பண்டைய உலகின் மேதைகளான அரிஸ்டாட்டில்,எர்டோஸ்த்தின்ஸ் மற்றும் டோலமி இக்கண்டத்தை பற்றி விவரித்தனர். வரை படங்களை வடிவமைத்தவர்கள் இதற்கterra australis incognita - தெற்கிலிருக்கும் அறியப்படாத நிலம் என்ற லத்தீன்பெயராலும் அழைத்தனர்.இது நாள் வரை இது ஒரு கற்பனை கண்டம் என்று நம்பப்பட்டது.
பண்டைய கிரேக்க மக்கள் பூமியின் வடிவியல் காரணங்களுக்காக இது உலகின் மறுபுறத்தில் இருக்க வேண்டும் என்று நம்பினார்.
டச்சு ஆய்வாளர் ஏபெல் தஸ்மான் 1642 இல் ஒரு புதிய நிலத்தை தேடி இப்போது இருக்கும் நியூஸிலாந்து என்று அழைக்கப்படும் தீவு கூட்டத்தை கண்டுபிடித்தார்.அனால் அவர் தேடியதை விட இது மிகவும் சிறியதாக தோன்றியது
அதன்பிறகு ஸிலாண்டிய என்று அழைக்கப்படும் இந்த கண்டம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சுமார் 375 ஆண்டுகள் ஆகியிருகின்றன.இக்கண்டம் 94%தண்ணீருக்குள் மூழ்கி இருப்பதால் வெளியில் தெரியாது.அனால் இப்போது இந்த கண்டத்தின் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது
நியூஸ்லாண்டில் உள்ள GNS science எனும் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கடலின் கரையில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளில் இருந்து ஸிலாண்டியவின் பரப்பளவை கண்டறிந்து ஒரு புதிய விரிவான வரைபடத்தை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் இக்கண்டத்தின் முழு பரப்பளவையும் நிறுவுள்ளனர்.அதன் படி அந்த கண்டத்தின் பரப்பளவும் 50 லட்சம் சதுர கிலோமீட்டர்.
ஆனால் கடலின் அலைகளுக்கு அடியில் இருக்கும் ஸிலாண்டியவை ஒரு கண்டமாக எப்படி கருதுவது?
இதற்கான விடை புவியலோடு தொடர்புடையது.
எட்டாவது கண்டமாக கருதப்படும் ஸிலாண்டிய.
ஸிலாண்டிய எப்படி உருவானது?
ஸிலண்டியாவின் தோற்றம் கோண்ட்வானா வில் இருந்து துவங்குகிறது.
கோண்ட்வானா எனும் பெருங்கண்டம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தது.அதன் பகுதிகள் தான் இன்று நாம் வாழும் கண்டங்களாக உருவாகின.
ஸிலாண்டியாவில் சுமார் 8 கோடி மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது.அனால் அதன் அண்டை கண்டங்களான அண்டார்டிகா,மற்றும் ஆஸ்திரேலியா போலல்லாமல் அதன் பெரும்பாலான பகுதிகள் தண்ணீருக்கு அடியில் இருந்தன.கடலுக்கு மேல் காணக்கூடியவையாக இருந்த ஸிலாண்டிய கண்டத்தின் பகுதிகள் நியூஸிலாந்து தீவுகள்,நியூ கலிடோனியாவின் பிரென்ச் பிரதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரதேசங்களனா லார்ட் ஹோவ் தீவு மற்றும் பால்ஸ் பிரமிட் போன்ற பகுதிகள்.
நீருக்கடியில் இருப்பதால் ஸிலாண்டியா அரிதாகவே ஆய்வு செயப்பட்டது.இதனால் அதன் வடிவம் மற்றும் எல்லைகள் பற்றிய முரண்பட்ட தகவல்களே உலவி வந்தன.இதுவரை இக்கண்டத்தின் தெற்கு பகுதி மட்டுமே வரைபடமாக்கப்பட்டிருக்கிறது.
புவியலாளர் நிக் மோர்டிமர் தலைமையில் புதிய ஆய்வை மேற்கொண்ட குழு இக்கண்டத்தின் மீதமுள்ள மூன்றில் இரண்டு பகுதியை வரைபடமாகியிருக்கிறது.இந்த ஆய்வு இக்கண்டத்தின் மொத்தம் 50 லட்சம் சதுர கீ.மீ நிலம் மற்றும் கடலோர பகுதிகளின் புவியில் வரைபடத்தை நிறைவு செய்கிறது.என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ஸிலாண்டியாவின் வயது என்ன?
புவியலாளர்கள் மற்றும் நில அதிர்வு வல்லுநர்கள் கொண்ட குழு தீவுக் கரையில் காணப்டும் மாதிரிகள்,கடலடியில் தரையை துளையிடுவதின் மூலம் பெறப்பட்ட ஆழமான பாறை மாதிரிகள் மற்றும் வண்டல் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
ஆய்வ ஆய்வாளர்கள் பேசால்ட் மற்றும் கூழாங்கற்கள் மற்றும் மணல் கற்கள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து அவற்றின் வயதை கணித்தனர்.
இவற்றுள் இருந்த மணல்கற்கள் 9.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிற்கால கிரெட்டேஸியஸ் சகா பத்திலிருந்து வந்தவை என கண்டுபிடித்தார்.
ஸிலாண்டியவை கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு நாட்களாகின?
இப்படி கற்களின் பாறைகளின் வயதை நிர்ணயித்தும் காந்த முரண்பாடுகளை புரிந்து கொண்டதன் மூலமும் விஞ்ஞனிகள் வடக்கு ஸிலாண்டியா முழுவதும் முக்கிய புவியல் அலகுகளை வரைபடமாக்கினர்.
1642ஆம் ஆண்டு ஏபெல் டஸ்மான் ஒரு ஐரோப்பியராக முதன்முதலில் இக்கண்டத்தை பதிவுசெய்தார்.டல்மேனியா தீவு இவர் பெயரால்தான் அழைக்கப்படுகிறது.
உண்மையில் ஸிலாண்டியவை தேடிச்சென்ற பல ஆய்வாளர்கள் ஸிலாண்டிய கடலில் மூழ்கிருந்த காரணத்தால் அந்த தீவுக்கூட்டத்தின் மேல் உள்ள கடல் பரப்பில் அவர்கள் மிதக்கிறார்கள் என்ற உண்மையை அறிந்திருக்கவில்லை.
1895ஆம் ஆண்டில் நியூஸ்லண்டின் தெற்கு கடற்கரையில் உள்ள தீவுகள் குறித்து தொடர் ஆயுவுக்காக ஒரு பயணத்தில் கலந்து கொண்ட ஸ்காட்டிஷ் இயற்கை ஆர்வலர் சர் ஜேம்ஸ் ஹெக்டர் ஸிலாண்டியாவின் இருப்புக்கான முதல் உண்மையான தடயங்களை சேகரித்தார்.அதன் புவியலை படித்த பிறகு நியூஸ்லன்ட் என்பது தெற்கு மற்றும் கிழக்கே நீண்டு பறந்து விரிந்த ஒரு பெரிய கண்ட பகுதியை உருவாக்கிய மலை சங்கிலியின் எச்சம் அது இப்போது நீரில் மூழ்கியுள்ளது என்று முடிவு செய்தார்.
1995 ஆம் ஆண்டு அமெரிக்க புவி இயற்பியலாளர் ப்ருஸ் லுயண்டிக் மீண்டும் இப்பகுதியை ஒரு கண்டம் என்று விவரித்தார் மற்றும் அதை ஸிலாண்டிய என்று அழைக்க பரிந்துரைத்தார்.
கண்டகளின் மேலோடுகளின் தடிமன் பொதுவாக 40கீ.மீ இருக்கும்.கடல் தரையின் மேலோடு சுமார் 10 கீ.மீ தான் இருக்கும்.
அறிவியலையும் தாண்டிய தாக்கங்கள்
ஸிலாண்டிய புவியில் அழுத்தத்திற்குள்ளானதால் அதன் வடிவம் நீளமானது.அதன் மேலோட்டின் தடிமன் வெறும் 20 கீ.மீ மட்டுமே உள்ளது.
இறுதியில் செதில் போல மெல்லிய மேலோட்டை கொண்டிருந்த இக்கண்டம் கடலில் மூழ்கி மறைந்தது.
ஸிலாண்டியவின் மேலோட்டின் தடிமன் மற்றும் அதன் பாறைகளின் வகையை வைத்து அதனை ஒரு கண்டம் என்று வாதிடுகின்றனர்.ஆனால் இது அறிவியலையும் தாண்டிய தாக்கங்களைக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் கடல் சட்டம் தொடர்பான மாநாடு நாடுகள் தங்கள் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கல் 370 கீ.மீ வரை நீளும்.நியூஸிலாந்து ஒரு பெரிய கண்டத்தின் சிறு பகுதி என்பது நிரூபிக்கப்பட்டால் அது தனது நிலப்பரப்பை ஆறு மடங்கு அதிகரிக்க முடியும் அதன் மூலம் கடல் ஆய்வுக்கான நிதியையும் அதிகமாக பெறமுடியும்.