ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

Kushi Review: கல்யாணமானாலே நீ செத்துட்ட.. விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் குஷி விமர்சனம் இதோ!

 

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, சமந்தா

இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்

இயக்கம்: ஷிவ நிர்வணா



சென்னை: இயக்குநர் ஷிவ நிர்வணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, பழம்பெரும் நடிகை லட்சுமி, வெண்ணிலா கிஷோர், சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இன்று வெளியாகி இருக்கிறது குஷி.

விஜய், ஜோதிகா நடித்த குஷி படத்தின் டைட்டிலை வைத்தது மட்டுமின்றி மணிரத்னம் ஃபேனாக ஹீரோவை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று அங்கே உயிரே பட பாணியில் ஒரு முஸ்லீம் பெண்ணை காதலிப்பது போல பேகமாக வலம் வரும் சமந்தாவை விப்லவ் எனும் விஜய் தேவரகொண்டா காதலிப்பது என ஏகப்பட்ட தமிழ் பட ரெஃபரன்ஸ்களுடன் இந்த படத்தை இயக்குநர் இயக்கி இருக்கிறார்.

Kushi Review in Tamil: Vijay Deverakonda and Samantha chemistry worked well

காஷ்மீரில் படத்தை எடுத்து விட்டு விஷுவல் ட்ரீட் இல்லாமல் இருக்குமா என்பது போல ஓபனிங்கே கண்ணை பறிக்கும் குஷி சமந்தா, விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் ஆன பின்னர், கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் அலைபாயுதே பாணி சண்டையை மையமாக வைத்தே இந்த படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர்.

குஷி கதை: BSNLல் வேலை பார்க்கும் சார்மிங்கான விப்லவ் காஷ்மீருக்கு செல்லும் போது சமந்தாவை பார்த்து காதலில் விழுகிறார். அவர், முஸ்லீம் பெண் என நினைத்து துரத்தி துரத்தி காதலிக்கிறார். பின்னர், அவர் பிராமின் பெண் என்பது தெரிய வருகிறது. அவரது அப்பா ஜாதகம், சம்பிரதாயத்தை எல்லாம் பார்ப்பவர் 

ஆனால், ஹீரோவின் அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது. இருவரும் திருமணம் செய்துக் கொண்டால் நரக வாழ்க்கையை வாழ்வார்கள் என சொல்லியும் கேட்காமல் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு சூப்பரான வாழ்க்கையை வாழ்ந்து காட்டுறோம் என பாய்ஸ் படத்தில் சித்தார்த், ஜெனிலியா சவால் விடுவது போல சவால் விட்டு வரும் இருவரும் என்ன என்ன சிக்கல்களை யதார்த்தமாக எதிர்கொள்கின்றனர். இறுதியில் என்ன ஆனது என்பது தான் இந்த குஷி படத்தின் கதை.

பிளஸ்: கீதா கோவிந்தம் படத்தில் பார்த்ததை விட செம க்யூட்டாக இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. சமந்தாவை ஒரு பக்கம் ரசிகர்கள் சைட் அடிச்சாலும் விஜய் தேவரகொண்டாவை தான் பலரும் சைட்  அடிக்கின்றனர் 

கல்யாணமானாலே நீ செத்துட்ட என்றும் Rip போடும் நண்பர்களின் கலாட்டாவும் கலக்கல். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பார்கள், மனைவிக்கு கணவனிடம் என்ன மாதிரியான அன்பு தேவை, மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன? சமூகத்தில் இருந்து குடும்பத்தில் குதிக்கும் பிரச்சனைகள் என திரைக்கதையை தெளிவாக ஏகப்பட்ட மணிரத்னம் பட ரெஃபரன்ஸை வைத்தே எழுதி இயக்கி அசத்தி இருக்கிறார் இயக்குநர். ஹேஷாம் அப்துல் வஹாபின் இசையில் பாடல்கள் அட்டகாசம். காஷ்மீர் அழகை ஒளிப்பதிவாளர் ஜி முரளி கண்களுக்கு இதமாக்கும் வகையில் கடத்தியிருக்கிறார்.

மைனஸ்: முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே குறைந்து காணப்படுவதும் பல படங்களில் பார்த்து சளித்துப் போன கணவன், மனைவி சண்டை யூகிக்கப்படும் கிளைமேக்ஸ் உள்ளிட்டவை படத்திற்கு மைனஸ்களாக மாறியுள்ளன

ஃபேமிலியுடன் ஜாலியாக பார்த்து இந்த வீக்கெண்டை கொண்டாட ஒரு படம் தேடினால் தியேட்டருக்குப் போய் குஷி படத்தை பார்த்து குஷியாகலாம்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...