அதியன் பாகம் 10
படைகளை கூட்டி கொண்டு அந்துவன் பருளிப்புறம் வந்து சேர்ந்தான்.அவன் வருவதற்குள் ஆதனின் மனைவி நந்தினி அவளது மகன் அதியனை அழைத்து கொண்டு பஞ்சமலை நோக்கி சென்றால்.அவர்களுக்கு துணையாக சில காவல் காவல் வீரர்கள் அவர்களுக்கு வந்தனர்.
அந்துவன் பருளிப்புறம் அரண்மனையை அடைந்தான் அந்தவனின் வீரர்கள் அரண்மனை முழுவதையும் சுற்றி வளைத்தனர்.அங்குள்ள அனைவரையும் கொன்று குவித்தனர்.அரண்மனையின் முக்கிய அமைச்சர்களிடம் ஆதனின் மனைவியும் மகன் அதியனும் எங்கே என்று கேட்டு பதில் கிடைக்காததாள் அங்கு உள்ள அனைவரையும் துன்புறுத்தி கொலை செய்தான்.அவனது வீரர்களுக்கு அவர்கள் இருவரும் எங்கு இருந்தாலும் அவர்களை தேடி கொண்டுவருமாறு கட்டளை பிறப்பித்தான்.பாண்டியநாடு பறுளி சாம்ராஜ்யம் இவை இரண்டையும் ஒளிநாட்டோடு இணைத்து பேரரசன் ஆனான்.அதே நேரம் தன் நந்தினியும் அவளது மகன் அதியனும் பறுளி மலை குன்று ஒன்றில் உள்ள பஞ்சமலை என்ற மலையில் உள்ள உலோகேஸ்வரம் என்ற கிராமத்தில் மறைந்து வாழ தொடங்கினர். உலோகேஸ்வர கிராம மக்கள் யாருடனும் பேசமாட்டார்கள் அவர்கள் அமைதியாக அந்த மலை குன்றில் வாழும் ஒரு பழங்குடி கிராம மக்கள்.அந்த மக்கள் யாருடனும் பேசாமலே கருத்துக்களை பரிமாறி கொள்பவர்கள் இந்த கிராம மக்கள் மற்ற மனிதர்களிடம் இருந்து தள்ளியே வாழ்ந்துவந்தனர்.இந்த கிராமத்தில் பருளிப்புற மன்னர் வம்சத்தினர் மட்டுமே வரமுடியும் வேறு எவரேனும் அந்த கிராமத்தின் உள்ளே வர நினைத்தாலும் வரமுடியாது.ஆகையால்தான் நந்தினி அவளது மகன் அதியனுடன் இந்த மலைக்கிராமத்திற்கு வந்து மறைந்து வாழ தொடங்கினாள்.மாதங்கள் சில உருண்டன அந்துவனின் வீரர்கள் எங்கு தேடியும் நந்தினியும் அதியனும் கிடைக்கவில்லை
அதியன்
இது ஒரு கற்பனை கதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக