வியாழன், 12 மே, 2022

ATHIYAN 11

                                                               அதியன் பாகம் 11

மலைக்குன்றில் உலோகேஸ்வரம் கிராமத்தில் பதுங்கிய நந்தினி அவளது மகன் அதியன் சிறந்த வீரனாக மாற்ற நினைத்தாள்.அவர்களுடன் பாதுகாப்புக்கு வந்த சில வீரர்களே அதியனுக்கு பயிற்சி கொடுத்தனர்


.திடீரென நந்தினியின் உடல் கவலைக்கிடம் ஆகியது.அந்த கிராமத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் உடல்நிலையை சோதித்துவிட்டு இவளை காப்பாற்ற இயலாது என்று கூறிவிட்டார் அன்று இரவு  நந்தினி அதியனை கூப்பிட்டு அவள் அருகில் அமரவைத்து நான் இறந்துவிடுவேன் அனால் நீ தந்தையின் இறப்பிற்கு பழி வாங்கவேண்டும் என்று கூறி அவனை அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு அவனை இறுக்கி அணைத்தவாறு தூங்கினாள்.மறு நாள் விடிந்ததும் அதியன் கண்விழித்ததும் தன் எழுப்பினான் அனால் அவள் எழுந்திருக்கவில்லை மீண்டும் மீண்டும் எழுப்ப முயற்சி செய்தும் அவளை எழுப்ப முடியவில்லை.அதியன் ஓடி சென்று அவனது காவலர்களிடம் கூறினான்.அவர்கள் வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர் அவள் தூக்கத்திலே இறந்துபோயிருந்தால்.


உடனே காவல்வீரர்கள் கிராமத்தில் உள்ளவர்களிடம் கூறினர்.கிராமத்தில் இருக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து பருளிப்புற சாம்ராஜ்யத்தின் அரசி நந்தினியை அடக்கம் செய்தனர்.அதியனோ தாய்யையும் இழந்து சோகத்தில் வாழ தொடங்கினான்.வீரர்களிடம் போர்  பயிற்சி பெறாமல் யாருடனும் பேசாமல் தனிமையில் வாழ தொடங்கினான்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            அதியன் 

இது ஒரு கற்பனை கதை 

புதன், 11 மே, 2022

ATHIYAN 10

                                                                     அதியன் பாகம் 10

படைகளை கூட்டி கொண்டு அந்துவன் பருளிப்புறம் வந்து சேர்ந்தான்.அவன் வருவதற்குள் ஆதனின்  மனைவி நந்தினி அவளது மகன் அதியனை அழைத்து கொண்டு பஞ்சமலை நோக்கி சென்றால்.அவர்களுக்கு  துணையாக சில காவல் காவல் வீரர்கள் அவர்களுக்கு  வந்தனர்.



அந்துவன் பருளிப்புறம் அரண்மனையை அடைந்தான் அந்தவனின் வீரர்கள் அரண்மனை முழுவதையும் சுற்றி வளைத்தனர்.அங்குள்ள அனைவரையும் கொன்று குவித்தனர்.அரண்மனையின் முக்கிய அமைச்சர்களிடம் ஆதனின் மனைவியும் மகன் அதியனும் எங்கே என்று கேட்டு பதில் கிடைக்காததாள் அங்கு உள்ள அனைவரையும் துன்புறுத்தி கொலை  செய்தான்.அவனது வீரர்களுக்கு அவர்கள் இருவரும் எங்கு இருந்தாலும் அவர்களை தேடி கொண்டுவருமாறு கட்டளை பிறப்பித்தான்.பாண்டியநாடு பறுளி சாம்ராஜ்யம் இவை இரண்டையும் ஒளிநாட்டோடு இணைத்து பேரரசன் ஆனான்.அதே நேரம் தன் நந்தினியும் அவளது மகன் அதியனும்  பறுளி மலை குன்று ஒன்றில் உள்ள பஞ்சமலை என்ற மலையில் உள்ள  உலோகேஸ்வரம் என்ற கிராமத்தில் மறைந்து வாழ தொடங்கினர். உலோகேஸ்வர கிராம மக்கள் யாருடனும் பேசமாட்டார்கள் அவர்கள் அமைதியாக அந்த மலை குன்றில் வாழும் ஒரு பழங்குடி கிராம மக்கள்.அந்த மக்கள் யாருடனும் பேசாமலே கருத்துக்களை பரிமாறி கொள்பவர்கள் இந்த கிராம மக்கள் மற்ற மனிதர்களிடம் இருந்து தள்ளியே வாழ்ந்துவந்தனர்.இந்த கிராமத்தில் பருளிப்புற மன்னர் வம்சத்தினர் மட்டுமே வரமுடியும் வேறு எவரேனும் அந்த கிராமத்தின் உள்ளே வர நினைத்தாலும்  வரமுடியாது.ஆகையால்தான் நந்தினி அவளது மகன் அதியனுடன் இந்த மலைக்கிராமத்திற்கு வந்து மறைந்து வாழ தொடங்கினாள்.மாதங்கள் சில உருண்டன அந்துவனின் வீரர்கள் எங்கு தேடியும் நந்தினியும் அதியனும் கிடைக்கவில்லை 

                                                                                                                                                                                                                                                                                                                   அதியன் 

இது ஒரு கற்பனை கதை 

புதன், 4 மே, 2022

ATHIYAN 9

                                                              அதியன் பாகம் 9

காற்றை கிழித்து கொண்ட வந்த அம்பு ஆதனின் மார்பில்  பாய அதை பின்தொடர்ந்து வந்த இரண்டு அம்புகள் அவன் மார்பை துளைத்தன.ஆதன் சரிந்து விழுந்த மாயோனை பார்த்தான் அவன் முதுகில் நான்கு அம்புகள் துளைத்து இருந்தன.மார்பில் இருந்து குருதி பெருக்கெடுக்க என்ன நடக்கிறது என்று சுற்றும் முற்றும் பார்க்க புழுதி படலத்தோடு ஒரு படை போர்க்களத்தில் புகுந்து பாண்டிய படைகளையும் பருளிப்புற படைகளையும்  கொன்றுகுவித்தது.



அப்போது ஒரு குதிரை ஆதனை நோக்கி வேகமாக வந்ததுஅதில் இருந்து ஒருவன் இறங்கினான்.உரையில் இருந்த வாளை உருவி ஆதனை பார்த்து இனி இந்த பாண்டிய நாடும் பருளிப்புற தேசமும் எனக்கு சொந்தம்.பாண்டிய மன்னனை கொன்றுவிட்டேன் உன்னையும் கொள்ள போகிறேன் உன்னை மட்டும் அல்ல உனது ரத்த உறவுகளை சேர்த்து கொள்ளப்போகிறேன் எத்தனை நாள் காத்துஇருந்தேன் இந்த சந்தர்ப்பத்திற்கு பாண்டிய தேசத்தில் புகுந்து முடிநாகப்பாண்டியனை கொன்றதும் நான்தான் அந்த  கிராமங்களை எரித்து உன்மேல் பழி வருவது போல் செய்ததும் நான்தான் இந்த போர்மூல முக்கிய காரணமும் நான்தான்  அவ்ளோதான் என்று கூறி இனி இந்த குமரி கண்டத்தில் மிகப்பெரிய அரசன் யார் என்றால் ஒளிநாட்டு அரசனான அந்துவன் எனும் நான்தான் என்று கூறி ஆதனை கொன்று இரண்டு தேசங்களையம் ஒரே நேரத்தில் கைப்பற்றினான் அந்துவன்.பாண்டிய மன்னன் இறந்துவிட்டான் என்ற செய்தி பாண்டிய தேசம் முழுவதும் பரவியது.அதேபோல் பருளிப்புறம் முழுவதும் ஆதன் இறந்த செய்தி பரவியது.ஒளிநாட்டு வீரர்கள் பருளிப்புற அரண்மனை நோக்கி புறப்பட்டனர்.



அந்துவன் வரும் செய்தி கேட்டு ஆதனின் மனைவியையும்  இளவரசன்  அதியனையும்  வீரர்களும்  சிலர் ரகசிய வழி ஒன்றின் மூலம் கூட்டிக்கொண்டு ஒரு மலை கிராமத்திற்கு அழைத்து சென்றனர் 

தொடரும் ......                                                                                                                                                                                                                                                                                     அதியன் 

இது ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல 

கதையை பற்றின கருத்துக்களை கீழே பதிவிடுங்கள் 

செவ்வாய், 3 மே, 2022

ATHIYAN 8

                                                             அதியன் பாகம் 8

மூன்றாம் நாள் போர் தொடங்கியது.போர்க்களத்தில்  இருநாட்டு படைகளும் தயாராக இருந்தன.இரண்டு நாட்டு மன்னர்களுக்கும் ஒரே நோக்கம் தான்.இன்றுடன் இந்த போரை முடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு இரண்டு நாட்டு படைகளும்  போர்க்களம் புகுந்தன.போர்க்களத்தில் பாண்டிய மன்னன் மாயோன் சூறாவளி காற்றை போல் சுழன்று,சுழன்று  சண்டையிட.மறு பக்கத்தில் பருளிப்புற மன்னர் ஆதனும் பாண்டிய வீரர்களை துவம்சம் செய்யதான்.போர்க்களத்தில் படைகள் இரண்டும் கடுமையாக மோதிக்கொண்டன.

.


ஆதனுக்கு தெரியும் மாயோனை கொன்றால் தான்  போர் முடியும் என்று.உடனே மாயோனை நோக்கி முன்னேற செல்ல "ஆற்றுவெள்ளம் எப்படி அதன் வழியில் உள்ள அனைத்தையும் சுக்குநூறாய் உடைத்து அதன் பாதையை உருவாக்கிறதோ"அது போல ஆதன் மாயோனை நோக்கி பாதையை  உருவாக்க  அவன் எதிரில் உள்ள பாண்டிய வீரர்களை  வெட்டி வீழ்த்தி பாதையை உருவாக்கி  முன்னேறி சென்றான்.ஆதான் வருவதை கண்ட பாண்டிய மன்னன் மாயோனும் சிறிதும் பயமின்றி "சிங்கத்தை சிங்கத்தின் குகையில் சந்திக்கவேண்டும் ஏனனில் அதுதான் வீரம் என்று எண்ணி ஆதனை நோக்கி போர் புரிய  முன்னேறினான் மாயோன்  


                                                                                                                                                                       இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் முன்னேறி கொண்டு வந்து யுத்தம் செய்தனர்.அப்போது ஆதன் இந்த சிறுவயதில் நீ நன்றாக போர்புரிகிறாய் அனால் உன்னுடைய முயற்சி என்னிடம் பலிக்காது என்று கூறி வாளை வீச மாயோனோ அதை தடுத்து.நான் போர்க்களம் புகுந்ததே உன் உயிர் பறிக்க ஆகையால் முடிந்தால் என் உயிர் எடுத்து உன் உயிரை காத்துக்கொள் என்றான் மாயோன்


இருவரும் உக்கிரமாய் போர்புரிய திடீரென வானில் கருமேகங்கள் ஒன்று கூடி.இடியும் மின்னலுமாய் மிரட்ட போர் சிறிதும் நிற்காமல்  நடுந்துகொண்டே இருந்தது.திடீரென காற்றினை கிழித்து கொண்டு வந்த அம்புகள் பாண்டிய வீரர்களையும் ,பருளிப்புற வீரர்களையும் கொன்றுகுவித்தது.அனால் பாண்டிய மன்னனும் பருளிப்புற மன்னரும் இடைவிடாது போர்புரிந்து கொண்டு இருக்க அந்த நேரம் ஆதன் அவனது வாளை கொண்டு சுழன்று  மாயோனின் தலையை நோக்கி வீச மாயோனின் கையிலிருந்த வாள் கீழே விழ,வாள் விழுந்த சத்தம் கேட்டுஆதனுக்கு மாயோனை வீழ்த்திவிட்டோம் என்று எண்ணி சுழன்று பார்க்க  ஒன்றுமே புரியவில்லை.காயங்கள் எதுமே இல்லை அனால் மாயோனின் கைகளில் இருந்த வாள் எப்படி கீழே விழுந்தன என்று எண்ணி மாயோனின் முகத்தை பார்த்தான் ஆதன்.மாயோனின்  கண்களில் இருந்து  நீர்கசிந்தது. இதை கண்ட ஆதனுக்கு ஒன்றுமே புரியவில்லை மாயோன் ஒரு வித ஏமாற்றத்தோடு ஆதனை பார்த்துக்கொண்டே மெதுவாக மண்டியிட மற்றொரு அம்பு காற்றை கிழித்து கொண்டு வந்து ஆதனின் மார்பில் பாய்கிறது. .............

தொடரும்                                                                                                           

                                                                                                                               அதியன் 

இக்கதை ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல

கதையை பற்றின கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்  

ஞாயிறு, 1 மே, 2022

ATHIYAN 7

                                                                   அதியன்  பாகம் 7 

பாண்டியர்கள் பருளிப்புறம் மீது போர் தொடுத்து வந்தனர்.பருளிப்புற மன்னர் ஆதனும் போருக்கு தயாரானார் படைகள் இரண்டும்  போர்க்களத்தில் அணிவகுத்து நிற்க பாண்டிய மன்னன் மாயோன் பாண்டிய படைகளை முன்னின்று வழிநடத்தினான்.பாண்டிய படைகளில் முதல் வீரனாக ஆயுதம் இன்றி பெற்றோரின் இழப்பிற்கு பழி வாங்க நின்றான் மாயோன் .போர் தொடங்கியது படைகள் இரண்டும் புயல் வேகத்தில் முன்னேறியது அதிலும் மாயோன் கோவம் அந்த போரில் ருத்திரதாண்டவம் ஆடியது.இருபது வயது சிறு வாலிபனிடம் பருளிப்புற வீரர்கள் திணறினர் அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி போர்க்களத்தில் மாண்டனர்.


                                                                                                                                                                       போர்க்களத்தில் இடியும்,மின்னலுமாய் வாள்களும் கேடயங்களும் மோத,வில்களும்,வாள்களும் உயிர்களை பறிக்கும் காலனின் பாச கயிறாய் மாற,உயரே பார்த்தால் பிணந்திண்ணி கழுகுகள் வட்டமிட,நாய்களும் நரிகளும் ரத்த வாடை நுகர்ந்து வந்து சூழ்ந்திருக்க,தரை முழுவதும் குருதி நதியாய் பெருக்கெடுத்து ஓடியது.முடிவின்றி இரண்டு நாட்களாக போர்  நடந்து கொண்டிருந்தது.இரன்டு நாட்களாக நடைபெற்ற போரில் பாண்டியர்களின் கை ஓங்கிருந்தது.பருளிப்புற மன்னன் ஆதன் படைகளின் பின்னடைவை விசாரிக்க பாண்டியர்களின் வீரத்தை பற்றி தளபதியும் பறுளிபுற மன்னரும் பேச. மறுநாள் போருக்கு இரு நாட்டு படைகளும்  தயாராகினர்.மறு நாள் சூரியன் உதிக்க போர் வீரர்கள் அணிவகுத்து நிற்க பாண்டியர்களின் படையில் முதல் வீரனாக பாண்டிய மன்னன் மாயோன் நிற்க அதே போல் பருளிப்புற படையில் ஆதனும் சக வீரர்களுடன் நிற்க போர் தொடங்கியது 

தொடரும் ...........                                                                                                     

                                                                                                                                      அதியன் 

இது ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல .

கதையா பற்றின கருத்துக்களை கிழே பதிவிடுங்கள் 

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...