அதியன் பாகம் 2
அவன் போர்க்களம் புகுந்தால் ................எதிரி படைகளை நாசம் செய்வான் மன்னா.அவனது வயதிற்கும் அவனது போர் கலைக்கும் சம்மந்தம் இல்லாததை போல் இருக்கும் இத்தனைக்கும் அவனது வயது 18 வயதுதான் மன்னா.அவனது பெயர் மாயோன் .உடனே மன்னர் பருளிப்புற மன்னர் ஆதன் படை தளபதி களன்கண்டானை நோக்கி தெரியும் அவனது தந்தை பெயர் முடிநாகன் .அவன் போர்களத்தில் மிக வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுவார் அவரை நேருக்கு நேரராக மோதி வெற்றிபெற இந்த குமரி கண்டத்தில் யாரும் இல்லை என்று கூறுவார்.அதே போல் மக்களிடமும் மிகவும் அன்பாக செயல்படுவர் மக்களின் குறைகளை நேராக சென்று அதை அறிந்து செயல்படுவர் அது மட்டுமல்லாமல் இந்த குமரி கண்டமே மெய்சிலிர்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட ஏரி அமைத்து அதனுள் நீர் கோவிலை அமைத்தவர் என்று கூறி ஒரே ரத்தம் அல்லவா அப்டித்தான் இருக்கும் என்று கூறினார் மன்னர். முடிநாகனை பற்றி ஒரு குறிப்பு. முடிநாகன் போர்கலைகளை முழுதும் கற்றவன். அவனது தந்தை அவனிற்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்தார்.சிறு வயதிலேயே தாயை இழந்தவன் .அதனால் அவன் நிம்மதியற்ற இருந்தான்.இதை சரி செய்ய அவனை ஒரு பயணத்திற்கு தயார் செய்தர் முடிநாகனின் தந்தை.வெகுதூர பயணத்திற்கு தயாரானான் முடிநாகன்.தனது 20 வயதில் தனித்து பயணம் செய்ய தொடங்கினான்.பல ஊர்களுக்கு சென்றான் பல நாடுகளுக்கு சென்றான் அவன் ஒவ்வொரு இடத்தை பார்க்கும் போது அவனுக்கு ஒரு திகைப்பு.மக்கள் படும் அவதிகள் கண்டான் பலரது பேச்சு அவனை ஈர்த்தது.அதையும் தாண்டி ஆறுகளின் நீரோட்டமும்,மலைகளும் மலைகளில் இருந்து பார்க்கும் போது ஆறுகளின் வளைவுகளும்,காட்டு மிருகங்களும் அவனை ஈர்த்தன.அதையும் தாண்டி கடற்பயணம் மேற்கொண்டான் கடல் வாழ் உயிரினங்களை கண்டு அவன் பிரமித்து போனான்.5 வருடங்கள் பயணத்தை மேற்கொண்டான் ஒருநாள் அவனது தந்தையிடம் இருந்து செய்தி வந்தது நமது நாட்டிற்கு எதிராக போர் மேகம் சூழ்ந்து உள்ளது உடனே வர வேண்டும் என்று செய்தியில் கூறப்பட்டிருந்தது.முடிநாகனும் புறப்பட்டான்
இது ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.
கதையை பற்றின உங்கள் கருத்துக்களை பதிவிடவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக