நைரோபியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து மாத பெண் குழந்தை.
கள்ளச் சந்தையில் குழந்தையை விற்றதாக பிபிசி புலனாய்வில் கண்டறியப்பட்ட கென்ய மருத்துவமனை ஊழியர் குழந்தை கடத்தல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
நைரோபியின் மாமா லூசி கிபாகி மருத்துவமனையில் பணிபுரிந்த ஃபிரெட் லெபரான், மருத்துவமனையில் இருந்த ஆண் குழந்தையை $2,500-க்கு (இந்திய மதிப்பில் ரூ.2,08,024) விற்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டு வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பிபிசி ஆப்பிரிக்கா ஐ-இன் புலனாய்வைத் தொடர்ந்து ஃபிரெட் லெபரான் 2020இல் கைது செய்யப்பட்டார். குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக அவருடன் மற்றொரு மருத்துவமனை ஊழியரான செலினா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குழந்தை கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து செலினா விடுவிக்கப்பட்டாலும், குழந்தைகளிடம் அலட்சியமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக