வியாழன், 14 செப்டம்பர், 2023

புதிதாக பிறந்த சூரிய குழந்தை.. 1000 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து படம்பிடித்த ஜேம்ஸ் வெப்

 


ஆழ் விண்வெளி குறித்த ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புதியதாக பிறந்த சூரியன் ஒன்றை அடையாளம் கண்டிருக்கிறது. இது நமது சூரியனை போலவே இருப்பதால் இதற்கு 'பேபி சன்' என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

உண்மையில் மனிதனுக்கு என்ன தேவை? என்கிற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. பசித்த மனிதனிடம் கேட்டால் உணவு என்பான், குளிர் இருக்கும் மனிதனிடம் கேட்டால் வீடு என்பான் சரி இப்படி எல்லா அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றிய பின்னரும் மனிதனுக்கான தேவையென ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு 'ஆம் மனிதனுக்கு இன்னமும் தேவை இருக்கிறது' என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக வந்திருக்கிறோம்? என்கிற கேள்விதான் எல்லா மனிதனையும் தற்போதுவரை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கான விடையை தேட நாம் வந்த வழியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது பூமி, சூரிய குடும்பம், அண்டம், பால்வழி அண்டம், விண்மீன் திரள்கள், பிரபஞ்சம் என அனைத்தையும் ஆராய வேண்டும். இந்த ஆய்வுக்காக அனுப்பப்பட்டதுதான் ஜேஸ்ம் வெப் தொலைநோக்கி.

இந்த பிரபஞ்சம் 'பெரு வெடிப்பு' (Big Bang) எனும் நிகழ்வுகளுக்கு பின்னர்தான் பிறந்திருக்கிறது என்றும், அதன் பின்னர் மெல்ல உருவானதுதான் சூரிய குடும்பம், பூமி, உயிரினங்கள், மனிதர்கள் எல்லாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே பெரு வெடிப்பு நிகழ்ந்த போது என்ன நடந்தது என்பது குறித்து ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக நேற்று சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது இந்த பிரபஞ்சத்திற்கு புதியதாக வந்திருக்கும் சூரியனை ஜேம்ஸ் வெப் அழகாக படம்பிடித்திருக்கிறது.



இது முழுமையான சூரியன் அல்ல. இது உருவாகி ஒரு சில ஆயிரம் ஆண்டுகள்தான் இருக்கம். நமது சூரியனுக்கு வயது 450 கோடி ஆண்டுகள். ஆனால் நம்முடைய சூரியன் இளையது. அப்படியெனில் வெறும் சில ஆயிரம் அண்டுகள் ஆன புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூரியன் மிக மிக இளையது. பிறந்து சில நாட்கள் ஆன குழந்தை போன்றது என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். எனவே இதற்கு Baby sun என்றும் அவர்கள் பெயரிட்டுள்ளனர். இது பூமியிலிருந்து 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.

ஒளி ஆண்டு என்பது, ஒளி ஒரு விநாடிக்கு தோராயமாக 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். இதே வேகத்தில் ஒளி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு தொலைவை கடக்கிறதோ அதைதான் ஒளி ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நமது சூரியன் இப்போது இருக்கும் அளவை விட 92 மடங்கு குறைந்து வெறும் 8 மடங்கு மட்டுமே இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த புதிய சூரியனும் இருக்கிறது. இது இன்னும் சில கோடி ஆண்டுகள் கழித்து நமது சூரியனை போன்று வளரும்.



தற்போது இதில் கார்பன் மோனாக்சைடு, சிலிக்கான் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் செழுமையாக இருக்கின்றன. சூரியன் உருவாதற்கு ஹைட்ரஜன் மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பேபி சூரியனை ஆராய்வதன் மூலம் நம்முடைய சூரியன் எப்படி உருவானது என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது தற்போது கண்டுபிடிக்கப்பட்ட சூரியன் பைனரி நட்சத்திரம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதாவது பிரபஞ்சத்தில் அனைத்து நட்சத்திரங்களும் இரண்டாகதான் இருக்கும். இதுதான் பைனரி ஸ்டார்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...