திங்கள், 16 அக்டோபர், 2023

5 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மரக்கட்டைகள் கண்டுபிடிப்பு - ஆதி மனிதன் எதற்க்காக பயன்படுத்தினான்


ஜாம்பியாவில் உள்ள ஓர் ஆற்றங்கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இவை பழங்கால மனித வாழ்கை பற்றிய தொல்லியல் ஆய்வாளர்களின் புரிதலையே புரட்டிப்போடும் விதத்தில் உள்ளன.

சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தமக்கான கட்டமைப்பை உருவாக்கி மரத்தை பயன்படுத்தி இருப்பதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியளர்கள்  கண்டறிந்துள்ளனர்.

ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள இந்த சான்றுகள் கற்கால  மனிதன் தங்குமிடங்களாக இருந்ததை காட்டுவதாக நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு நமது ஆரம்பகால மூதாதையர்களைப் பற்றி இதுநாள் வரையில் எனக்கு இருந்த புரிதலை மாற்றியுள்ளது என்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் லாரி பர்ஹம்.

லிவர்பூல்  பல்கலைக்கழக்தின் விஞ்ஞானி தலைமையலான குழு மனித இனத்தின் ஆழமான வேர்களை தேடி ஆய்வு மேற்கொண்டது.குறிப்பாக பழங்காலத்தில் மரங்கள் பயன்பாட்டில் இருந்தனவா என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது. 

பழங்கள் மனிதர்கள் பற்றிய எண்ணத்தை மாற்றும் கண்டுபிடிப்பு 

இந்த கண்டுபிடிப்பு பழங்கால மனிதர்கள் எளிமையான நாடோடி வாழ்க்கைநடத்தியதாக கருதும் தற்போதைய நமது எண்ணத்தை மாற்றியமைக்க கூடும் பண்டையகால மனிதர்கள் மரத்திலிருந்து புதிய மற்றும் பெரிய ஒரு பொருளை உருவாக்கியதாக கூறுகிறார் பேராசிரியர் பர்ஹாம்.

அவர்கள் தங்களின் புத்திசாலித்தனம் கற்பனை மற்றும் திறன்களை பயன்படுத்தி தங்களது காலத்துக்கு முன்பும்,பின்பும் பார்த்திராத ஒன்றை உருவாக்கினர் என்கிறார் பர்ஹாம்.

மரக்குச்சிகள் உள்ளிட்ட பலன்களை மரப் பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்தனர்.ஆனாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று செங்குத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகள் தான் அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒன்றன் மீது ஒன்று சாய்த்து வைக்கப்பட்டது போன்ற நிலையில் காணப்பட்ட அவற்றில் வெட்டுகளும் இருந்தன என்கிறார் ஆய்வு குழுவின் உறுப்பினரும் அப்பெரிஸ்டவித் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான ஜெப் டல்லர் கூறினார்.

இந்த மரக்கட்டைகளில் உள்ள வெட்டுகள் கல்லால் ஆனா கருவியல் ஏற்பட்டவை என்பதையும் நாம் தெளிவாக காணலாம்.

நெருப்பை உண்டாகுதல் 


இந்த மரக்கட்டைகள் சுமார் 4.76 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பதும் மேற்கொண்டு செய்யப்பட்ட பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெருப்பை உருவாக்குவதற்கு குச்சிகள்,ஈட்டிகள் போன்ற தற்காப்பு கருவிகளை உருவாக்குவதற்கும் தான் மனிதன் மரத்தை பயன்படுத்தி வந்தான் என்பதே இதுவரை நமது புரிதலாக உள்ளது. 

ஆனால் மனிதனுக்கும் ,மரத்துக்குமான தொடர்பு பழங்கால பாரம்பரியம் வரை ஆழமாக வேரூன்றி இருப்பதை அறிந்து நான் ஆசிரியப்பட்டேன்.நாங்கள் அசாதாரணமான ஒன்றை கண்டுபிடித்துள்ளோம் என்று எனக்கு புரிந்தது என்கிறார் ஜாம்பியாவில் உள்ள லிவிங்ஸ்டோன் அருங்காட்சியகத்தை சேர்ந்த குழு உறுப்பினரான பெரிஸ் நாகொம்பவே.

டேட்டிங் தொழில்நுட்பம் 

பிரிட்டனின் கிளாக்டான் பகுதியில் மணலில் புதைந்திருந்த மர ஈட்டி கடந்த 1911 இல் கண்டுபிடிக்கப்பட்டது.உலகின் பழமையான மர  கண்டுபிடிப்பிப்புகளில் ஒன்றாக கருதப்பட்டது.அது 4,00,000 ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்டிருந்தது.

அனால் ஜாம்பியா -தான்சானியா எல்லைக்கு அருகில் உள்ள கலம்போ நீர்விழுச்சிக்கு மேல வளைந்து செல்லும் ஆற்றங்கரையில் தற்போது இரு மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்ணக்கான ஆண்டுகளாக இவை தண்ணீரில் மூழ்கிருப்பதாக கருதிய ஆராச்சியாளர்கள் அவற்றின் காலத்தை லுமினின்சென்ஸ் டேட்டிங் தொழில்நுட்பம் மூலம் கணக்கிட்டனர்.

அதில் எந்த வகையான பண்டய மனிதர்கள் அல்லது மனித இனங்கள் இவற்றை உருவாக்கியது என்பதை தெளிவாக கணிக்க இயலவில்லை.மேலும் இந்த மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இதுவரை எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால் 3,15,000 ஆண்டுகள் பழமையான நாகரிக மனிதன் அல்லது ஹோமோசெபியன்  புதைப்படிவங்களைவிட இந்த பரக்கட்டைகள் மிகவும் பழமையானது என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

மரக்கட்டையின் நீளம் எவ்வளவு?


இரன்டு மரக்கட்டைகளில் சிறியதான ஒன்றின் நீளம் சுமார் 1.5மீ (5அடி) அதை மற்றொன்றுடன் பொருத்தி ஏதோவொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அது ஒரு குடிசை அல்லது நிரந்தர வசிப்பிடமாக இருந்திருக்க  வாய்ப்பில்லை என்று கூறும் ஆய்வு குழுவினர் அது ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

ஆற்றங்கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதற்கு வசதியான ஒரு கட்டமைப்பாக இருந்திருக்கலாம் என்று பேராசிரியர் டல்லர் கூறினார்.

அனால் அவை எந்த வகையான கட்டமைப்பாக இருந்திருக்கும் என்பதை திட்டவட்டமாக சொல்வது கடினம் எனவும் அவர் தெரிவித்தார்.

மரவேலை மரபு ?


ஜாம்பியா ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மரக்கட்டைகள் ஹோமோசெபியன் காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாமா என்று எங்களுக்கு தெரியாது.ஏனெனில் அந்த காலத்தைய புதைப்படிவங்களை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை.என்கிறார் பேராசிரியர் டல்லர்.

அனால் தென்னாபிரிக்காவின் அந்த நேரத்தில் பல மனித இனங்கள் இருந்தன.எனவே ஹோமோஎரக்டோஸ்  அல்லது ஹோமோ நாலேடி  மனித இனங்களின் காலத்தை சேர்ந்தவையாக இவை இருக்கலாம் என்கிறார் அவர்.

பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பிற்காக இந்த மரக்கட்டைகள் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன.கடந்த அரை மில்லியன் ஆண்டுகளாக ,மிகவும் ஆழகாக பாதுகாக்கப்பட்ட நீர் தேக்கத்தை பிரதிபலிக்கும் தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ள அவை மீண்டும் ஜாம்பியாவுக்கு கொண்டுவரப்படும் என்கின்றனர் ஆய்வு குழுவினர்.

கொலோம்போ நீர்விழ்ச்சி தளத்தில் பணியைத் தொடர்ந்த அவர் பண்டைய மரவேலைகள் நுட்பங்கள் கைவினைத்திறன் மற்றும் சுற்றுசூழல் உடனான மனித தொடர்புகள் குறித்து நமது அறிவை ஆழப்படுத்துவதற்கான ஆற்றலை கொண்டுள்ளன என்கிறார்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...