புதன், 20 செப்டம்பர், 2023

ஜிலேபி மீனில் ஆச்சரியம்.. இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே.. சர்னு உடல் எடை இறங்குதாமே.. சூப்பர் ஜிலேபி



ஜிலேபி மீன்களில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? விளக்கெண்ணெய் ஊற்றி இந்த கெண்டை மீனை சமைப்பார்கள் தெரியுமா?
மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்போதெல்லாம், அசைவப்பிரியர்களுக்கு கை கொடுத்து உதவுவது இந்த ஜிலேபி கெண்டை மீன்தான். காரணம், ஆறு, குளம் ஏரி போன்றவற்றில் இந்த மீன் நிறைய வளரும்.. "கடலின் கோழி" என்று இந்த ஜிலேபியை சொல்வார்கள்..
இதன் செதில்கள் பெரிதாக காணப்படும்.. உடல் இளம்மஞ்சள் நிறத்தில் இருந்தாலும், இதன் வயிறு மட்டும் வெள்ளைக்கலரில் இருக்கும்.. தமிழக குடும்பங்களில் மிகவும் பரிச்சயமான மீனாக ஜிலேபி உள்ளது.

சத்துக்கள்: கெண்டை மீன் என்று சொல்லப்படும் இந்த ஜிலேபியில், வைட்டமின் பி12, வைட்டமின் பி6, நியாசின், பாந்தேனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன.. அதனால்தான், கர்ப்பிணிகள் இந்த மீனை தவறாமல் சாப்பிட வேண்டும் என்பார்கள். ஆனால், 340 கிராம் மட்டுமே சேர்த்து கொள்ள வேண்டுமாம். அதுவும் டாக்டரின் அனுமதியுடன்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள மீன் என்பதால், சருமத்துக்கு நன்மை தருகிறது.. நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதால், முடக்கு வாதம் வருவதற்கான வாய்ப்புகளை இந்த மீன் குறைக்கிறது.. மலச்சிக்கல் இருப்பவர்கள் உணவில் ஜிலேபி மீனை சேர்த்து கொள்ளலாம். இதனால் மலச்சிக்கல் தீர்வதுடன், வயிறு கோளாறுகள், குடல் பிரச்சனைகள் நீங்கிவிடும்.. மூலநோய் உள்ளவர்களும் இதை சாப்பிட்டால், பாதிப்பு குறையுமாம்.

உடல் டையை குறைக்க நினைப்பவர்கள், அல்லது சீரான உடல் எடையை தக்க வைக்க நினைப்பவர்கள், ஜிலேபியை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். காரணம், ஏகப்பட்ட புரோட்டீன் இந்த மீனில் உள்ளது.. நீண்ட நேரத்துக்கு பசியும் எடுக்காது. கால்சியம் அதிகமுள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும், உறுதித்தன்மைக்கும் உதவியாக இருக்கிறது. புற்றுநோய் உருவாவதற்கான அபாயங்களும் குறைக்கப்படுகின்றன.

நச்சுத்தன்மை: இந்த மீனில் பாக்டீரியாக்கள் உள்ளதாக சமீபத்தில் கண்டுபிடிக்க ஆய்வுகளில் வந்துள்ளதாம். ஆறு அல்லது ஏரி நீரில் நச்சுத்தன்மையால், இந்த மீன்களிலும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறதாம். அதனால், எந்த இடத்திலிருந்து ஜிலேபி வளர்க்கப்பட்டது என்பதை அறிந்து வாங்குவது மிகவும் அவசியம். அதைவிட நன்றாக வேகவைத்து, முறையாக சமைத்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.. அதாவது, 20 முதல் 30 நிமிஷங்களாவது இந்த மீனை வேகவைத்து சாப்பிட வேண்டுமாம்.

ஜிலேபி வறுவல்: தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரைத்து, அதனுடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது, ஜிலேபி மீன்களை கழுவி சுத்தம் செய்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், சேர்த்து, தேங்காய் + வெங்காய விழுதினை இதில் கொட்டி கலக்க வேண்டும். பிறகு, சிறிது புளி கரைசல், கல் உப்பு சேர்த்து மொத்தமாக பிசைந்து, தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் ஜிலேபி வறுவல் ரெடி.
சிலர் இதனை தேங்காய் பால் ஊற்றியும் வறுப்பார்கள்.. சிறிது புளி தண்ணீர், சின்ன வெங்காயம், பூண்டு வைத்து இந்த 3 மூன்றையும் விழுதாக அரைத்துகொள்ள வேண்டும். இதனுடன் சுத்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகளை சேர்த்து, கெட்டியான தேங்காய் பால், மிளகாய் தூள், உப்பு, சேர்த்து கலக்கி, 30 நிமிடம் ஊறவைத்து வறுத்தால் ருசியான ஜிலேபி வறுவல் ரெடி.

இந்த ஜிலேபியில் வழக்கம்போல் மீன்குழம்பை செய்யலாம்.. சிலர் விளக்கெண்ணெய் ஊற்றி சமைப்பார்கள்.. ஒரு வாணலியில் விளக்கெண்ணெய், அதனுடன் சமையல் எண்ணெய் இரண்டையுமே ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தேங்காய் பால்: கடுகு, வெந்தயம், வெங்காயம் தக்காளி, ப.மிளகாய், உப்பு, புளி கரைசலை கொட்டி கொதிக்க விட வேண்டும். பிறகு தேங்காய், சோம்பு சேர்த்து அரைத்த விழுதை கொட்ட வேண்டும். குழம்பு நன்றாக கொதித்ததும், 2, 3 மாங்காய் துண்டு, கழுவி வைத்துள்ள மீன்களையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் ஜிலேபி குழம்பு ரெடி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...