அதியன் பாகம் 1
கார்மேகம் சூழ்ந்த இரவு . இடியும் மின்னலும் அந்த இரவு நேரத்தை நடுங்க வைக்க அந்த இடி மின்னலையே மிரளவைக்கும் அளவிற்கு தூரத்தில் இருந்து ஒரு விதமான நீண்ட மரண சத்தம் சுற்றி இருந்த காடுகளையே மிரள வைத்தது.இந்த மரண சத்தம் கேட்டு காடுகளில் இருந்த பறவைகள் பயத்தில் மரக்கிளைகளை இறுக்கி பிடித்தவரும், தாய் பறவைகள் அதன் கூடுகளில் இருக்கும் குஞ்சிகளை இறுக்கி அணைத்தவாறு பதற்றத்தில் இருந்தன. அந்த இரவு நேரத்தில் வௌவால் ஒன்று மரத்தில் தலைகீழாய் தொங்கியவாறு சத்தம் வரும் திசையை உற்றுநோக்கி பார்த்துக்கொண்டு இருந்தது.
மனிதர்கள் சிலர் தீ பந்தங்களோடு அவர்களுக்குள் பேசிக்கொண்டு கைகளில் சில மூலிகைகளை எடுத்துக்கொண்டு வேகமாக செல்கின்றனர்.அவர்கள் சென்ற இடத்தில் பல கூடாரங்கள் அமைந்து இருக்க மூலிகைகளை முதன்மை மருத்துவரிடம் கொடுக்க சென்றனர். உள்ளே சென்றதும் ஒரே ரத்த வாடை வீச உடனே கூடார காவலாளிகள், மன்னார் பருளிப்புற மாமன்னர் ஆதன் வருகிறார் என்று கூற மன்னரும் படை தளபதியுமான களங்கண்டனும் சில முக்கிய அமைச்சர்களும் வீரர்களும் அரசருடன் மருத்துவ கூடாரத்திற்குள் நுழைகின்றனர்.
அங்கு பல வீரர்கள் வெட்டுப்பட்டு பெரிய காயங்களுடனும் இன்னும் சிலர் கைகளை இழந்தும்,கால்களை இழந்தும் உயிருக்காக போராடி கொண்டு இருந்தனர் மன்னர் அவர்களின் நிலையை கண்டு சோகமா கூடாரத்தின் பின்புறமாய் வந்து பார்க்கிறார் பல வீரர்கள் பிணமாய் எரிந்து கொண்டு இருந்தனர்.இதை கண்ட மன்னர் தளபதியை களங்கண்டனை நோக்கி என்ன நடக்கிறது.இரண்டு நாளாக போர் நடக்கிறது.நமது பக்கத்தில் இருந்து பல வீரர்களை நாம் இழந்து விட்டோம் இதற்கு என்ன கரணம் தளபதி என மன்னர் ஆதன் தளபதி களங்கண்டனை நோக்கி கேட்க அதற்கு தளபதி
அவன் பெயர் கூறினால்
இடியும் மின்னலும் ஆர்ப்பரிக்கும் ,
கர்ஜிக்கும் சிங்கமும் பூனையை மாறும், , ஆழி பேரலையும் அமைதியாகும் ஆயுதம் இன்றி போர்க்களம் புகுவான் அவன் போர்க்களம் புகுந்தால்
தொடரும்...
அதியன்
இது ஒரு கற்பனை கதை ,யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல
கதையை பற்றின உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக