செவ்வாய், 26 டிசம்பர், 2023

                                        

கல்வி ஒரு அறிமுகம்                                     

 கல்வி என்பது எங்கு எப்போது  தோன்றியது என்றால் அது பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்திலியே கல்வியும் தோன்றிவிட்டது.கல்வியின் தோற்றம் என்பது இந்த பூமியில் உயிர்கள் தங்கள் உயிர்களை காத்துக்கொள்ள இயற்கையகவே இயற்கையால் உருவாக்கப்பட்டதுதான் கல்வி.ஒரு உயிர்க்கு  இயற்கை பேரிடராலோ, அல்லது மற்ற உயிரங்களாலோ பாதிப்பு ஏற்படும்போது அதன் உயிரை எப்படி காத்துக்கொள்வது என்ற புள்ளியிலிருந்து அனுபவம் சார்ந்த கல்வி அடுத்த அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.இந்த அனுபவம் சார்ந்த கல்வி இல்லை என்றால் இன்று இந்த பூமியில் எந்த உயிர்களும் இருந்திருக்காது.

ஒரு உயிரின் பரிணாம மாற்றத்திற்கு இந்த அனுபவ சார்ந்த கல்வியானது எப்படி செயல்படுகிறது என்றால் ஒருஉயிரானது  இயற்கை விபத்தில் சிக்கி உயிர் பிழைக்கும் போது ஒரு புது  விடையத்தை கற்று மறுபடி அதேபோல் ஒரு நிகழ்வு நடந்தால் எப்படி சமாளிப்பது என்ற  அறிவை பெறுகிறது அந்த அறிவை அது அடுத்த தலைமுறைக்கும் கற்று கற்றுக்கொடுக்கிறது.அதிலும் சில விடயங்கள் மரபணுநினைவகத்தில் அதாவது (genetic memory) இல் இயற்கையாகவே பதியவைக்கபடுகிறது .இதனை மரபணு நினைவாற்றல் என்று கூறுவார்கள்.ஒரு அனுபவம் சார்ந்த அறிவு எப்படி ஒரு உயிரினத்தின் மரபணு மூலம் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றால் சில கோடி வருடங்களுக்கு முன்னாள் டைனோஸரஸ் என்ற உயிரினம் இந்த பூமியில் வாழ்ந்தது நமக்கு தெரியும். அதனுடைய பரிணாம வளர்ச்சி தான் இன்று பூமியில் வாழும் பறவை இனம் என்றால் நம்ப முடிகிறதா.இந்த  மிக பெரிய மாற்றத்திற்கு காரணமே அனுபவம் சார்ந்த  கல்வியும் அதனால் ஏற்பட்ட மரபணு மாற்றமும் தான் காரணம்.


 கல்வியானது மனிதர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல.கல்வி அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று.இந்த அனுபவம் சார்ந்த கல்வி அறிவால்தான் இன்று பூமியில் வாழும் உயிரினங்கள் நிலைத்து வாழுகின்றன.இந்த அனுபவம் சார்ந்த கல்வி அறிவுதான் வேட்டை விலங்குகளின் வேட்டை தன்மையை மேம்படுத்தி அதற்கான உடலமைப்பு போன்றவற்றை மேற்படுத்தியுள்ளது.அதே போல் வேட்டை விலங்குகளிடம் இருந்து தங்கள் உயிரை காத்து கொள்ளவும் சில விலங்குகள் அதற்கேற்ப அதன் அனுபவம் சார்ந்த கல்வியையே பயன்படுத்தி இந்த பரிணாம வளர்சியில் தன்னை தானே மேப்படுத்தி இன்னும் உயிர் வாழுகின்றது.இந்த பூமியில் வாழும் அணைத்து உயிர்களுக்கும் எதோ ஒரு விதத்தில தற்காப்பிற்கு தனிப்பட்ட முறையில் அதனதன் உடலில் இயற்கையாகவே  ஆயுதமோ அல்லது மற்ற திறமிக்க தனிப்பட்ட ஒரு விசேஷ சக்தி ஒன்று இருக்கும்.அனால் மனிதனுக்கு அதுபோல் எதுவும் இல்லை. அவனுக்கு இருந்தது மேம்பட்ட சிந்திக்கும் ஆற்றல் மட்டும் தான்.
 
அனுபவம் சார்ந்த கல்வி எப்படி  செயல்படுகிறது என்றால் இயற்கையால் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் ஒன்று மற்றொன்றை சார்ந்துள்ளது .ஒரு சிங்கமானது அதன் பசிக்கு ஒரு விலங்கை வேட்டையாடும் போது அதனை பார்க்கும் மத்த மிருகங்கள் அனுபவரிதியாக சிங்கம் என்றால் உயிர்களை கொன்று உணவாக உட்கொள்ளும் ஒரு வேட்டை பிராணி என்று பார்த்து தெரிந்து கொண்டு அதனை அதன் அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுக்கிறது.

இன்னும் சொல்ல போனால் மனிதனுக்கு  சிந்திக்கும் திறன் எப்போது தொடங்கியது என்றால்  அவன் உணவை எப்போது  சமைத்து உட்கொள்ள தொடங்கினானோ அதிலிருந்துதான் மனிதனின் சிந்திக்கும் திறன் வந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.இப்படி மாமிசத்தை நெருப்பு மூட்டி சமைத்து சாப்பிட மனிதனுக்கு  கற்று கொடுத்ததே இயற்கை தான்.இதே இயற்கைதான் மனிதனுக்கு நெருப்பை உருவாக்கவும் கற்றுக்கொடுத்தது.


நெருப்பை உருவாக்க தொடங்கிய மனிதன் அதை எப்படி உருவாக்குவது என்பதில் தொடங்கி இன்று பூமியில் முதல்  விண்வெளி வரை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு மனிதன் முன்னேறிருக்க காரணம்  இந்த அனுபுவம் சார்ந்த கல்விதான் காரணம்  . பூமியில் வாழும் அணைத்து உயிர்களும் சிந்திக்கும் திறன் படைத்ததுதான் ஆனால் மனிதர்கள் மட்டும் அறிவு வளற்சியில் முதன்மையானவர்களாக திகழ காரணம் மனிதர்கள்  கூட்டமாக வாழக்கூடியவர்கள்.இப்படி கூட்டமாக வாழ்வதன் மூலம்  தங்கள் அனுபவ அறிவை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளமுடிந்தது.இந்த பரிமாற்றம் தான் மனிதர்களை இன்றளவும் அறிவில் முன்னோடியா இயற்கை வைத்திருக்கிறது .

இன்று மனிதர்கள் பையிலும் கல்வியில் பல பிரிவுகள் உள்ளது.1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை அனைவருக்கும் தமிழ் ,ஆங்கிலம் ,கணிதம் , அறிவியல் ,சமுக அறிவியல் மற்றும் விளையாட்டு என்ற பொதுவான ஒரு படப்பிரிவுதான் இருக்கும்.10ம் வகுப்புக்கு பின் 11மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுவான பாடப்பிரிவிகள் இல்லாமல் உயர்நிலை கல்வி வழங்கும்  நோக்கத்தில் முக்கியம் என்று ஒரு சில பாடத்தை தேர்ந்தெடுத்து அவற்றை தனித்தனி பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.இங்கு நாம் தேர்தெடுக்கும் பிரிவை பொறுத்துதான் நமது கல்லூரி கல்வி அமையும் இது தான் இன்று நாம் பின்பற்றும் கல்வி முறை ஆகும்.

இன்று நாம் கற்கும் இந்த கல்வி முறை எப்படி வந்தது என்று யாராவது எண்ணியது உண்டா ஒரு இயந்திர பொறியியல் அதாவது (mechanical  engineering) என்ற ஒரு பாடத்தை எடுத்து கொள்வோம் இந்த இயந்திர பொறியியல் பாடம் என்பது எப்படி தோன்றியது இயந்திரங்கள் கண்டுபிடித்த பின்புதான் இயந்திரவியல் என்ற ஒருபாடப்பிரிவை நாம் இன்று கல்லுரியில் பயிலுகிறோம் அப்போது இயந்திரங்கள் கண்டுபிடிக்காதபோது இயந்திரவியல் என்ற ஒரு பாட பிரிவு இருந்திருக்குமா        

                                                                                     by 
                                                                                    Raj 
 


 
  

 

 

 
 

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

இம்சை அரசன் 1ம் புலிகேசி 2

                   இம்சை அரசன் 1ம் புலிகேசி (2) 

பேருரை நோக்கி நடக்க ஆரமிச்சி தவுடுக்கு பசி எடுக்க ஆரமிச்சது. உடனே எங்கட உட்காந்து சாப்பிடறது யோசிக்கிட்டே கொஞ்ச தூரம் நடந்தான் தவுடு.கொஞ்ச தூரம் போன தவுடு ஒரு ஆத்தங்கரையை பாக்குற உடனே ஆத்தங்கரையை நோக்கி வேகமாக நடந்து போனான்.அங்க போய் பாத்த ராஜாவோட போருக்கு பயன்படுத்துர யானைங்க குதிரைங்க எல்லாத்தையும் படை வீரர்கள் குளிப்பாட்ட தவுடு அவன் கொண்டு வந்த சாப்பாட எடுத்து திறந்து வச்சிட்டு கை,கால் கழுவ ஆத்துல இறங்குன தவுடு அந்த நேரம் பாத்து பக்கத்துல இருந்த யானை ஒன்னு தவுடு திறந்து வச்ச சாப்பாட சாப்பிட கை கால் கழுவ போன தவுட கொஞ்ச நேரம் கழிச்சி வந்து பாத்த அவன் திறந்த வச்ச சாப்பாட்டை காணும் என்னடானு பாத்த இவன் சாப்டா வச்சிருந்த சாப்பாட பக்கத்துல இருந்த யானை சாப்பிட இத பாத்த தவுடுக்கு ஒரே கோவம் வேகமா அது கிட்ட போய் எப்படி என்னோட சாப்பாட நீ சாப்பிடலாம் ஒரு குத்து குத்துனா தவுடு குத்துன உடனே யானை பொத்துனு கீழ விழ அங்கிருந்த படைவீரன் ஒருத்தன் படை தளபதிகிட்ட போய் சொல்ல யானை குத்துன விஷயம் ஊர் முழுக்க பரவ உடனே தளபதியும் இந்த விஷயத்தை மன்னர்கிட்ட சொன்ன தளபதி.உடனே மன்னரும் அவனை கைது பன்ன சொல்லி உத்தரவு போட தவுட கைது செஞ்சி அரண்மனை கொண்டு போனாங்க.
 
வழக்கை விசாரிக்க மன்னர் வந்தார் மக்களும் கூடியிருந்தாங்க.தவுடு விசாரணை செய்ற இடத்துக்கு கொண்டுவரபட்டா.வழக்கை விசாரிக்க தொடங்கிய மன்னர் என்ன நடந்தது என்று கேட்க அதற்கு யானை குளிப்பாட்டுன வீரன் மன்னா இவ வந்து யானையை ஒரு குத்து குத்துனா யானை பொத்து கீழ விழுந்து செத்துப்போச்சி சொன்ன படைவீரன்.
 

உடனே மன்னர் தவுடை பார்த்து என்ன நடந்தது என்று கேட்டார் அதற்கு தவுடு மன்னா நா இந்த மாதரி சந்தைக்கு வந்த வந்து வேலைய முடிசிட்டு வீட்டுக்கு கெளம்பி போய்கிட்டிருந்த போகும்போது பசி தாங்க முடியாம சாப்பிடலாம்னு ஆத்துல இறங்கி சாப்பாட பிரிச்சி வச்சிட்டு
கை கால் கழுவ ஆத்துல இறங்கி கழுவிட்டு வந்து பார்த்த என்னோட சாப்பாடு எல்லாத்தையும் யானை சாப்டறிச்சி அதா கோவம் தாங்க முடியாம எப்படி என்னோட சாப்பாட நீ சாப்பிடலாம்னு ஒரு சும்மா தா குத்துன்னு யானை கிழ விழுந்திரிச்சி  என்று பயந்து கொண்டே சொன்னா  தவுடு.இத கேட்டு மன்னருக்கு ஒரே ஆச்சிரியம் எப்படி ஒரே குத்துல யானையை கொன்றுபா என்று எண்ணிக்கொண்டே சரி  இப்படி ஒரு வீரன்தான் எனக்கு வேணும் இந்த வீரனை நம்மளோட படையில சேத்துருங்க தளபதினு மன்னர் சொல்ல தளபதியும் சரினு சொல்லி படையில சேத்துக்கிட்டாரு . ஒரு நாள் மன்னர் தளபதியை கூப்பிட்டு நம்ம ஆட்டு பண்ணையில கொஞ்ச நாளா ஆடுங்க திருடு போகுது அத கண்டுபுடிக்க நல்ல வீரர்கள ஆட்டு மந்தைக்கு காவல் போடுங்க தளபதினு மன்னர் உத்தரவு போட்டாரு உடனே தளபதியும் சரினு சொல்ல அன்னைக்கு இரவு காவலுக்கு சில முக்கியமான வீரர்களை காவலுக்கு போட்டாரு தளபதி அந்த காவல்காக்கும் வீரர்கள் கூட்டத்துல தவுடு ஒரு ஆளு.தவுடுக்கு என்ன பண்றதுனு ஒன்னும் புரியல.
 
அந்த யானையை சும்மா தா குத்துன்னு அது எப்படி செத்துச்சுனு தெரியல இவங்க வேர இதுதான் சாக்குன்னு என்ன வேர ராணுவத்துல சேத்துப்புட்டாங்க எனக்கு சண்டையும் போட தெரியாது இன்னைக்கு எப்டியாச்சம் இங்க இருந்து தப்பிச்சி ஓடிடனும்முனு முடிவு பன்னி காவலுக்கு நின்ன தவுடு. அவ நெனச்சது போல நடுராத்திரி காவலுக்கு இருந்தவங்கள நல்லா தூங்க இதுதான் சரியான நேரம் இங்கிருந்து தப்பிக்கனு முடிவு பண்ணி மந்தையை விட்டு வெளிய போக அந்த நேரம் டக்குனு ஒரு யோசனை தவுடு  மண்டையில நம்ம சும்மா போறதுக்கு பதிலா போகும்போது ஒரு நல்ல ஆடா பாத்து தூக்கிட்டு போய்டலாம்னு முடிவு செஞ்சி ஆட்டு மந்தைக்குல போன தவுடு அந்த இருட்டுல ஆடு மாதரி குணிஜிக்கிட்டு ஒவொரு ஆடா தடவி பாக்க எந்த ஆடும் பெருசா இல்ல டக்குனு அவனோட கை ஒரு ஆடு மேல பட்டது.நல்ல பெருசா இருந்துது சரி தூக்கிட வேண்டியதுதான் முடிவு பண்ணி அந்த ஆட தூக்கி தோளுல வைக்கவும் பக்கத்துல இருந்த ஆடுங்க எல்லாம் சத்தம் போட சத்தம் கேட்டு ஒரு காவலாளி மட்டும் எழுந்து பாக்க ஒரு உருவம் ஆட தூக்கிட்டு போறத பாத்துட்டு  திருடன் திருடனு கத்த மத்த காவலாளிகளும் எழுந்து ஓடி போய் திருடனை புடிச்சி அரண்மனைக்கு கொண்டு போக அரசரும் எழுந்து வந்து திருடனை பார்த்து ஒரு நிமிஷம் அதிரிச்சி ஆயிட்டாரு உடனே யானையை கொன்ற வீரன் நீயா என்று கேட்க உடனே பக்கத்துல இருந்த சி காவலாளிகள ஒருத்த மன்னா கொஞ்சம் மேலே பாருங்கனு சொல்லி தீ  பந்தத்தை காட்ட மன்னர்க்கு இனொரு அதிர்ச்சி என்ன தவுடு ஆட்டு மந்தையில தூக்குனது ஆடு இல்ல இதனை நாளா அங்க இருந்த ஆடுகளை வேட்டையடிக்கிட்டு இருந்த புலி.அந்த புலியை பார்த்ததும் மன்னர் ஒரு நிமிடம் பயந்து போய் தவுட பார்த்து நீ பலே ஆளுதாயானு பாராட்ட தவுடுக்கு ஒன்னும் புரியல என்னது அப்ப நா தூக்குனது ஆடு  இல்லையா இது புலியா என்று அழுகை கலந்த சிரிப்போடு சிரிக்க தவுடக்கு ராணுவத்துல பதவி உயர்வு கெடச்சிது.தவுடுக்கு ஒன்னுமே புரியல நம்ம ஒன்னு நெனச்ச அது ஒன்னு நடக்குதுனு நெனசிகிட்டே எப்டியச்சம் இங்க இருந்து தப்பிச்சி ஓடிடனும் னு முடிவுல இருந்தா தவுடு.இப்டியே ஒரு வருஷம் ஓடிப்போச்சி.
 
திடீர்னு ஒரு நாள் பக்கத்துக்கு நாட்டு அரசன் போர்தொடுத்து வர மன்னரும் அவரோட படைகளை திரட்டிக்கிட்டு போர் பூமிக்கு போனாரு.இரண்டு நாட்டு படைகளும் சண்டைக்கு தயாரா இருந்தாங்க.அந்த நேரம் பாத்து தவுடு வந்து மன்னா இந்த போர்ல முதல் வீரனா நா போறன் என்னை ஒரு குதிரைல கீழ விழாத அளவுக்கு கட்டி குதிரைக்கு பின்னால ஒரு சூடு போடுங்க மத்தத நா பாத்துக்குறனு உடனே அரசரும் ஏன் கூட கேட்காம தவுடு சொன்ன மாதரி செய்ய குதிரை வலி தாங்க முடியாம வேகமா எதிரி நாட்டு படைகளை நோக்கி வேகமா ஓட தவுடுக்கு ஒரு பதற்றம் குதிரைக்கு சூடு வச்ச வேகத்துக்கு வேற எங்கியாவது ஓடுன்னு பார்த்த இது என்ன எதிரி படைக்கிட்டே போகுதே புலம்ப குதிரையோ வலி தாங்க முடியாம வேகமா ஓட அந்த நேரம் பார்த்து ஒரு வீனா போன பனைமரம் மேல இருந்த கீழ வரைக்கு உள்ளாரா பொந்து அடிச்சி போய் காத்துல எப்ப வேணும்னாலும் கிழே விழுந்திரலாம் போலனு இருந்த பனைமரத்தை தவுடு புடிக்க பனைமரம் அடியோடு பேத்துக்கிட்டு வர எதிரி நாட்டு படைவீரர்கள் எல்லாம் டேய் யாருடா இவன் பனைமரத்தையே புடிங்கிகிட்டு வரணு பயந்து ஓட பயந்து ஓடுன படைகளை ஓடஓட விரட்டி போர்ல வெற்றியை கைப்பற்றுனாங்க தவுடும் அவனோட படைகளும்.
 
போர்ல வெற்றியை  வாங்கி குடுத்தது நீதான் தவுடுனு தவுட பாராட்டி தவுடுக்கு மன்னரோட 3 பொண்ணுகளை கட்டி கொடுத்து தவுட  நாட்டோட அரசனா நியமிக்க தவிடும் நாட்டின் அரசான ஆனா.தவுடோட மூத்த பொண்டாட்டி ரெண்டு பேரும் அவங்க கிராமத்துல இருந்தாங்க ஆனா தவுடு அரண்மையில சநதோஷமா இருந்தான்.
 
சோம்பேறி தனத்தால வயலுல சரியா பயிர் செய்யாம வேலை செய்யாம சோம்பேறி தனத்தால வந்த வறுமையை போக்க மாடு விக்க பட்டணத்துக்கு போய் ராஜாவன கதை       
 
       

                                                                 

சனி, 16 டிசம்பர், 2023

இம்சை அரசன் 1ம் புலிக்கேசி

                     இம்சை அரசன் 1ம் புலிக்கேசி (1) 

 
 

முன்னொரு காலத்துல  பேரூர்னு  ஒரு அழகான கிராமம் இருந்தது.அந்த கிராமத்தை சுத்தி எங்கு பார்த்தாலும் நீரோடைகளும்,ஆறுகளும்,ஏரிகளும் நிறைந்து காணப்பட்டது.



 அந்த கிராமத்துல இருந்த ஒரு விவசாயி இருந்தாரு அவரு பேரு முனியாண்டி.அந்த முனியாண்டிக்கு கல்யாணம் பண்ற வயசுல ஒரு மகன் இருந்தான் அவன் பேரு தவுட்டுக்கல்லை.இந்த தவுட்டுக்கல்லை ரொம்ப சோபேரிதனமான ஒரு ஆளு.ஒரு நாள் தவுட்டுக்கல்லை அப்பா முனியாண்டிக்கு உடம்பு சரி இல்லாம போயிடுது உடனே முனியாண்டி தன்னோட பையனை நெனச்சி வருத்தப்பட தொடங்கினரு.முனியாண்டிய பாக்க ஊர் மக்கள் எல்லோரும் முனியாண்டியை பாத்து உன்னோட காலம் அவ்ளோதா.நீ போனதுக்கு அப்பறம் உன்னோட புள்ளைய பாத்துக்க யாரும் இல்ல.அதனால அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிருனு சொல்லிட்டு போக உடனே முனியாண்டியும் தவுட்டுக்கல்லைக்கு பொண்ணு பாக்க ஆரமிச்சாங்க.
எங்கு தேடியும் சரியா வரன் அமையல.மகனுக்கு எங்கு தேடியும் பொண்ணு கெடைக்கலனு ஆழ்ந்த சோகத்துல இருந்தாரு முனியாண்டி.
 
ஒரு நாள் முனியாண்டிக்கு ஒரு தரகர் ஒருத்தரு ஆத்துக்கு அக்கரைல ஒரு கிரமம் இருக்கு அங்க போன உன்னோட பையனுக்கு பொண்ணு கேடிக்கும்னு சொல்ல உடனே முனியாண்டியும் அவரோட பையன் தவுட்டுக்கல்லையும் பொண்ணு பாக்க அந்த கிராமத்துக்கு கெளம்புனாங்க.
முனியாண்டியோட சொந்தக்காரங்க கொஞ்சபேரு  கிராமமக்கள் கொஞ்சப் பேருனு ஒரு கூட்டமே கெளம்பி வண்டி கட்டிக்கிட்டு போனாங்க.  

பொண்ணு பாக்க போன இடத்துல பொண்ணோட அப்பா எனக்கு ரெண்டு பொண்ணு.பொண்ணுக்கு அம்மா இல்ல.அதுங்க ரெண்டு ரெட்டை புள்ளைங்க அதுங்க பொறந்து கொஞ்ச நாளிலே அவங்க அம்மா செத்துபோச்சி.பொறந்ததுல இருந்து இரண்டு பேரு பிரிஞ்சி இருந்ததே இல்ல.அதனால என்னோட ரெண்டு பொன்னையும் உங்க பயனுக்கே தரேன்னு சொல்லிட்டாரு பொண்ணோட அப்பா.இத கேட்ட முனியாண்டிக்கு ஒரே மகிழ்ச்சி சரினு முனியாண்டியும் ஒத்துக்கிட்டாரு .உடனே திருமண வேலைகள் நடக்க தொடங்கி எல்லா வேலைகளும் ஒரு மாசத்துல முடிஞ்சிடிச்சி கல்யாண  நாளும் வந்துச்சி .
 



 கல்யாண நாள் அன்னைக்கு தவுட்டுக்கல்லைக்கும் அங்கவை மற்றும் சங்கவை என்ற இரட்டையருக்கும் கல்யாணம் நடந்துச்சு  கல்யாணத்துக்கு வந்த ஊர் மக்கள் எல்லோரும் தவுட்டுக்கல்லைக்கு எங்கியோ மச்சம் இருக்குடா பாரே ஒரே மேடைல அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்கும் தாலிகட்டுற பாரன் ம்ம்ம் என்று முதலிரவுல எப்படி ட என்றும் ஆளாளுக்கு பேசிக்கொள்ள இங்கு கல்யாணம் முடிஞ்சி எல்லோரும் வீட்டுக்கு புறப்பட்டாங்க.கல்யாணம் முடிஞ்ச கையோட முதலிரவுக்கு நேரம் குறிக்க சொல்லி ஜோசியரிடம் கேட்டாரு முனியாண்டி.ஜோசியரும் ஒரு நல்ல நேரத்தை குறிச்சி கொடுத்தாரு.அதன் படி தவுட்டுக்கல்லைக்கு திருமண வாழ்க்கையை அமைச்சு கொடுத்த கொஞ்ச நாளிலே முனியாண்டியும் செத்துபோய்ட்டாரு. இப்ப வீட்ல தவுட்டுக்கல்லையும் அவனோட ரெண்டு பொண்டாட்டியும் தான்.வாழ்கை பொறுப்பு முழுசா தவுடு தலைல.

கொஞ்ச நாள் கழிச்சி தவுடு ஒரு நாள் நா  வயலுக்கு போரனு அவோனோட ரெண்டு பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு ஏர்கலப்பை தூக்கி தோளுல  வசிக்கிட்டு ரெண்டு வண்டி மாடையும் புடிச்சிகிட்டு  வயலுக்கு போன தவுடு.வயலுக்கு போன தவுடு ரெண்டு மாடையும் ஒரு  அரசமரத்தடியில கட்டிட்டு படுத்து தூங்க ஆரம்பிச்சான் பகல் ஒரு மணிக்கு எழுந்து சாப்டுட்டு திரும்பவும் படுத்து தூங்கி சூரியன் மறையும் போது எழுந்து  ரெண்டு மாடையும் ஓடிக்கிட்டு போய் சேத்துல இறக்கி மாடு மேல கலப்பை மேலலா  சேரு பூசிக்கிட்டு வேல செஞ்ச மாதரி வீட்டுக்கு போவா.இத பார்த்த அவோனோட ரெண்டு பொண்டாட்டியும் அயோ புருஷன் இவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு வராருனு தவுடுக்கு சுடு தண்ணி வச்சி குளிப்பாட்ட மீன்,கறினு விதவிதமா சமைச்சி போட்டாங்க தலைவன் தவுடு நல்ல சாப்பிட்டான்.இப்டியே ரொம்ப நாள் போச்சி வயலுல பயிர்களா நல்ல வளந்து அறுவடைக்கு  வந்த நேரம்.தவுடோட ரெண்டு மனைவியும் தவுடு கிட்ட போய் ஏங்க எல்லோரும் வயலுக்கு நெல் அறுக்க போறாங்க.நீங்களும் ரொம்ப கஷ்டபட்டுடிங்க அதனால நம்ம வயல் எங்க இருக்குனு சொன்ன நாங்க ரெண்டு பேரும் போய் நெல்ல அறுக்குறோம் சொல்ல தவுடுக்கு மனசுக்குள்ள ஒரே பயம்.ஏன்னா தவுடு வயலுல பராமரிப்பு இல்லாம எதுவுமே வெளையாம வெறும் கோரா புள்ளவும் அங்கங்க கொஞ்ச நெல்லுமா இருந்துச்சி அதனால  பயந்துகிட்டு அவோனோட வயலை சொல்றதுக்கு பதிலா பக்கத்துல வேறொருதொரட வயலுக்கு வழி சொன்ன தவுடு 

உடனே தவுடு இங்கிருந்து நேரா போன ஒரு முருகன் கோவில் வரும் அங்க இருந்து கிழக்கு பக்கமா கொஞ்ச தூரம் போன ஒரு அரச மரம் வரும் அந்த அரச மரத்துக்கு பக்கதுல ஒரு வாய்க்கால் ஒன்னு போகும் அந்த வாய்கால் பக்கத்துல வண்டி பாத ஒன்னு போகும் அது மேலே போன பணத்தோப்பு வரும் அதுகிட்ட ஒரு அரச மரம் வரும் அந்த அரச மரத்துக்கிட்ட ஒரு வயல் இருக்கும் அந்த வயலுல ஒன்னுமே வெலையாம வெறும் கோரா புள்ள இருக்கும் அது நம்ம வயல் இல்ல அதுக்கு பக்கத்துல ஒரு வயல் நல்ல ஆள் உயரத்துக்கு நெல் வெளஞ்சி இருக்கும் அந்த வயல்தா நம்பளோடது னு சொல்ல உடனே அங்கவையும் சங்கவையும் கோணி,அருவாள எடுத்துக்கிட்டு தவுடு சொன்ன அந்த இடத்துக்கு போய் நெல் பயிறுகளை அறுக்க.அந்த வயலோட சொந்தக்காரர் நெல் அறுக்க ஊரு முழுக்க ஆள் தேடியும் யாரும் கிடைக்காம சோகத்துல வயலுக்கு போனாரு.


 வயலுக்குசொந்தக்காரர் போனவருக்கு ஒரே ஆச்சிரியம் நம்ம ஊரு முழுக்க ஆள் தேடியும் யாருமே கிடைக்கல ஆனா இங்க ரெண்டு பொண்ணுங்க நெல்ல அறுத்து வசிருக்காங்களே போய் விசாரிப்போம் அப்டினு போய் யாரு மா நீங்க என்னோட வயலுல  பண்றிங்க அப்டினு கேட்டாரு வயலோட சொந்தக்காரர் கேட்க அதுக்கு அந்த ரெண்டு பொண்ணுங்களும் நாங்க ரெண்டு பேரும் தவுட்டுகளையோட பொண்டாட்டி அவருதா போய் இந்தமாதிரி நம்மக்கு அந்த இடத்துல ஒரு வயல் இருக்கு நீங்க ரெண்டு பெரும் அங்க போய்  நெல்லு அறுத்துவைங்க நா வரணு  சொன்னாரு அப்டினு சொன்னாங்க தவுடோட பொண்டாட்டி ரெண்டு பேரும்.இத கேட்டு அதிர்சி  அடைந்த வயலோட சொந்தக்காரர் இந்தம்மா நீ வந்ததுலா  சரிதான்  ஆனா தவுடோட தோ இருக்கு பாரு அதா அவோனோட வயலை காண்பிச்சி நீங்க வேற ரொம்ப கஷ்டப்பட்டு நெல் அறுத்து வச்சிருக்கிங்க அதுக்கு இந்த மா கூலினு ஆளுக்கு ரெண்டு மூட்ட நெல்லு குடுத்தாரு அந்த வயலோட சொந்தக்காரர்.அந்த கூலியை வாங்கிட்டு போய் அவரு சொன்ன வயலை பார்த்த ஒரே கோர புல்லு மட்டும்தான் அது பாதர்தவுடனே அங்கவைக்கும் சங்கவைக்கும் சரியான கோவம்.இப்டி ஒருத்த கூட வாழ்ரத விட அவனை ஒரேயடியா கொன்றலனு தவுடோட ரெண்டு பொண்டாட்டியும் முடிவு பண்ணாங்க.
 
கொஞ்ச நாள் கழிச்சி தவுடு வீட்ல சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம் வந்துடிச்சி காரணம் தவுடோட சோம்பேறி தனம்தான்.சரி இதுக்கு அப்பறம் ரெண்டு வண்டி மாட வித்துடலாம்னு முடிவு பன்னி அவனோட ரெண்டு பொண்டாட்டிகிட்ட போய் நாளைக்கு காலைல நா ரெண்டு மாடையும் ஓடிக்கிட்டு பட்டணத்துக்கு போற அதற்கான ஏற்பட செய்ங்க சொன்னா தவுடு.இத கேட்ட தவுடோட ரெண்டு பொண்டாட்டியும் இதுதான் சரியான நேரம் இவன  கொலை  செய்ய முடிவு பண்ணி மறுநாள் காலையில எழுந்து தவுடுக்கு சாப்பாடு செய்ய அந்த சாப்பாட்ல விஷத்தை கலந்து குடுத்தாங்க தவுடோட ரெண்டு பொண்டாட்டியும்.


தவுடும் மாட்டு வண்டியில மாட பூட்டிஆக்கிவச்ச சோறு எடுத்துக்கிட்டு பட்டணத்துக்கு புறப்பட்ட தவுடு.
 
பட்டணத்துக்கு போன தவுடு பட்டணத்து பார்த்து ஒரே ஆச்சிரியம் .எங்க பார்த்தாலும் உயர உயரமனா கட்டிடடங்கள் கடைவீதிகள் லா  பார்த்து வியந்தான்.அப்போ அங்க வந்த ஒருத்தன் கிட்ட போய் ஐயா இங்க பெரிய சந்தை எங்க நடக்கும் அதுக்கு கொஞ்சம் வழி சொல்லுங்க னு கேட்ட தவுடு. உடனே பெரியவரும் என்ன தம்பி ஊருக்கு புதுசா எந்த ஊரு நீ கேட்டாரு .அதுக்கு தவுடு நா பேரூர் னு ஒரு கிராமத்துல இருந்து வரங்க சொல்ல அதுக்கு பெரியவரோ சந்தைக்கு என்ன விசியமா போறனு கேட்டாரு.அதற்கு நா இந்த மாடோட சேத்து இந்த வண்டியையும் விக்கபோறேன் கொஞ்சம் வழி சொல்லுக்கு ஐயான்னு கேட்டா தவுடு.உடனே அந்த பெரியவரும் சந்தைக்கு வழி காட்ட தவுடும் சந்தைக்கு போனான்.
 
சந்தைக்கு போன தவுடுக்கு ஒரே ஆச்சிரியம் விதவிதமான கடைகள் ,விதவிதமான மக்கள் கண்ட தவுடுக்கு ஒரே மகிழ்ச்சி.உடனே தவுடு வந்த வேலையை பாப்போம் என்று அந்த சந்தையில் மாடுகளை விக்குற இடத்துக்கு போய் அவங்களோடு நின்னுகிட்டு அவன் கொண்டுவந்திருந்த மாடையும்,மாட்டுவண்டியையும் சேத்து விக்க முயற்சி பண்ணுன.ஆனா யாருமே  வாங்க வரல.கொஞ்ச நேரம் கழிச்சி ஒருதத்தரு வந்து மாட்டையும் மாட்டுவண்டியையும் சேர்த்தே வாங்கிகிட்டு போக தவுடுக்கு  ஒரே கவலை என்ன பண்றது வேற வழி இல்லனு மாடையும் மாட்டுவண்டியையும் வித்த காச எடுத்துக்கிட்டு சோத்து மூடியையை தூக்கிகிட்டு பேருரை நோக்கி நடக்க ஆரம்பிச்சாரு  தவுடு.

                                                                                        BY
                                                                                     A.RAJ





 



 
 

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...