சனி, 16 செப்டம்பர், 2023

ஒருவரின் மூளையை மாற்றி புதிய மூளையை பொருத்த முடியுமா?

 https://img.freepik.com/premium-photo/concept-art-human-brain-exploding-with-knowledge-creativity-generative-ai_618582-945.jpg?size=626&ext=jpg

1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம்… அமெரிக்காவின் பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ராபர்ட் ஜே. ஒயிட், கிளீவ்லேண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார்.

குரங்கு ஒன்றின் தலையை எடுத்து மற்றொன்றின் உடலில் பொருத்துவதுதான் அது. சிக்கலான அந்த அறுவை சிகிச்சை, கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த குரங்கு கண் விழித்தவுடன் அதனால் பார்க்கவும், நுகரவும், ஏன் கடிக்கவும் கூட முடிந்தது. குரங்கிற்கு மேற்கொள்ளப்பட்ட அந்த அரிய அறுவை சிகிச்சை அப்போது ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது.

இதுதான் முதல் முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட மூளை மாற்று அறுவை சிகிச்சை அல்லது தலை மாற்று அறுவை சிகிச்சை என்று சொல்லலாம்.

இதை ஒயிட், ‘ உடல் மாற்று அறுவை சிகிச்சை’ என்று அழைக்க விரும்பினார். மூளை அல்லது உடல் மாற்று அறுவை சிகிச்சையை ஒயிட் மட்டும் முயற்சிக்கவில்லை. அவரை போல நிறைய மருத்துவ நிபுணர்களும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், உயிர்களைக் காக்க இன்றைக்கு பயன்படும் பல அறுவை சிகிச்சை முறைகளை உருவாக்கிய பெருமை டாக்டர் ஒயிட்டை சேரும்.

ஆனால் அவரது இதுபோன்ற முயற்சிகள் கடுமையாக விமர்சிக்கப்படவும் செய்தன. அதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் தன் வாழ்நாள் முழுவதும் புதிய மருத்துவ முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார். நூற்றுக்கணக்கான பரிசோதனைகளை செய்தார். இருப்பினும் அவர் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்த குரங்கு சில நாட்களிலேயே இறந்துவிட்டதால் ஒயிட்டின் இந்த சாதனை குறுகிய காலம் வரை மட்டும் பேசப்பட்டது.https://www.baltana.com/files/wallpapers-14/Human-Brain-HD-Wallpapers-36894.jpg

 

மனித மூளை உருவாக்கும் மில்லியன் கணக்கான இணைப்புகள், மனித உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டுக்குள் வைத்துள்ளன

மூளையை தண்டுவடத்துடன் இணைப்பதில் உள்ள சிக்கல்கள்

மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் முன்னேற்றங்களை கண்டு வந்தாலும், மூளையை மட்டும் மருத்துவர்களால் இன்னமும் மாற்றி அமைக்க முடியவில்லை.

ஒரு நபர் மூளை மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக வைத்து கொண்டால், அவருக்கு புதிதாக பொருத்தப்படும் மூளையை அவரின் முதுகு தண்டு வடத்துடன் இணைப்பது இயலாத காரியம் என்பதுதான் இதில் உள்ள சிக்கல்.

இதனால் தான், “இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சிக்கலான உறுப்பாக மூளை கருதப்படுகிறது”.

உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூளை, தன்னுடன் பல மில்லியன் கணக்கான இணைப்புகளையும் கொண்டுள்ளது.. உடலுறுப்புகள் உடனான மூளையின் தொடர்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மறுசீரமைப்பது என்பது இன்னும் நவீன மருத்துவ உலகின் வரம்பிற்குள் வராத விஷயமாகவே உள்ளது.

ஒரு வாதத்திற்காக மூளை மாற்று அறுவை சிகிச்சையை மருத்துவர்களால் செய்ய முடிவதாக வைத்து கொண்டால், அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களின் நினைவுகள் மற்றும் உணர்வுகள் என்னவாகும்? என்பன போன்ற விடை காணப்படாத கேள்விகளும் உள்ளன.

மருத்துவர் ஒயிட், மூளை மாற்று (அல்லது தலைமாற்று) அறுவை சிகிச்சைக்கு உட்படுத்திய குரங்குகளின் உடலிலும், சிகிச்சைக்கு பின் கழுத்துக்கு கீழே உறுப்புகளின் இயக்கம் முடங்கித் தான் போயின (Paralysed).

 

மூளை செல்கள் சிதைவு நிலையை குறிக்கும் பார்கின்சன் நோய்

உபரி நியூரான்கள்

தற்போதைய சூழலில், வெற்றிகரமான மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமில்லை எனும்பொழுது, தன்னைத் தானே மறுவடிமைத்து கொள்ளும் மூளையின் வியக்கத்தக்க திறனை கவனத்தில் கொள்வது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

நரம்பு செல்கள் என்றழைக்கப்படும் நியூரான்களுக்கு இடையேயான தொடர்பை மாற்றியமைப்பது, அவற்றை புதிதாக உருவாக்குவது மற்றும் நீக்குவது போன்ற செயல்பாடுகளின் மூலம் மூளை தன்னை மறுசீரமைத்து கொள்கிறது.

ஒரு கணித சமன்பாட்டிற்கு நாம் தீர்வு காண்பது, ஒயின் மது வகையின் பெயர் நம் நினைவில் நிற்பது, இனி நமக்கு தேவைப்படாதது என நாம் முடிவெடுக்கும் விஷயங்கள் நம் நினைவில் இருந்து அகன்றுபோவது என எல்லாமும் நியூரான்களின் செயல் தான்.

இவற்றை கொண்டு தன்னைத் தானே மறுசீரமைத்து கொள்ளும் மூளையின் வியக்கத்தக்க திறன் ‘பிளாஸ்டிசிட்டி’ என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில், மூளையில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து அது மீளவும் இந்த பிளாஸ்டிசிட்டி தான் காரணமாக உள்ளது.

அதேநேரம் பிளாஸ்டிசிட்டிக்கு இன்னொரு புறமும் (மறுபக்கமும்) உள்ளது. பார்கின்சன் அல்லது அல்சைமர் நோய் ஒருவருக்கு இருப்பதை இதனால் மறைக்க முடியும். இதனால் பல ஆண்டுகள் அல்லது தசாப்தங்களாக ஒருவருக்கு இந்த நோய்கள் இருப்பது கவனிக்கப்படாமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நியூரோஜெனிசிஸ் என்ற புதிய கண்டுபிடிப்பு

நியூரான்கள் அவற்றின் இணைப்புகளை மாற்றிக் கொள்கின்றன. ஆனால், செயலிழக்கும் அல்லது இறக்கும் நியூரான் செல்கள் மீண்டும் உருவாகின்றனவா என்ற கேள்விக்கு, இழக்கப்படும் நரம்பு செல்களுக்கு பதிலாக மற்றொன்றை ஈடாக்க முடியாது என்பதே பெரும்பாலோரின் பதிலாக இருக்கிறது.

இருப்பினும், மனிதனின் மூளையில் உள்ள ஸ்டெம் செல்களின் மூலம் தினந்தோறும் புதிய நியூரான்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ‘நியூரோஜெனிசிஸ்’ எனப்படும் இந்த செயல் நடைபெறுவதைக் கண்டுபிடித்தது நரம்பியல் மருத்துவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

துரதிருஷ்டவசமாக, நன்கு வளர்ந்த மனிதனின் மூளையில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இந்த நியூரோஜெனிசிஸ் எனும் திறன் தொடர்கிறது. இந்தப் பகுதிகளில் ஒன்று தான் மனிதனின் கற்றல் மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடைய ஹிப்போகாம்பஸ்.

உடற்பயிற்சி மற்றும் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ள உணவுகள் புதிய நியூரான்களின் உற்பத்தியை தூண்டலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் உடல் பருமன், முதுமை அல்லது நரம்பியல் கடத்தல் நோய்கள், புதிய நியூரான்கள் உருவாதலை குறைக்கலாம்.

எனவே, புதிய நியூரான்களின் உருவாக்கத்தை தீவிரமாக செயல்படுத்துவதன் மூலம், மூளையை மீண்டும் உருவாக்குவது என்பது, இன்று மருத்துவ அறிவியலுக்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

 (Shutterstock)

மனித மூளையில் உள்ள ஸ்டெம் செல்களின் மூலம் தினந்தோறும் புதிய நியூரான்கள் தோற்றுவிக்கப்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. ‘நியூரோஜெனிசிஸ்’ எனப்படும் இந்த செயல் நடைபெறுது குறித்த கண்டுபிடிப்பு நரம்பியல் மருத்துவத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாற்று அறுவை சிகிச்சை

இறக்கும் நியூரான்களை பிற செல்களை கொண்டு மாற்றி அமைக்கும் நுட்பமான சிகிச்சை முறையை நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் பல தசாப்தங்களாக செய்து வருகின்றனர்.

இந்த சிகிச்சை முறை, பல்வேறு நரம்பியல் நோய்களுக்கு சாத்தியமான தீர்வாக இருக்கலாம் என்று சோதனை அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.

நரம்பியல் தொடர்பான நோயான பார்க்கின்சன் நோய், ‘டோபமைன்’ எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நியூரான்களின் செயலிழப்பை கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. நியூரான்களின் செயலிழப்பு மூளையின் செயல்பாட்டில் குழப்பங்களுக்கும், சிக்கல்களுக்கும் வழி வகுக்கிறது.

இந்த சேதத்தை சரி செய்ய, டோபமைன் எனும் நரம்பியல் கடத்தியான வேதிப்பொருளை உற்பத்தி செய்யும் நியூரான்களின் மாற்று அறுவை சிகிக்ச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வகத்தில் இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகள் மற்றும் நோயாளிகளுக்கு, சிகிச்சைக்கு பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஆய்வக நிலையான இந்த சிகிச்சையை, மருத்துவமனைகளின் நிலைக்கு கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

ஏனெனில் இதுநாள்வரை, கருவின் திசுக்களில் இருந்து குறிப்பிட்ட ஒரு வரம்புக்குள் நியூரான்கள் பெறப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு நோயாளியின் இறந்த ஆயிரக்கணக்கான நியூரான்களுக்கு மாற்றாக தேவைப்படும் புதிய நியூரான்களை பெறுவதற்கான ஆதாரம் தேவை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

இதற்கு, ‘ஸ்டெம் செல்’ மருத்துவ தொழில்நுட்பம் தான் சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த வழி என்றும் கூறுகின்றனர் அவர்கள்.

இந்த முறையில் பெறப்படும் நியூரான்களை கொண்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தவுடன் சிக்கலான இந்த சோதனை முடிந்துவிடுவதில்லை. ஒருவருக்கு செலுத்தப்படும் புதிய நியூரான்கள் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதையும், அவை அருகில் உள்ள நியூரான்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தாக வேண்டும்.

இவை அனைத்துக்கு பிறகும், மூளையின் மீளுருவாக்க திறன் நரம்பியல் வல்லுநர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு இருக்கலாம். ஆனால் அறிவியலை நம்புங்கள் என்று கூறும் நிபுணர்கள், மூளையை போன்று அறிவியலும் நிபுணத்துவம் வாய்ந்தது என்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...