அதியன் பாகம் 6
நீரேஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் படகுகளில் ஒளி வீசும் விளக்குகளோடு சென்றனர்.அது மட்டும் அல்லாமல் வானில் பறக்கும் பலூன்களை போல பறக்கும் விளக்குகள் வானில் பறக்க விடப்பட்டு இருந்தது
கோவில் திருவிழாவில் மேளங்கள் கொட்ட நாதஸ்வரம் வாசிக்க மன்னர் என்ற முறையில் அவரது சம்ரதாயங்களை முடித்து அரச குடும்பமாய் சேர்ந்து கடவுளை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது படை வீரர்களை போல வேடமிட்ட ஒரு கூட்டம் திட்டம் இட்டபடி விசம் தடவிய அம்புகளை எய்து முடிநாகப்பாண்டியனையும் அவரது மனைவி அவிராவும் கொலை செய்கின்றனர்.அந்த தாக்குதலில் இருந்து முடிநாகனின் மகன் எந்த வித ஆபத்தின்றி உயிர் பிழைக்கிறான். தாய் தந்தையை இழந்த மாயோன் அவர்களை அடக்கம் செய்து விட்டு அரியணை ஏறுகிறான். அரியணை எரிய மாயோன் தன் தாய்,தந்தை இறப்பிற்கு காரணமான அந்த கூட்டத்தில் பிடிபட்ட ஒருவனை மன்னன் மாயோன் முன் நிக்க வைத்து விசாரிக்க அவன் ஏளனமாக அரசவையில் உள்ளவர்களை கண்டு சிரிக்க மாயோன் கோவம் கொண்டு இறங்கி வந்து அவனது தலை முடியை பிடித்து தூக்கி கோவத்தோடு அவனை நோக்கி என் தாய்,தந்தையை கொன்றது மட்டுமல்லாமல் என் அரண்மனையிலேயே என்னை கண்டு சிரிக்கிறாய் என்று பேசி கொண்டு குத்து வாளை எடுத்து கழுத்தை அறுத்து கொள்கிறான் மாயோன்.அப்போதும் மாயோன் சினம் தீரவில்லை.தாய் தந்தை இறந்த சில நாட்களிலே பாண்டியர்களின் ஒரு பகுதியில் மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது இந்த தாக்குதலுக்கு கரணம் யார் என்று வினவ அது பருளிப்புற படைகளின் தாக்குதல் தான் மன்னா என்று மந்திரி ஒருவர் கூறுகிறார்.நாம் துக்கத்தில் இருப்பதால் நாட்டை பிடிக்க சரியான தருணம் அல்லவா அதான் தாக்குதல் நடத்தியுள்ளனர் மன்னா அதுமட்டும் இன்றி நம் நாட்டு மக்கள் சிலர் இறந்து விட்டனர் மன்னா. ஒரு வேலை மன்னரின் இறப்பிற்கு காரணம் இவர்களாக கூடஇருக்கும் என்று அமைச்சர் கூற கடும்கோபத்தில் இருந்த பாண்டிய நாட்டு மன்னன் மாயோன் பருளிபுரம் மீது போர்தொடுத்தான்.
தொடரும்
அதியன்
இது ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல
கதையை பற்றின கருத்துக்களை கிழே பதிவு செய்யுங்கள்
En ivlo spelling mistake panra da, varthaigala sariya use Pannu, apdi use panna spark summa therikum...
பதிலளிநீக்கு👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
பதிலளிநீக்கு