ஞாயிறு, 1 மே, 2022

ATHIYAN 7

                                                                   அதியன்  பாகம் 7 

பாண்டியர்கள் பருளிப்புறம் மீது போர் தொடுத்து வந்தனர்.பருளிப்புற மன்னர் ஆதனும் போருக்கு தயாரானார் படைகள் இரண்டும்  போர்க்களத்தில் அணிவகுத்து நிற்க பாண்டிய மன்னன் மாயோன் பாண்டிய படைகளை முன்னின்று வழிநடத்தினான்.பாண்டிய படைகளில் முதல் வீரனாக ஆயுதம் இன்றி பெற்றோரின் இழப்பிற்கு பழி வாங்க நின்றான் மாயோன் .போர் தொடங்கியது படைகள் இரண்டும் புயல் வேகத்தில் முன்னேறியது அதிலும் மாயோன் கோவம் அந்த போரில் ருத்திரதாண்டவம் ஆடியது.இருபது வயது சிறு வாலிபனிடம் பருளிப்புற வீரர்கள் திணறினர் அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி போர்க்களத்தில் மாண்டனர்.


                                                                                                                                                                       போர்க்களத்தில் இடியும்,மின்னலுமாய் வாள்களும் கேடயங்களும் மோத,வில்களும்,வாள்களும் உயிர்களை பறிக்கும் காலனின் பாச கயிறாய் மாற,உயரே பார்த்தால் பிணந்திண்ணி கழுகுகள் வட்டமிட,நாய்களும் நரிகளும் ரத்த வாடை நுகர்ந்து வந்து சூழ்ந்திருக்க,தரை முழுவதும் குருதி நதியாய் பெருக்கெடுத்து ஓடியது.முடிவின்றி இரண்டு நாட்களாக போர்  நடந்து கொண்டிருந்தது.இரன்டு நாட்களாக நடைபெற்ற போரில் பாண்டியர்களின் கை ஓங்கிருந்தது.பருளிப்புற மன்னன் ஆதன் படைகளின் பின்னடைவை விசாரிக்க பாண்டியர்களின் வீரத்தை பற்றி தளபதியும் பறுளிபுற மன்னரும் பேச. மறுநாள் போருக்கு இரு நாட்டு படைகளும்  தயாராகினர்.மறு நாள் சூரியன் உதிக்க போர் வீரர்கள் அணிவகுத்து நிற்க பாண்டியர்களின் படையில் முதல் வீரனாக பாண்டிய மன்னன் மாயோன் நிற்க அதே போல் பருளிப்புற படையில் ஆதனும் சக வீரர்களுடன் நிற்க போர் தொடங்கியது 

தொடரும் ...........                                                                                                     

                                                                                                                                      அதியன் 

இது ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல .

கதையா பற்றின கருத்துக்களை கிழே பதிவிடுங்கள் 

1 கருத்து:

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...