புதன், 20 செப்டம்பர், 2023

கால்களோடு கடற்கரையில் நடந்து சென்ற மீன்" டிரெண்டாகும் அதிசய மீனின் புகைப்படம்; எங்கே உள்ளது?

 


வழக்கமாக மீன்கள் நீந்துவதற்கு ஏதுவாக துடுப்புகள் போன்ற அமைப்பு மீனின் உடலில் இருப்பதைப் பார்த்திருப்போம். துடுப்புகளுக்குப் பதிலாக கால்களோடு மீன் ஒன்று தென்பட்டுள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள ப்ரிம்ரோஸ் சாண்ட்ஸ் கடற்கரையில் கெர்ரி யாரே என்பவர் சென்றிருக்கிறார். அப்போதுதான் அவர் கால்கள் கொண்ட மீனைப் பார்த்திருக்கிறார்.

ஓடும்போது அனைத்து உயிரினத்தையும் கவனிக்கும் பழக்கமுடைய இவர், அன்றும் அப்படித்தான் கடற்கரையில் இருந்த உயிரினங்களைப் பார்த்திருக்கிறார். ஆனால் அதிசயமாக மீன் ஒன்று வித்தியாசமாகச் சென்றிருக்கிறது.

சற்று மணற்பரப்பை உற்றுப் பார்த்தபோதே கறுப்பு புள்ளி கோள மீன்( puffer fishஒன்றுக்கு கால்கள் இருந்ததை கவனித்திருக்கிறார். இது ஓர் அற்புதமான தருணம் என அதைப் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த மீன்கள் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட நிலையில், 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த மீன் தென்பட்டிருக்கிறது.

இது குறித்து காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் (சிஎஸ்ஐஆர்ஓ) கார்லி டெவின் கூறுகையில், ``இந்த மீன் உள்நாட்டில் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. அழிந்து வரும் கடல் மீன்களின் பட்டியலில் இந்த மீனும் பட்டியலிடப்பட்டு இருந்தது. 

கடந்த வார இறுதியில் இம்மீன் கண்டறியும் வரை, ப்ரிம்ரோஸ் சாண்ட்ஸில் உள்ள புள்ளிகள் கொண்ட கோள மீன்களின் எண்ணிக்கை உள்நாட்டில் அழிந்துவிட்டதாகவே  நாங்கள் நினைத்தோம். 

2005-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த மீன்கள் இருந்தன. அதன்பின் சில ஆண்டுகளுக்கு முன்பு தேடிப் பார்த்ததில் ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. தற்போது நடப்பதுபோன்ற மீன் தென்பட்டிருப்பது மீண்டும் தேடுவதற்கான காரணத்தை அளித்திருக்கிறது.

சில உயிரினங்கள் கடலின் அடிவாரத்தில் நடக்கத் தங்களது கால்களைப் பயன்படுத்தும். கடற்கரையில் இம்மீன்களை அதிகமாகப் பிடிப்பது மற்றும் மற்ற கடல் உயிரினங்கள் இதன் வாழ்விடங்களை ஆக்கிரமித்ததே இவ்வகை மீன் இனம் அழிந்ததற்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.


அதுமட்டுமில்லாமல் இவை அளவில் சிறியதாகவும், தனித்து வாழும் தன்மையுடன் இருப்பதால் இவற்றைக் கண்டறிவதும் கடினம். இந்த இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அவற்றின் இயற்கையான வாழ்விடங்கள் அழிக்கப்பட்ட நிலையில், செயற்கையான முட்டையிடும் வாழ்விடங்களை அறிமுகப்படுத்த நீர் உயிர்வளர்ப்பகங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.   

இது மீன்களின் அழிவைத் தடுக்கும். இங்கு இனப்பெருக்கம் செய்வதோடு, சிறிய மீன்கள் சற்று வளரும் வரை பாதுகாப்பாக வைக்கவும் உதவும். காடுகளில் மீன்களின் எண்ணிக்கையை விரைவில் அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையில், அவற்றை ஆறுகளில் விட உள்ளோம்'' தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...