எப்டியாச்சம் இங்க இருந்து தப்பிச்சி ஓடிடனும்முனு முடிவு பன்னி காவலுக்கு நின்ன தவுடு. அவ நெனச்சது போல நடுராத்திரி காவலுக்கு இருந்தவங்கள நல்லா தூங்க இதுதான் சரியான நேரம் இங்கிருந்து தப்பிக்கனு முடிவு பண்ணி மந்தையை விட்டு வெளிய போக அந்த நேரம் டக்குனு ஒரு யோசனை தவுடு  மண்டையில நம்ம சும்மா போறதுக்கு பதிலா போகும்போது ஒரு நல்ல ஆடா பாத்து தூக்கிட்டு போய்டலாம்னு முடிவு செஞ்சி ஆட்டு மந்தைக்குல போன தவுடு அந்த இருட்டுல ஆடு மாதரி குணிஜிக்கிட்டு ஒவொரு ஆடா தடவி பாக்க எந்த ஆடும் பெருசா இல்ல டக்குனு அவனோட கை ஒரு ஆடு மேல பட்டது.நல்ல பெருசா இருந்துது சரி தூக்கிட வேண்டியதுதான் முடிவு பண்ணி அந்த ஆட தூக்கி தோளுல வைக்கவும் பக்கத்துல இருந்த ஆடுங்க எல்லாம் சத்தம் போட சத்தம் கேட்டு ஒரு காவலாளி மட்டும் எழுந்து பாக்க ஒரு உருவம் ஆட தூக்கிட்டு போறத பாத்துட்டு  திருடன் திருடனு கத்த மத்த காவலாளிகளும் எழுந்து ஓடி போய் திருடனை புடிச்சி அரண்மனைக்கு கொண்டு போக அரசரும் எழுந்து வந்து திருடனை பார்த்து ஒரு நிமிஷம் அதிரிச்சி ஆயிட்டாரு உடனே யானையை கொன்ற வீரன் நீயா என்று கேட்க உடனே பக்கத்துல இருந்த சி காவலாளிகள ஒருத்த மன்னா கொஞ்சம் மேலே பாருங்கனு சொல்லி தீ  பந்தத்தை காட்ட மன்னர்க்கு இனொரு அதிர்ச்சி என்ன தவுடு ஆட்டு மந்தையில தூக்குனது ஆடு இல்ல இதனை நாளா அங்க இருந்த ஆடுகளை வேட்டையடிக்கிட்டு இருந்த புலி.அந்த புலியை பார்த்ததும் மன்னர் ஒரு நிமிடம் பயந்து போய் தவுட பார்த்து நீ பலே ஆளுதாயானு பாராட்ட தவுடுக்கு ஒன்னும் புரியல என்னது அப்ப நா தூக்குனது ஆடு  இல்லையா இது புலியா என்று அழுகை கலந்த சிரிப்போடு சிரிக்க தவுடக்கு ராணுவத்துல பதவி உயர்வு கெடச்சிது.தவுடுக்கு ஒன்னுமே புரியல நம்ம ஒன்னு நெனச்ச அது ஒன்னு நடக்குதுனு நெனசிகிட்டே எப்டியச்சம் இங்க இருந்து தப்பிச்சி ஓடிடனும் னு முடிவுல இருந்தா தவுடு.இப்டியே ஒரு வருஷம் ஓடிப்போச்சி.
 
திடீர்னு ஒரு நாள் பக்கத்துக்கு நாட்டு அரசன் போர்தொடுத்து வர மன்னரும் அவரோட படைகளை திரட்டிக்கிட்டு போர் பூமிக்கு போனாரு.இரண்டு நாட்டு படைகளும் சண்டைக்கு தயாரா இருந்தாங்க.அந்த நேரம் பாத்து தவுடு வந்து மன்னா இந்த போர்ல முதல் வீரனா நா போறன் என்னை ஒரு குதிரைல கீழ விழாத அளவுக்கு கட்டி குதிரைக்கு பின்னால ஒரு சூடு போடுங்க மத்தத நா பாத்துக்குறனு உடனே அரசரும் ஏன் கூட கேட்காம தவுடு சொன்ன மாதரி செய்ய குதிரை வலி தாங்க முடியாம வேகமா எதிரி நாட்டு படைகளை நோக்கி வேகமா ஓட தவுடுக்கு ஒரு பதற்றம் குதிரைக்கு சூடு வச்ச வேகத்துக்கு வேற எங்கியாவது ஓடுன்னு பார்த்த இது என்ன எதிரி படைக்கிட்டே போகுதே புலம்ப குதிரையோ வலி தாங்க முடியாம வேகமா ஓட அந்த நேரம் பார்த்து ஒரு வீனா போன பனைமரம் மேல இருந்த கீழ வரைக்கு உள்ளாரா பொந்து அடிச்சி போய் காத்துல எப்ப வேணும்னாலும் கிழே விழுந்திரலாம் போலனு இருந்த பனைமரத்தை தவுடு புடிக்க பனைமரம் அடியோடு பேத்துக்கிட்டு வர எதிரி நாட்டு படைவீரர்கள் எல்லாம் டேய் யாருடா இவன் பனைமரத்தையே புடிங்கிகிட்டு வரணு பயந்து ஓட பயந்து ஓடுன படைகளை ஓடஓட விரட்டி போர்ல வெற்றியை கைப்பற்றுனாங்க தவுடும் அவனோட படைகளும்.
 
போர்ல வெற்றியை  வாங்கி குடுத்தது நீதான் தவுடுனு தவுட பாராட்டி தவுடுக்கு மன்னரோட 3 பொண்ணுகளை கட்டி கொடுத்து தவுட  நாட்டோட அரசனா நியமிக்க தவிடும் நாட்டின் அரசான ஆனா.தவுடோட மூத்த பொண்டாட்டி ரெண்டு பேரும் அவங்க கிராமத்துல இருந்தாங்க ஆனா தவுடு அரண்மையில சநதோஷமா இருந்தான்.
 
சோம்பேறி தனத்தால வயலுல சரியா பயிர் செய்யாம வேலை செய்யாம சோம்பேறி தனத்தால வந்த வறுமையை போக்க மாடு விக்க பட்டணத்துக்கு போய் ராஜாவன கதை       
 
       

                                                                 

சனி, 16 டிசம்பர், 2023

இம்சை அரசன் 1ம் புலிக்கேசி

                     இம்சை அரசன் 1ம் புலிக்கேசி (1) 

 
 

முன்னொரு காலத்துல  பேரூர்னு  ஒரு அழகான கிராமம் இருந்தது.அந்த கிராமத்தை சுத்தி எங்கு பார்த்தாலும் நீரோடைகளும்,ஆறுகளும்,ஏரிகளும் நிறைந்து காணப்பட்டது.



 அந்த கிராமத்துல இருந்த ஒரு விவசாயி இருந்தாரு அவரு பேரு முனியாண்டி.அந்த முனியாண்டிக்கு கல்யாணம் பண்ற வயசுல ஒரு மகன் இருந்தான் அவன் பேரு தவுட்டுக்கல்லை.இந்த தவுட்டுக்கல்லை ரொம்ப சோபேரிதனமான ஒரு ஆளு.ஒரு நாள் தவுட்டுக்கல்லை அப்பா முனியாண்டிக்கு உடம்பு சரி இல்லாம போயிடுது உடனே முனியாண்டி தன்னோட பையனை நெனச்சி வருத்தப்பட தொடங்கினரு.முனியாண்டிய பாக்க ஊர் மக்கள் எல்லோரும் முனியாண்டியை பாத்து உன்னோட காலம் அவ்ளோதா.நீ போனதுக்கு அப்பறம் உன்னோட புள்ளைய பாத்துக்க யாரும் இல்ல.அதனால அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிருனு சொல்லிட்டு போக உடனே முனியாண்டியும் தவுட்டுக்கல்லைக்கு பொண்ணு பாக்க ஆரமிச்சாங்க.
எங்கு தேடியும் சரியா வரன் அமையல.மகனுக்கு எங்கு தேடியும் பொண்ணு கெடைக்கலனு ஆழ்ந்த சோகத்துல இருந்தாரு முனியாண்டி.
 
ஒரு நாள் முனியாண்டிக்கு ஒரு தரகர் ஒருத்தரு ஆத்துக்கு அக்கரைல ஒரு கிரமம் இருக்கு அங்க போன உன்னோட பையனுக்கு பொண்ணு கேடிக்கும்னு சொல்ல உடனே முனியாண்டியும் அவரோட பையன் தவுட்டுக்கல்லையும் பொண்ணு பாக்க அந்த கிராமத்துக்கு கெளம்புனாங்க.
முனியாண்டியோட சொந்தக்காரங்க கொஞ்சபேரு  கிராமமக்கள் கொஞ்சப் பேருனு ஒரு கூட்டமே கெளம்பி வண்டி கட்டிக்கிட்டு போனாங்க.  

பொண்ணு பாக்க போன இடத்துல பொண்ணோட அப்பா எனக்கு ரெண்டு பொண்ணு.பொண்ணுக்கு அம்மா இல்ல.அதுங்க ரெண்டு ரெட்டை புள்ளைங்க அதுங்க பொறந்து கொஞ்ச நாளிலே அவங்க அம்மா செத்துபோச்சி.பொறந்ததுல இருந்து இரண்டு பேரு பிரிஞ்சி இருந்ததே இல்ல.அதனால என்னோட ரெண்டு பொன்னையும் உங்க பயனுக்கே தரேன்னு சொல்லிட்டாரு பொண்ணோட அப்பா.இத கேட்ட முனியாண்டிக்கு ஒரே மகிழ்ச்சி சரினு முனியாண்டியும் ஒத்துக்கிட்டாரு .உடனே திருமண வேலைகள் நடக்க தொடங்கி எல்லா வேலைகளும் ஒரு மாசத்துல முடிஞ்சிடிச்சி கல்யாண  நாளும் வந்துச்சி .
 



 கல்யாண நாள் அன்னைக்கு தவுட்டுக்கல்லைக்கும் அங்கவை மற்றும் சங்கவை என்ற இரட்டையருக்கும் கல்யாணம் நடந்துச்சு  கல்யாணத்துக்கு வந்த ஊர் மக்கள் எல்லோரும் தவுட்டுக்கல்லைக்கு எங்கியோ மச்சம் இருக்குடா பாரே ஒரே மேடைல அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்கும் தாலிகட்டுற பாரன் ம்ம்ம் என்று முதலிரவுல எப்படி ட என்றும் ஆளாளுக்கு பேசிக்கொள்ள இங்கு கல்யாணம் முடிஞ்சி எல்லோரும் வீட்டுக்கு புறப்பட்டாங்க.கல்யாணம் முடிஞ்ச கையோட முதலிரவுக்கு நேரம் குறிக்க சொல்லி ஜோசியரிடம் கேட்டாரு முனியாண்டி.ஜோசியரும் ஒரு நல்ல நேரத்தை குறிச்சி கொடுத்தாரு.அதன் படி தவுட்டுக்கல்லைக்கு திருமண வாழ்க்கையை அமைச்சு கொடுத்த கொஞ்ச நாளிலே முனியாண்டியும் செத்துபோய்ட்டாரு. இப்ப வீட்ல தவுட்டுக்கல்லையும் அவனோட ரெண்டு பொண்டாட்டியும் தான்.வாழ்கை பொறுப்பு முழுசா தவுடு தலைல.

கொஞ்ச நாள் கழிச்சி தவுடு ஒரு நாள் நா  வயலுக்கு போரனு அவோனோட ரெண்டு பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு ஏர்கலப்பை தூக்கி தோளுல  வசிக்கிட்டு ரெண்டு வண்டி மாடையும் புடிச்சிகிட்டு  வயலுக்கு போன தவுடு.வயலுக்கு போன தவுடு ரெண்டு மாடையும் ஒரு  அரசமரத்தடியில கட்டிட்டு படுத்து தூங்க ஆரம்பிச்சான் பகல் ஒரு மணிக்கு எழுந்து சாப்டுட்டு திரும்பவும் படுத்து தூங்கி சூரியன் மறையும் போது எழுந்து  ரெண்டு மாடையும் ஓடிக்கிட்டு போய் சேத்துல இறக்கி மாடு மேல கலப்பை மேலலா  சேரு பூசிக்கிட்டு வேல செஞ்ச மாதரி வீட்டுக்கு போவா.இத பார்த்த அவோனோட ரெண்டு பொண்டாட்டியும் அயோ புருஷன் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வராருனு தவுடுக்கு சுடு தண்ணி வச்சி குளிப்பாட்ட மீன்,கறினு விதவிதமா சமைச்சி போட்டாங்க தலைவன் தவுடு நல்ல சாப்பிட்டான்.இப்டியே ரொம்ப நாள் போச்சி வயலுல பயிர்களா நல்ல வளந்து அறுவடைக்கு  வந்த நேரம்.தவுடோட ரெண்டு மனைவியும் தவுடு கிட்ட போய் ஏங்க எல்லோரும் வயலுக்கு நெல் அறுக்க போறாங்க.நீங்களும் ரொம்ப கஷ்டபட்டுடிங்க அதனால நம்ம வயல் எங்க இருக்குனு சொன்ன நாங்க ரெண்டு பேரும் போய் நெல்ல அறுக்குறோம் சொல்ல தவுடுக்கு மனசுக்குள்ள ஒரே பயம்.ஏன்னா தவுடு வயலுல பராமரிப்பு இல்லாம எதுவுமே வெளையாம வெறும் கோரா புள்ளவும் அங்கங்க கொஞ்ச நெல்லுமா இருந்துச்சி அதனால  பயந்துகிட்டு அவோனோட வயலை சொல்றதுக்கு பதிலா பக்கத்துல வேறொருதொரட வயலுக்கு வழி சொன்ன தவுடு 

உடனே தவுடு இங்கிருந்து நேரா போன ஒரு முருகன் கோவில் வரும் அங்க இருந்து கிழக்கு பக்கமா கொஞ்ச தூரம் போன ஒரு அரச மரம் வரும் அந்த அரச மரத்துக்கு பக்கதுல ஒரு வாய்க்கால் ஒன்னு போகும் அந்த வாய்கால் பக்கத்துல வண்டி பாத ஒன்னு போகும் அது மேலே போன பணத்தோப்பு வரும் அதுகிட்ட ஒரு அரச மரம் வரும் அந்த அரச மரத்துக்கிட்ட ஒரு வயல் இருக்கும் அந்த வயலுல ஒன்னுமே வெலையாம வெறும் கோரா புள்ள இருக்கும் அது நம்ம வயல் இல்ல அதுக்கு பக்கத்துல ஒரு வயல் நல்ல ஆள் உயரத்துக்கு நெல் வெளஞ்சி இருக்கும் அந்த வயல்தா நம்பளோடது னு சொல்ல உடனே அங்கவையும் சங்கவையும் கோணி,அருவாள எடுத்துக்கிட்டு தவுடு சொன்ன அந்த இடத்துக்கு போய் நெல் பயிறுகளை அறுக்க.அந்த வயலோட சொந்தக்காரர் நெல் அறுக்க ஊரு முழுக்க ஆள் தேடியும் யாரும் கிடைக்காம சோகத்துல வயலுக்கு போனாரு.


 வயலுக்குசொந்தக்காரர் போனவருக்கு ஒரே ஆச்சிரியம் நம்ம ஊரு முழுக்க ஆள் தேடியும் யாருமே கிடைக்கல ஆனா இங்க ரெண்டு பொண்ணுங்க நெல்ல அறுத்து வசிருக்காங்களே போய் விசாரிப்போம் அப்டினு போய் யாரு மா நீங்க என்னோட வயலுல  பண்றிங்க அப்டினு கேட்டாரு வயலோட சொந்தக்காரர் கேட்க அதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்களும் நாங்க ரெண்டு பேரும் தவுட்டுகளையோட பொண்டாட்டி அவருதா போய் இந்தமாதிரி நம்மக்கு அந்த இடத்துல ஒரு வயல் இருக்கு நீங்க ரெண்டு பெரும் அங்க போய்  நெல்லு அறுத்துவைங்க நா வரணு  சொன்னாரு அப்டினு சொன்னாங்க தவுடோட பொண்டாட்டி ரெண்டு பேரும்.இத கேட்டு அதிர்சி  அடைந்த வயலோட சொந்தக்காரர் இந்தம்மா நீ வந்ததுலா  சரிதான்  ஆனா தவுடோட தோ இருக்கு பாரு அதா அவோனோட வயலை காண்பிச்சி நீங்க வேற ரொம்ப கஷ்டப்பட்டு நெல் அறுத்து வச்சிருக்கிங்க அதுக்கு இந்த மா கூலினு ஆளுக்கு ரெண்டு மூட்ட நெல்லு குடுத்தாரு அந்த வயலோட சொந்தக்காரர்.அந்த கூலியை வாங்கிட்டு போய் அவரு சொன்ன வயலை பார்த்த ஒரே கோர புல்லு மட்டும்தான் அது பாதர்தவுடனே அங்கவைக்கும் சங்கவைக்கும் சரியான கோவம்.இப்டி ஒருத்த கூட வாழ்ரத விட அவனை ஒரேயடியா கொன்றலனு தவுடோட ரெண்டு பொண்டாட்டியும் முடிவு பண்ணாங்க.
 
கொஞ்ச நாள் கழிச்சி தவுடு வீட்ல சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம் வந்துடிச்சி காரணம் தவுடோட சோம்பேறி தனம்தான்.சரி இதுக்கு அப்பறம் ரெண்டு வண்டி மாட வித்துடலாம்னு முடிவு பன்னி அவனோட ரெண்டு பொண்டாட்டிகிட்ட போய் நாளைக்கு காலைல நா ரெண்டு மாடையும் ஓடிக்கிட்டு பட்டணத்துக்கு போற அதற்கான ஏற்பட செய்ங்க சொன்னா தவுடு.இத கேட்ட தவுடோட ரெண்டு பொண்டாட்டியும் இதுதான் சரியான நேரம் இவன  கொலை  செய்ய முடிவு பண்ணி மறுநாள் காலையில எழுந்து தவுடுக்கு சாப்பாடு செய்ய அந்த சாப்பாட்ல விஷத்தை கலந்து குடுத்தாங்க தவுடோட ரெண்டு பொண்டாட்டியும்.


தவுடும் மாட்டு வண்டியில மாட பூட்டிஆக்கிவச்ச சோறு எடுத்துக்கிட்டு பட்டணத்துக்கு புறப்பட்ட தவுடு.
 
பட்டணத்துக்கு போன தவுடு பட்டணத்து பார்த்து ஒரே ஆச்சிரியம் .எங்க பார்த்தாலும் உயர உயரமனா கட்டிடடங்கள் கடைவீதிகள் லா  பார்த்து வியந்தான்.அப்போ அங்க வந்த ஒருத்தன் கிட்ட போய் ஐயா இங்க பெரிய சந்தை எங்க நடக்கும் அதுக்கு கொஞ்சம் வழி சொல்லுங்க னு கேட்ட தவுடு. உடனே பெரியவரும் என்ன தம்பி ஊருக்கு புதுசா எந்த ஊரு நீ கேட்டாரு .அதுக்கு தவுடு நா பேரூர் னு ஒரு கிராமத்துல இருந்து வரங்க சொல்ல அதுக்கு பெரியவரோ சந்தைக்கு என்ன விசியமா போறனு கேட்டாரு.அதற்கு நா இந்த மாடோட சேத்து இந்த வண்டியையும் விக்கபோறேன் கொஞ்சம் வழி சொல்லுக்கு ஐயான்னு கேட்டா தவுடு.உடனே அந்த பெரியவரும் சந்தைக்கு வழி காட்ட தவுடும் சந்தைக்கு போனான்.
 
சந்தைக்கு போன தவுடுக்கு ஒரே ஆச்சிரியம் விதவிதமான கடைகள் ,விதவிதமான மக்கள் கண்ட தவுடுக்கு ஒரே மகிழ்ச்சி.உடனே தவுடு வந்த வேலையை பாப்போம் என்று அந்த சந்தையில் மாடுகளை விக்குற இடத்துக்கு போய் அவங்களோடு நின்னுகிட்டு அவன் கொண்டுவந்திருந்த மாடையும்,மாட்டுவண்டியையும் சேத்து விக்க முயற்சி பண்ணுன.ஆனா யாருமே  வாங்க வரல.கொஞ்ச நேரம் கழிச்சி ஒருதத்தரு வந்து மாட்டையும் மாட்டுவண்டியையும் சேர்த்தே வாங்கிகிட்டு போக தவுடுக்கு  ஒரே கவலை என்ன பண்றது வேற வழி இல்லனு மாடையும் மாட்டுவண்டியையும் வித்த காச எடுத்துக்கிட்டு சோத்து மூடியையை தூக்கிகிட்டு பேருரை நோக்கி நடக்க ஆரம்பிச்சாரு  தவுடு.

                                                                                        BY
                                                                                     A.RAJ





 



 
 

சனி, 21 அக்டோபர், 2023

அதியன் (குமரி வீரன் )

                அதியன் (குமரி வீரன் ) பாகம் 1

13000 ஆண்டுகளுக்கு முன்பு  இரவு நேரம் அது நிலவு பிரகாசமாக அதன் ஒளியை பூமியின் ஒரு பக்கத்தில் வீசிக்கொண்டு இருந்த சமயம்.ஆங்காங்கே இரவு நேர வேட்டை விலங்குகள்  காடுகளில் "வழி தவறிய விலங்களையும்,பார்வைக்குன்றிய விலங்குளையும்" குறிவைத்து வேட்டையாட காத்திருந்த நேரம் அது.

திடிரென ஒரு இடி சத்தம் வானில் எங்கிருந்தோ ஒலித்தது இதை கேட்ட ஒட்டுமொத்த உயிர்களும் ஒரு நிமிடம் பயந்து வின்னை உற்றநோக்கின. கார்மேகங்கள் மெதுமெதுவாக நிலவின் வெளிச்சத்தை மூடிக்கொண்டே வந்து கடைசியில் முழு நிலவையும் மூடிக்கொண்டது. அதனால் அங்கு இருந்த மொத்த நிலப்பரவும் இருளில் மூழ்கியது .

விண்ணில் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உராய தொடங்கின.அதன் விளைவாய்  ஏற்பட்ட மின்சாரம் மிகுந்த வெளிசத்தோடும் இடி முழக்கத்தோடும் அங்கிருந்த உயிர்களை நடுங்க வைத்தது இயற்கை.கார்மேகங்கள் மழை துளிகளை பொழிய தொடங்கியது.காடுகளில் மரத்தில் இருந்த வௌவல்கள் ஒரு திசையை உற்றுநோக்கி கொண்டே இருந்தன.

மனிதர்கள் சிலர்  தீ பந்தகளோடு அவர்களுக்குள் பேசிக்கொண்டே காடுகளில் சில மூலிகை பொருட்களை தேடி கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் ஒரு செடியை உற்றுநோக்கியவாறு அதன் அருகில் சென்று தீ பந்தத்தை  அந்த செடியின் அருகில் கொண்டு சென்று அது சரியான மூலிகைதான என்று  அவன் மனதுக்குள் அதை சரிபார்த்து அவனுடன் வந்த  அனைவரும் அழைத்து அந்த மூலிகையை காட்டினான்.அனைவரும் அந்த மூலிகையை பறித்து சேகரிக்க தொடங்கினர்.

அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் எதற்காக இந்த இரவு நேரத்தில் நாம் ஏன் இந்த மூலிகை பறிக்க வந்துள்ளோம் பேசாமல் காலையில் வந்து பறித்துக்கொள்ள கூடாத என்று வினவினான்.அதற்கு கூட்டத்தில் இருந்த இளம் வாலிபன் ஒருவன்

 



புதன், 13 செப்டம்பர், 2023

இனி ஐஃபோனிலும் சாதாரண சார்ஜர்தான் - புதிய மாடல்கள் வெளியீடு

புதிய ஐஃபோனில் தனது பிரத்யேக சார்ஜருக்கு பதிலாக பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் டைப்-சி சார்ஜரையே பயன்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவின் காரணமாக இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்திருக்கிறது.

செவ்வாய்க்கிழமை நடந்த அதன் வருடாந்திர நிகழ்வில்” iPhone 15, USB-C கேபிளை பயன்படுத்தும்” ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இந்த நிகழ்வின்போது மேம்பட்ட சிப் கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் வெளியிடப்பட்டது.

புதிய ஐஃபோன் 15 அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்று சார்ஜிங் போர்ட்டைக் கொண்ட முதல் ஐபோன் இதுவாக இருக்கும்.

iPad Pro மற்றும் Mac மடிக்கணினிகள் ஏற்கெனவே USB-C வகை சார்ஜரை பயன்படுத்தி வருகின்றன. ஐபோன்கள் மட்டுமே பிரத்யேகமான சார்ஜரை பயன்படுத்தி வந்தன.



ஐஃபோன்கள் மட்டுமல்லாமல் அதன் AirPods Pro போன்ற இயர்போன்கள் EarPods ஹெட்ஃபோன்களின் புதிய பதிப்புகளிலும் சி வகை சார்ஜர் வேலை செய்யும் என்று ஆப்பிள் கூறியுள்ளது.

நுகர்வோர்களுக்கு எளிதாக இருப்பதற்காகவும் பணத்தை மிச்சப்படுத்தவும், சார்ஜர்களை மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் மின்-கழிவைக் குறைக்கவும் பிரத்யேக சார்ஜிங் போர்ட்களை கைவிடுமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது.

இருப்பினும், இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டுகளில் ஐபோன் சார்ஜர் கேபிள்களின் குப்பை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று சிலர் எச்சரிக்கின்றனர்.

புதிய ஆப்பிள் சாதனங்களில் சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. உதாரணமாக புதிய ஆப்பிள் வாட்சில் முதல் முறையாக கார்பன் நடுநிலை உத்தரவாதத்தை அளித்திருக்கிறது.

இது பேட்டரிகள், வாட்ச் மற்றும் ஐபோன்களில் மறுசுழற்சி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துவதையும் ஆப்பிள் ஊக்குவித்திருக்கிறது.

பாகங்கள் எதிலும் தோலைப் பயன்படுத்த மாட்டோம் என்பதையும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியது. 2030 க்குள் கார்பன் நடுநிலை என்ற இலக்கை ஆப்பிள் எட்டும் என்றும் உறுதியளித்திருக்கிறது

புதிய ஐபோனில் என்ன சிறப்பு?

ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் ஆகியவற்றில் பிரகாசமான திரைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உயர்நிலை ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை இப்போது டைட்டானியம் சட்டத்துடன் வருகின்றன.

ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகியவை ம்யூட் பொத்தானுக்கு பதிலாக "செயல் பொத்தான்" ஒன்றைக் கொண்டுள்ளன. அவை பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய ஆப்பிள் வாட்ச் சைகைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். உதாரணமாக அணிந்திருக்கும் அதே கையில் இரண்டு விரல்களை ஒன்றாகத் தட்டினால், அழைப்பிற்கு பதிலளிக்கவோ, உரையாடலை முடிக்கவோமுடிக்க முடியும்.

ஆனால் இதற்கு முந்தைய ஐஃபோன் மற்றும் வாட்ச்களை விட பெரிய அளவில் மேம்பாடு இல்லாத சாதனங்களுக்கு அதிக விலையைக் கொடுக்க நுகர்வோர் தயாராக இருப்பார்களா என்று கேள்வியை நிபுணர்கள் எழுப்புகிறார்கள்.


Hindi Is Not a Purely Indian Language”

  Hindi language: its origin, history, and evolution : The Origin and Evolution of the Hindi Language Hindi, one of the most widely spoke...