சனி, 21 அக்டோபர், 2023

அதியன் (குமரி வீரன் )

                அதியன் (குமரி வீரன் ) பாகம் 1

13000 ஆண்டுகளுக்கு முன்பு  இரவு நேரம் அது நிலவு பிரகாசமாக அதன் ஒளியை பூமியின் ஒரு பக்கத்தில் வீசிக்கொண்டு இருந்த சமயம்.ஆங்காங்கே இரவு நேர வேட்டை விலங்குகள்  காடுகளில் "வழி தவறிய விலங்களையும்,பார்வைக்குன்றிய விலங்குளையும்" குறிவைத்து வேட்டையாட காத்திருந்த நேரம் அது.

திடிரென ஒரு இடி சத்தம் வானில் எங்கிருந்தோ ஒலித்தது இதை கேட்ட ஒட்டுமொத்த உயிர்களும் ஒரு நிமிடம் பயந்து வின்னை உற்றநோக்கின. கார்மேகங்கள் மெதுமெதுவாக நிலவின் வெளிச்சத்தை மூடிக்கொண்டே வந்து கடைசியில் முழு நிலவையும் மூடிக்கொண்டது. அதனால் அங்கு இருந்த மொத்த நிலப்பரவும் இருளில் மூழ்கியது .

விண்ணில் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உராய தொடங்கின.அதன் விளைவாய்  ஏற்பட்ட மின்சாரம் மிகுந்த வெளிசத்தோடும் இடி முழக்கத்தோடும் அங்கிருந்த உயிர்களை நடுங்க வைத்தது இயற்கை.கார்மேகங்கள் மழை துளிகளை பொழிய தொடங்கியது.காடுகளில் மரத்தில் இருந்த வௌவல்கள் ஒரு திசையை உற்றுநோக்கி கொண்டே இருந்தன.

மனிதர்கள் சிலர்  தீ பந்தகளோடு அவர்களுக்குள் பேசிக்கொண்டே காடுகளில் சில மூலிகை பொருட்களை தேடி கொண்டிருந்தனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் ஒரு செடியை உற்றுநோக்கியவாறு அதன் அருகில் சென்று தீ பந்தத்தை  அந்த செடியின் அருகில் கொண்டு சென்று அது சரியான மூலிகைதான என்று  அவன் மனதுக்குள் அதை சரிபார்த்து அவனுடன் வந்த  அனைவரும் அழைத்து அந்த மூலிகையை காட்டினான்.அனைவரும் அந்த மூலிகையை பறித்து சேகரிக்க தொடங்கினர்.

அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் எதற்காக இந்த இரவு நேரத்தில் நாம் ஏன் இந்த மூலிகை பறிக்க வந்துள்ளோம் பேசாமல் காலையில் வந்து பறித்துக்கொள்ள கூடாத என்று வினவினான்.அதற்கு கூட்டத்தில் இருந்த இளம் வாலிபன் ஒருவன்

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...