புதன், 20 செப்டம்பர், 2023

யோசிச்சிருக்கீங்களா? பாம்பு தன்னைத்தானே கடித்தாலோ? விஷத்தை விழுங்கினாலோ இறக்குமா? உண்மை இதுதான்



பாம்பை கண்டால் படையே நடுங்கும்' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டு இருப்போம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பாம்புக்கு விஷத்தன்மை இருப்பது தான்.

உலகில் உள்ள ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தில் மிகவும் விஷத்தன்மை கொண்டது இந்த பாம்புகள் தான். இதனால் தான் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் கடித்து மனிதர்கள் பலியாகின்றன.

இப்படி பாம்புகள் கடித்து உடலில் விஷம் பாயும்போது மனிதர்கள், பிற உயிரினங்கள் இறப்பதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் பாம்புகள் தனது விஷத்தை விழுங்கினால் என்னவாகும்? தன் விஷத்தை விழுங்கும்போது பாம்புகள் இறக்குமா? இல்லை தொடர்ந்து உயிர் வாழுமா? என நாம் என்றாவது யோசித்தது உண்டா?

யோசிச்சிருக்கீங்களா? பாம்பு தன்னைத்தானே கடித்தாலோ? விஷத்தை விழுங்கினாலோ இறக்குமா? உண்மை இதுதான்!

சென்னை: பாம்பு தனது வாயில் சுரக்கும் விஷத்தை விழுங்கினாலோ அல்லது பாம்பு தன்னைத்தானே கடித்து கொண்டாலோ இறக்குமா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

‛பாம்பை கண்டால் படையே நடுங்கும்' என்ற பழமொழியை நாம் அனைவரும் கேட்டு இருப்போம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பாம்புக்கு விஷத்தன்மை இருப்பது தான்.

Can a poisonus snake die after swallow its venom or biting itself?  what is truth? details here

உலகில் உள்ள ஊர்வன இனத்தை சேர்ந்த உயிரினத்தில் மிகவும் விஷத்தன்மை கொண்டது இந்த பாம்புகள் தான். இதனால் தான் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் கடித்து மனிதர்கள் பலியாகின்றன.

இப்படி பாம்புகள் கடித்து உடலில் விஷம் பாயும்போது மனிதர்கள், பிற உயிரினங்கள் இறப்பதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் பாம்புகள் தனது விஷத்தை விழுங்கினால் என்னவாகும்? தன் விஷத்தை விழுங்கும்போது பாம்புகள் இறக்குமா? இல்லை தொடர்ந்து உயிர் வாழுமா? என நாம் என்றாவது யோசித்தது உண்டா?. அதேபோல் பாம்பு தன்னைத்தானே கடித்து கொண்டால் என்னவாகும்?

இப்படி யாராவது யோசித்து இருந்தாலோ அல்லது இந்த விஷயத்தில் சந்தேகம் இருந்தாலோ? அவர்களுக்கான செய்தி தான் இது. வாங்க பாம்புகளின் விஷம் எப்படி உருவாகிறது. அந்த விஷம் மனிதர்களுக்கு எமனாக எப்படி மாறுகிறது? தன்னைத்தானே கடித்து பாம்புகள் தற்கொலை செய்து கொள்ளுமா? என்பது உள்ளிட்ட விஷயங்களை விரிவாக பார்ப்போம்

அதாவது பாம்புகளில் மொத்தம் 2 வகைகள் உள்ளன. ஒன்று விஷத்தன்மை வாய்ந்தவை. இன்னொன்று விஷத்தன்மையற்றவை. இதில் விஷத்தன்மையற்ற பாம்புகளை நாம் விட்டுவிடுவோம். மாறாக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை பார்ப்போம். பொதுவாக பாம்புகளுக்கு விஷம் என்பது அதன் வாயின் மேல்புறத்தில் உள்ள உமிழ்நீர் சுரப்பியில் இருந்து சுரக்கிறது.

இந்த விஷம் பொதுவாக பாம்புகளுக்கு 2 வகைகளில் பயன்படுகிறது. இதில் முதல் விஷயம் என்பது உணவுகளை செரித்து ஜீரணமாக்க பயன்படுகிறது. இதில் 2வது விஷயம் தான் முக்கியம். அது என்னவென்றால் தனக்கு ஆபத்து ஏற்படும்போது எதிரிகளான மனிதர்கள் அல்லது பிற விலங்குகளை கடித்து விஷத்தை கக்கி தப்பிப்பது.

சரி இது இருக்கட்டும். அடுத்ததாக நாம் பாம்பின் விஷத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். பொதுவாக பாம்பின் விஷம் என்பது புரோட்டின் நிறைந்ததாக இருக்கும். அதில் பாலிபெப்டைட்ஸ் (Polypeptides) இருப்பின் அது கொடிய விஷத்தன்மையுடன் கொண்டாகும். இந்த விஷத்தில் இருக்கும் பாலிபெப்டைட்ஸ், ரத்தத்தில் கலந்தால் மட்டுமே மனிதன் உள்ளிட்ட உயிர்களுக்கு பிரச்சனை ஏற்படும். அதாவது பாம்பின் விஷம் நம் ரத்தத்தில் கலந்தவுடன் உடலில் உள்ள திசுக்கள் அதனை உறிஞ்சிக்கொள்ளும். இதுதான் மரணத்தை ஏற்படுத்தும்.

அதேவேளையில் பாம்பு தனது உமிழ்நீரில் சுரக்கும் விஷத்தை விழுங்கினால் அது நேரடியாக அதன் வயிற்றுக்குள் செல்லும். அப்படி செல்லும்போது பாம்புகள் இறந்து விடாது. ஏனென்றால் வயிற்றுக்குள் சென்ற விஷத்தை அங்கிருக்கும் ரசாயனங்கள் ஜீரணித்து விடும். இதனால் பாம்புகள் தொடர்ந்து உயிர் வாழும். அதேவேளையில் பாம்பு தன்னைத்தானே கடித்து விஷத்தை கக்கினால் அது நேரடியாக ரத்தத்தில் சேர்ந்து விடும். இதுபோன்ற சம்பவங்களில் பாம்புகள் இறந்து போய்விடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில் பல பாம்புகள் தன்னைத்தானே கடித்து கொண்டு இறந்துள்ளன. பெரும்பாலான பாம்புகள் தங்களின் வால் பகுதியை கடிப்பதன் மூலம் ரத்தத்தில் விஷம் கலந்து இறந்துள்ளதாம். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் என்பது பசி, மனச்சோர்வு, ஆக்ரோஷம் உள்ளிட்ட பிரச்சனைகளை பாம்பு சந்திக்கும்போது தான் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...