புதன், 4 மே, 2022

ATHIYAN 9

                                                              அதியன் பாகம் 9

காற்றை கிழித்து கொண்ட வந்த அம்பு ஆதனின் மார்பில்  பாய அதை பின்தொடர்ந்து வந்த இரண்டு அம்புகள் அவன் மார்பை துளைத்தன.ஆதன் சரிந்து விழுந்த மாயோனை பார்த்தான் அவன் முதுகில் நான்கு அம்புகள் துளைத்து இருந்தன.மார்பில் இருந்து குருதி பெருக்கெடுக்க என்ன நடக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்க்க புழுதி படலத்தோடு ஒரு படை போர்க்களத்தில் புகுந்து பாண்டிய படைகளையும் பருளிப்புற படைகளையும்  கொன்றுகுவித்தது.



அப்போது ஒரு குதிரை ஆதனை நோக்கி வேகமாக வந்ததுஅதில் இருந்து ஒருவன் இறங்கினான்.உரையில் இருந்த வாளை உருவி ஆதனை பார்த்து இனி இந்த பாண்டிய நாடும் பருளிப்புற தேசமும் எனக்கு சொந்தம்.பாண்டிய மன்னனை கொன்றுவிட்டேன் உன்னையும் கொள்ள போகிறேன் உன்னை மட்டும் அல்ல உனது ரத்த உறவுகளை சேர்த்து கொள்ளப்போகிறேன் எத்தனை நாள் காத்துஇருந்தேன் இந்த சந்தர்ப்பத்திற்கு பாண்டிய தேசத்தில் புகுந்து முடிநாகப்பாண்டியனை கொன்றதும் நான்தான் அந்த  கிராமங்களை எரித்து உன்மேல் பழி வருவது போல் செய்ததும் நான்தான் இந்த போர்மூல முக்கிய காரணமும் நான்தான்  அவ்ளோதான் என்று கூறி இனி இந்த குமரி கண்டத்தில் மிகப்பெரிய அரசன் யார் என்றால் ஒளிநாட்டு அரசனான அந்துவன் எனும் நான்தான் என்று கூறி ஆதனை கொன்று இரண்டு தேசங்களையம் ஒரே நேரத்தில் கைப்பற்றினான் அந்துவன்.பாண்டிய மன்னன் இறந்துவிட்டான் என்ற செய்தி பாண்டிய தேசம் முழுவதும் பரவியது.அதேபோல் பருளிப்புறம் முழுவதும் ஆதன் இறந்த செய்தி பரவியது.ஒளிநாட்டு வீரர்கள் பருளிப்புற அரண்மனை நோக்கி புறப்பட்டனர்.



அந்துவன் வரும் செய்தி கேட்டு ஆதனின் மனைவியையும்  இளவரசன்  அதியனையும்  வீரர்களும்  சிலர் ரகசிய வழி ஒன்றின் மூலம் கூட்டிக்கொண்டு ஒரு மலை கிராமத்திற்கு அழைத்து சென்றனர் 

தொடரும் ......                                                                                                                                                                                                                                                                                     அதியன் 

இது ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல 

கதையை பற்றின கருத்துக்களை கீழே பதிவிடுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...