செவ்வாய், 3 மே, 2022

ATHIYAN 8

                                                             அதியன் பாகம் 8

மூன்றாம் நாள் போர் தொடங்கியது.போர்க்களத்தில்  இருநாட்டு படைகளும் தயாராக இருந்தன.இரண்டு நாட்டு மன்னர்களுக்கும் ஒரே நோக்கம் தான்.இன்றுடன் இந்த போரை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இரண்டு நாட்டு படைகளும்  போர்க்களம் புகுந்தன.போர்க்களத்தில் பாண்டிய மன்னன் மாயோன் சூறாவளி காற்றை போல் சுழன்று,சுழன்று  சண்டையிட.மறு பக்கத்தில் பருளிப்புற மன்னர் ஆதனும் பாண்டிய வீரர்களை துவம்சம் செய்யதான்.போர்க்களத்தில் படைகள் இரண்டும் கடுமையாக மோதிக்கொண்டன.

.


ஆதனுக்கு தெரியும் மாயோனை கொன்றால் தான்  போர் முடியும் என்று.உடனே மாயோனை நோக்கி முன்னேற செல்ல "ஆற்றுவெள்ளம் எப்படி அதன் வழியில் உள்ள அனைத்தையும் சுக்குநூறாய் உடைத்து அதன் பாதையை உருவாக்கிறதோ"அது போல ஆதன் மாயோனை நோக்கி பாதையை  உருவாக்க  அவன் எதிரில் உள்ள பாண்டிய வீரர்களை  வெட்டி வீழ்த்தி பாதையை உருவாக்கி  முன்னேறி சென்றான்.ஆதான் வருவதை கண்ட பாண்டிய மன்னன் மாயோனும் சிறிதும் பயமின்றி "சிங்கத்தை சிங்கத்தின் குகையில் சந்திக்கவேண்டும் ஏனனில் அதுதான் வீரம் என்று எண்ணி ஆதனை நோக்கி போர் புரிய  முன்னேறினான் மாயோன்  


                                                                                                                                                                       இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் முன்னேறி கொண்டு வந்து யுத்தம் செய்தனர்.அப்போது ஆதன் இந்த சிறுவயதில் நீ நன்றாக போர்புரிகிறாய் அனால் உன்னுடைய முயற்சி என்னிடம் பலிக்காது என்று கூறி வாளை வீச மாயோனோ அதை தடுத்து.நான் போர்க்களம் புகுந்ததே உன் உயிர் பறிக்க ஆகையால் முடிந்தால் என் உயிர் எடுத்து உன் உயிரை காத்துக்கொள் என்றான் மாயோன்


இருவரும் உக்கிரமாய் போர்புரிய திடீரென வானில் கருமேகங்கள் ஒன்று கூடி.இடியும் மின்னலுமாய் மிரட்ட போர் சிறிதும் நிற்காமல்  நடுந்துகொண்டே இருந்தது.திடீரென காற்றினை கிழித்து கொண்டு வந்த அம்புகள் பாண்டிய வீரர்களையும் ,பருளிப்புற வீரர்களையும் கொன்றுகுவித்தது.அனால் பாண்டிய மன்னனும் பருளிப்புற மன்னரும் இடைவிடாது போர்புரிந்து கொண்டு இருக்க அந்த நேரம் ஆதன் அவனது வாளை கொண்டு சுழன்று  மாயோனின் தலையை நோக்கி வீச மாயோனின் கையிலிருந்த வாள் கீழே விழ,வாள் விழுந்த சத்தம் கேட்டுஆதனுக்கு மாயோனை வீழ்த்திவிட்டோம் என்று எண்ணி சுழன்று பார்க்க  ஒன்றுமே புரியவில்லை.காயங்கள் எதுமே இல்லை அனால் மாயோனின் கைகளில் இருந்த வாள் எப்படி கீழே விழுந்தன என்று எண்ணி மாயோனின் முகத்தை பார்த்தான் ஆதன்.மாயோனின்  கண்களில் இருந்து  நீர்கசிந்தது. இதை கண்ட ஆதனுக்கு ஒன்றுமே புரியவில்லை மாயோன் ஒரு வித ஏமாற்றத்தோடு ஆதனை பார்த்துக்கொண்டே மெதுவாக மண்டியிட மற்றொரு அம்பு காற்றை கிழித்து கொண்டு வந்து ஆதனின் மார்பில் பாய்கிறது. .............

தொடரும்                                                                                                           

                                                                                                                               அதியன் 

இக்கதை ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல

கதையை பற்றின கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்  

1 கருத்து:

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...