திங்கள், 16 அக்டோபர், 2023

ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு பாலஸ்தீன் இஸ்ரேல் இடையே ஏன் மோதல்? ஆயிரக்கணக்கான உயிர்பலிக்கு காரணம் என்ன


இஸ்ரேல்,பலஸ்தீனத்திற்கு இடையே உள்ள பிரச்சனை என்ன?ஹமாஸ் படைக்கும் இப்பிரச்னைக்கு என்ன தொடர்பு?இது  சிகுலுக்குரிய பிரச்சனையாக இருக்க காரணம் என்ன?போன்ற கேள்விக்கு இந்த தொகுப்பு விடை காண்கிறது.


இஸ்ரேல்,பலஸ்தீனத்திற்கு இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரமே மூன்றாம் உலகபோருக்கு  வழிவகுக்கும் என்றெல்லாம் சொல்வது உண்டு.

பாலஸ்தீன் குழுக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும்,இஸ்ரேல் மீது பாலஸ்தீன் குழுக்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.இப்படிப்பட்ட சூழலில் தெற்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலை நடத்திய ஹமாஸ் படைகள் மீது போரை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.ஏற்கனவே உக்ரைன் போர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் அறிவித்துள்ள போர் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் நமக்கு பல கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளது.இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையே உள்ள பிரச்சனை எப்போது எங்கே தொடங்கப்பட்டது என்பதை பார்ப்போம்.

100 ஆண்டுகளாக தீர்க்கப்படாத விவகாரம்.

 மிக சிக்கலான இடத்தில அமைந்திருப்பதே இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.எகிப்து ,ஜோர்டான்,சிரியா என சுற்றியும் எதிரி நாடுகள் அமைந்திருப்பதே இஸ்ரேல் விவகாரத்தை தீர்க்க முடியாததற்கு முக்கிய காரணம் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அனால் இவர்களுக்குள் பகை உருவாக்குவதற்கு காரணம் என்ன சற்று வரலாற்றை திரும்பி பார்ப்போம்.

மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீன் பகுதி ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.முதல் உலக போரின்போது பாலஸ்தீன் பகுதியை ஆண்டு வந்த ஆட்சியாளர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அந்த பகுதியை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் சிறுபான்மையானவர்களாகவும் அரபு மக்கள் பெருபான்மையினராகவும் வாழ்ந்து வந்தனர்.பாலஸ்தீன பகுதியில் யூதர்களுக்கு என தனி நாட்டை நிறுவ வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் தொடரந்தத்தை அடுத்து யூதர்களுக்கும்,அரேபியர்களுக்கும் பிரச்சனை வெடித்தது.

இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் 1920களிலிருந்து 1940கள் வரை பாலஸ்தீனத்திற்கு செல்லும் யூதர்களின் எண்ணிக்கை தொடரந்து அதிகரித்தது.இரண்டாம் உலக போரில் யூதர்கள் கோத்துக்கொத்து கொல்லப்பட்டனர்.ஐரோப்பாவிலும் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளான அவர்கள் அங்கிருந்து தப்பித்து தாய்நாடு வேண்டி பாலஸ்தீனத்தில் தஞ்சம் அடைந்தனர்.

யூதர்களுக்கும்,அரேபியர்களுக்கும் இடையே வன்முறை சம்பவங்கள் அதிகரித்தது. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமைடந்தன.கடந்த 1947ம்  ஆண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் ஒரு திட்டத்தை மு வைத்தன.அதன் படி பாலஸ்தீன் இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது.யூதர்களுக்கு தனியாக ஒரு நாடும் அரேபியர்களுக்கு தனியாக ஒரு நாடும் ஜெருசலேமை சர்வதேச நகரமாகவும் அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.

இப்படி 1948ம் ஆண்டு இரண்டாக பிரிக்கப்பட்டு  யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலப்பகுதி இஸ்ரேல் என்றும் அரேபியர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலா பகுதி பாலஸ்தீன் என்றும் அழைக்கப்பட்டது.1948ல் இஸ்ரேல் என்ற நாடு தோன்றியதை அடுத்து இஸ்ரேல்க்கு  எதிராக பாலஸ்தீனியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க போர்   தொடங்கியது.

போர் தொடங்கி ஒரே ஆண்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.இந்த சமயத்தில் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.அண்டை நாடான ஜோர்டான் ஆக்கிரமித்த பகுதி வெஸ்ட் பேங்க் என்றும் எகிப்து ஆக்கிரமித்த பகுதி காசா என்றும் ஆளாக்கப்பட்டு வருகிறது ஜெருசலேம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலிய படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது ஜோர்டான் நாட்டு படைகளின் கட்டுப்பாட்டின் கிழக்கு ஜெருசலேம் கொண்டு வரப்பட்டது.இதன் பிறகு அங்கு இருக்கும் நாடுகளுக்கிடேயே பல போர்கள் வெடித்து.1967ல் நடந்த போரில் கிழக்கு ஜெருசலேம் மற்றும் வெஸ்ட் பேங்க் உள்ளிட்ட பகுதிகள் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.சிரியா கோலன் குன்றுகள்,காசா மற்றும் எகிப்த்திய சினாய் தீபகற்பத்தின் பெரும்பகுதியையை இஸ்ரேல் ஆக்கிரமிடத்த்து.

பெரும்பாலான பாலஸ்தீனியர்களும் அவர்களது சந்ததியனரும் காசா மற்றும் வெஸ்ட் பேங்க்,சிரியா,மற்றும் லெபனான் போன்ற இடங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

வெஸ்ட் பேங்க் இன்னும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.காசாவில் இருந்து இஸ்ரேல் வெளியேற்றப்பட்ட பிறகும் அதை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக ஐநா கருதிவருகிறது.ஜெருசலேம் முழுவதையும் இஸ்ரேல் தங்கள் தலைநகராக கூறி வரும் நிலையில் எதிர்காலத்தில்  அமைய உள்ள பாலஸ்தீன் நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம் இருக்கும் என பாலஸ்தீனியர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த ஒரு சில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.கடந்த 50 ஆண்டுகளாக 6 லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் வசிக்கும் இந்த பகுதியில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டியுள்ளது .

அனால் சர்வதேச சட்டத்தின் படி இந்த குடிருப்புக்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டவையாகும்.ஐநா பாதுகாப்பு கவுன்சில் பிரிட்டன் ஆகியவற்றின் நிலைப்பாடும் இதுதான்.ஆனால் ஜெருசலேம் முழுவதும் தங்கள் பகுதி என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

தற்போதைய நிலவரம் என்ன ?

கிழக்கு ஜெருசலேம் ,காசா ,வெஸ்ட் பேங்க் ஆகிய பகுதிகளில் வாழும் பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும்  இடையேதான் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பலஸ்தீன போராளி குழுவான ஹமாஸ் காசாவை ஆட்சி செய்து வருகிறது.ஹமாசுக்கு ஆயுதங்கள் செல்வதை தடுக்கும் இஸ்ரேலும் ,எகிப்தும் காஸாவின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

காஸா மற்றும் வெஸ்ட் பேங்க்கில் உள்ள பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். பலஸ்தீன வன்முறையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மட்டுமே இப்படி செயல்படுவதாக இஸ்ரேல் விளக்கம் அளிக்கின்றது.

பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன ?

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் பல விவகாரங்களில் மாற்று கருத்து நிலவி வருகிறது.பலஸ்தீனிய மக்களின் எதிர்காலம் என்ன என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.இதுதான் இந்த இஸ்ரேல் பாலஸ்தீனிய போருக்கான காரணம் என்று கூறப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...