சனி, 30 ஏப்ரல், 2022

ATHIYAN 6

                                                                         அதியன் பாகம் 6

நீரேஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் படகுகளில்  ஒளி வீசும் விளக்குகளோடு சென்றனர்.அது மட்டும் அல்லாமல் வானில் பறக்கும் பலூன்களை போல பறக்கும் விளக்குகள் வானில் பறக்க விடப்பட்டு இருந்தது 


   

  கோவில் திருவிழாவில்  மேளங்கள் கொட்ட நாதஸ்வரம் வாசிக்க மன்னர் என்ற முறையில் அவரது சம்ரதாயங்களை முடித்து அரச குடும்பமாய் சேர்ந்து கடவுளை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது படை வீரர்களை போல வேடமிட்ட  ஒரு கூட்டம் திட்டம் இட்டபடி விசம் தடவிய அம்புகளை எய்து  முடிநாகப்பாண்டியனையும் அவரது மனைவி அவிராவும் கொலை செய்கின்றனர்.அந்த தாக்குதலில் இருந்து முடிநாகனின் மகன் எந்த வித          ஆபத்தின்றி  உயிர் பிழைக்கிறான். தாய் தந்தையை இழந்த மாயோன் அவர்களை அடக்கம் செய்து விட்டு அரியணை ஏறுகிறான். அரியணை எரிய மாயோன் தன் தாய்,தந்தை இறப்பிற்கு காரணமான அந்த கூட்டத்தில் பிடிபட்ட ஒருவனை மன்னன் மாயோன் முன் நிக்க வைத்து விசாரிக்க அவன் ஏளனமாக அரசவையில் உள்ளவர்களை கண்டு சிரிக்க மாயோன் கோவம் கொண்டு இறங்கி வந்து அவனது  தலை முடியை பிடித்து தூக்கி கோவத்தோடு அவனை நோக்கி என் தாய்,தந்தையை கொன்றது மட்டுமல்லாமல் என் அரண்மனையிலேயே என்னை கண்டு சிரிக்கிறாய் என்று பேசி கொண்டு குத்து வாளை  எடுத்து கழுத்தை அறுத்து கொள்கிறான் மாயோன்.அப்போதும் மாயோன் சினம் தீரவில்லை.தாய் தந்தை இறந்த சில நாட்களிலே பாண்டியர்களின் ஒரு பகுதியில் மக்கள் மீது தாக்குதல் நடக்கிறது இந்த தாக்குதலுக்கு கரணம் யார் என்று வினவ அது பருளிப்புற படைகளின் தாக்குதல்  தான் மன்னா என்று மந்திரி ஒருவர் கூறுகிறார்.நாம் துக்கத்தில் இருப்பதால் நாட்டை பிடிக்க சரியான தருணம் அல்லவா அதான் தாக்குதல் நடத்தியுள்ளனர் மன்னா அதுமட்டும் இன்றி நம் நாட்டு மக்கள் சிலர் இறந்து விட்டனர் மன்னா. ஒரு வேலை மன்னரின் இறப்பிற்கு காரணம் இவர்களாக கூடஇருக்கும் என்று அமைச்சர் கூற கடும்கோபத்தில் இருந்த பாண்டிய நாட்டு மன்னன்  மாயோன் பருளிபுரம் மீது போர்தொடுத்தான்.

தொடரும்                                                                                                        

                                                                                                                             அதியன் 

இது ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல 

கதையை பற்றின கருத்துக்களை கிழே பதிவு செய்யுங்கள் 

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

ATHIYAN 5

                                                               அதியன்  பாகம் 5

                              தோல்வியை கண்டு போர் களத்தில் இருந்து தப்பி ஓடிய அந்துவன் மேரு மலைஇத்தொடர்களில் பதுங்குகிறான்.பதுங்கிய அந்துவனை பிடிக்க பாண்டிய படைகள் தேடின ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அன்று இரவு மலையில் பதுங்கிய அந்துவன் ' இருந்த நாட்டையும் இழந்துவிட்டேனே என எண்ணி கோவம் கொண்டு என்னை வீழ்த்திய பாண்டிய மன்னனை  நான் தோற்கடிப்பேன் என சபதம் மேற்கொண்டான்.


                                       போர் முடிந்து சில வாரங்கள்  கழித்து பாண்டிய மன்னன் குமரவேலன் மரணம் அடைகிறார். போரில் ஏற்பட்ட காயம் ஆழமாக இருந்ததால் குணப்படுத்த  முடியாமல் இறந்து போகிறார்.குமரவேலன் இறந்துபோனதால் முடிநாகப்பாண்டியனுக்கு அரசப்பட்டம் சூடினார்.முடிநாகன் அரியணை ஏறியதும் என் தந்தையின் மரணத்திற்கு காரணமான அந்த ஒளிநாட்டு மன்னன் அந்துவனை பிடிக்க தளபதிக்கு கட்டளை இடுகிறான்.கட்டளை ஏற்று தளபதி படையில் இருந்த ஒரு குழுவை அனுப்புகிறான்.காலங்கள் ஓடின அந்துவனை பிடிக்க முடியவில்லை.அதே சமயம் பாண்டிய மன்னன் குமரவேலன் ஒரு நீர்கோவிலை எழுப்ப எண்ணி அதன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தது அவர் இறந்ததால் அந்த வேலை நின்று போனது.அந்த வேலையை தொடர எண்ணி கோவில் பணி நடக்கும் இடம் நோக்கி சென்றான்.ஒரு மிக பெரிய ஏரி ஒன்றை செயற்கையாக  உருவாக்கி அந்த ஏரியின் நடுவில்  பூமிக்கும் கீழே கோவில் ஒன்றை கட்டுவது ஏரியில் நீர் சேர்ந்து நிரம்பி இருக்கும் போது கோவில் தானாக மேல எழும்பும்.இதுதான் அந்த கோவிலின் அமைப்பு.

                                     நீர் சேர்ந்த ஏரியில் இருந்து நீர் அணைத்து ஊர்களுக்கும் போகும்படி வழி செய்யப்பட்டிருக்கும். இந்த நீரை கொண்டு மக்கள் விவசாயம் செய்ய தொடங்குவர்.இவர்கள் நிலத்தை உழுது நெல் பயிரை விதைக்க அந்த நீர் கோவிலின் கலசம் அந்த ஏரியின் மேல் எழும்பும் நெற்பயிர் வளர வளர நீர்கோவிலும் வளரும் பயிர் அறுக்கும்போது கோவில் முழுவதும் நீரில் இருந்து மேல் எழும்பி காட்சி அளிக்கும் இதுதான் அந்த நீர் கோவிலின் அமைப்பு என்று நீர்கோவிலின் தலைமை கட்டிடர் கூற, நின்ற வேலையை தொடங்குகள் என்று கூறினான் முடிநாகன்.கோவிலின் வேலையையும் தொடங்கியது.முடிநாகன் நல்லாட்ச்சி புரிந்தான் மக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாமல் காத்தான்.முடிநாகனிடம் ஒரு குணம் இருந்தது அது அவனது நாட்டில்இருக்கும் அனைவரும் அன்பால் அரவணைத்தான் முடிநாகன்.சில மாதங்கள் களைத்து முடிநாகனுக்கும் கீழைநாட்டு இளவரசி அவிரா என்பவளுக்கு  திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமணம் நடந்தேறியது.இந்த முடிநாகனுக்கும்,அவிராவுக்கும் ஒரு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.அந்த குழந்தை தான் மாயோன் வருடங்கள் செல்ல செல்ல மாயோனும் சிறு வயது முதல் போர்கலைகளை ஒன்று விடாமல் கற்கிறான் வருடங்கள் சில சென்றது முடிநாகன் அவனது தந்தை எண்ணியதுபோல் நீர் கோவிலை கட்டி முடித்தான் அந்த கோவிலுக்கு நீரேஸ்வரன் என பெயர் சூட்டினார் மழை பொழிய தொடங்கியது நீரேஸ்வர ஏரியில் நீர் நிரம்ப கோவில் மண்ணுக்குள் இருந்த மேல எழும்ப தொடங்கியது.ஊர் மக்களும் பயிர்களை விதைக்க தொடங்கினர்.நாடு முழுவதும் குமரி கண்டம் முழுவதும் இந்த நீர்கோவில் செய்தி கூறப்பட்டது.பக்கத்து நாட்டு அரசர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.வருகின்ற தை மாதம் நீரேஸ்வர ஏரியில் நீரேஸ்வர ஆலயத்தில் வழிபாடு என்று  அந்த அழைப்பில் கூறப்பட்டது.



                        தை திருவிழா தொடடங்கியது.மக்கள் அனைவ்ரும் நீரேஸ்வர கோவிலை நோக்கி சென்றனர்.இரவு நேரம் வழிபாடு செய்ய திட்டமிடப்பட்டது.இரவு நேரம் மக்கள் அனைவரும் ஒன்று சேர படகுகள் அனைத்திலும் மக்கள் கூட்டம் கைகளை விளக்குகள் ஏந்தி  செல்ல அந்த இரவு அழகாக இருந்தது இதை கண்டு பேரானந்தம் கொண்டார் மன்னர் .ஆனால் அங்கு ஒரு சிறு கூட்டம் ஒரு வெறியோட வேட்டையாட சரியான நேரத்திற்கு காத்திருந்தது.                                                                                                                                                    

தொடரும் .........                                                                                                             

                                                                                                                                             அதியன்

இது ஒரு கற்பனை கதை.யார் மனதையும் புண்படுத்த அல்ல 

கதையை பற்றின கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 

வியாழன், 28 ஏப்ரல், 2022

ATHIYAN 4

                                                            அதியன் பாகம் 4

போருக்கு தயாரா என கேட்ட குமரவேலனுக்கு முடிநாகன் நான் போருக்கு தயார் என்று கூறினான்.ஒரு வழியாக மன்னரும் அவருடன் இருந்த அனைவரும் படைகள் இருந்த இடத்தை அடைந்தனர்.படை வீரர்கள் அனைவரும் போர் நடுக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் கூடாரங்கள் அமைத்து கொண்டிருந்தனர்,இன்னும் சிலர் போருக்கு தேவையான ஆயுதங்களை தயார் செய்தனர்.நாட்டில் உள்ள முக்கிய மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர் .பாண்டியர்கள் போருக்கு தயாராகினர்.அதே போல் ஒளிநாட்டு படைகளும் மறுப்பக்கம் போருக்கு தயாராகினர்.போர் வியூகங்கள் அமைப்பது போன்ற முக்கிய செயலில் ஈடுபட்டனர்.

மறுநாள் சூரியன் உதயம் ஆகா இரண்டு நாட்டு படைகளும் போர் புரிய தயாராக இருந்தன.



                          பாண்டிய தேசத்து மன்னன் குமரவேலன் போர்க்களத்தில் படை வீரர்களில்  முதல் ஆளாக குதிரையில் அமர்ந்தவாறு  எதிரி நாட்டு வீரர்களை நோக்கி குதிரையை விரட்ட உரையில் இருந்த வாளை குதிரை ஓடும்போதே எடுக்க இதை கண்ட பாண்டிய வீரர்கள் மன்னரை பின்தொடர்ந்து சென்றனர்.

                       ஒளிநாட்டு வீரர்களும் பாண்டிய நாட்டு வீரர்களும் ஆக்ரோஷமாக ஓடி வந்து  மோதிக்கொண்டன.

 


தந்தை குமரவேலனுடன் சேர்ந்து மகன் முடிநாகனும் போர் புரிந்தான்.போர்க்களத்தில் முடிநாகன் செயல்பட்ட விதம் கண்டு மன்னார் குமரவேலன் பூரித்து போனார். 





                             ஆனால் அன்றய போரில் குமரவேலனுக்கு பெருத்த காயம் ஏற்பட அவர் போர்க்களத்தில் இருந்து சக வீரர்களால் கூடாரத்திற்கு அழைத்து செல்ல .முதல் நாள் போர் முடிவுக்கு வந்தது.அன்று இரவு ஒளிநாட்டு வீரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.அனால் பாண்டியர்கள் சோகத்தில் இருந்தனர் அன்று இரவு பாண்டிய மன்னர் குமரவேலன் முடிநாகனிடம் நாளைக்குள் போரினை முடிக்க வேண்டும் வெற்றி நம் பக்கம் இருக்க வேண்டும் என கூற அதற்கு முடிநாகனும் சரி என்று கோவத்தோடு மறுநாள் போருக்கு  காத்திருந்தான். 

                                             மறுநாள் போர் தொடங்கியது.அனால் இன்றிய போரில் முடிநாகன் அனைவருக்கும் முன்நின்றான். போர்களத்தில் அம்புகள் காற்றை கிழித்து கொண்டு அவரவர் எய்த  இலக்கினை நோக்கி பய, குதிரைகளும் யானைகளும் போர்க்களத்தில் சத்தம் இட  போர் உக்கிரமாக காணப்பட்டது.இன்று போரை முடித்தே ஆகா வேண்டும் என்ற எண்ணத்தில் பாண்டிய படைகள் போரில் மூர்க்கமாக  போரிட்டு முன்னேறி சென்றனர்.

முடிநாகன் போர்க்களத்தில் எரிமலை போல் நெருங்கி வந்த வீரர்களை கொன்று குவித்தான் எண்ணியது போல் இரண்டாம் நாளில் போர் முடிவுக்கு வந்தது.போரில் ஒளிநாட்டு வீரர்கள் தோல்வியை தழுவினார்.ஆனால் ஒளிநாட்டு மன்னன் அந்துவன் மட்டும் அங்கிருந்து தப்பி மேருமலை தொடரில் பதுங்கி விடுகிறான். மேருமலை தொடரில் பதுங்கிய அந்துவன்........

தொடரும்                                                                                                                     

                                                                                                                                   அதியன் 

இது ஒரு கற்பனை கதை இக்கதை யார் மனதையும் புண்படுத்த அல்ல  

கதையை பற்றின கருத்துக்களை கீழே பதிவிடுங்கள்                                                             

புதன், 27 ஏப்ரல், 2022

ATHIYAN 3

                                                                   அதியன் பாகம் 3

மேரு மலையின் கிழக்கே மிக பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தவர்கள்தான்  பாண்டியர்கள்.சிவபெருமான் வழி வந்தவர்கள் சிவன்தான் பாண்டியர்களின் முதல் அரசன்.இந்த  பாண்டியர்களை தாக்க தெற்கே உள்ள ஒளி நாட்டை ஆண்டுவந்த அந்துவன் என்ற மன்னன் பாண்டியர்களை தாக்க மிக பெரிய படையை திரட்டி வந்தான்.இந்த பாண்டிய நாட்டை ஆட்சி செய்பவர்தான் குமரவேலபாண்டியன் .இந்த குமரவேலனின் மகன்தான முடிநாகன்.இவனது முழு பெயர்  முடிநாகப்பாண்டியன் 


                                                                         

                                          இந்த செய்தியைத்தான் குமரவேலபாண்டியன்   தனது மகனான  முடிநாகபாண்டியனுக்கு  அனுப்பிருப்பர்.முடிநாகனும் 5 வருடம் கழித்து தந்தை இடம் இருந்து வந்த செய்தியை கேட்டு புறப்பட்டு பாண்டிய நாடு நோக்கி புறப்பட்டான் . முடிநாகன் குதிரையில் பாண்டிய தேசத்துக்குள் செல்லும்போது ஒரு மலையை கடக்க வேண்டியிருந்தது.குதிரையையை கைகளால் பிடித்து நடந்து மலையின் உச்சியை அடைந்தான் முடிநாகன்.மலை உச்சியில் இருந்து சுற்றும் முற்றும் பார்த்தான் அப்போது அவனுக்கு ஒரு காட்சி தென்பட்டது.காளை சின்னம் பொரித்த ஒளி தேசத்து  கொடிகள் ஆங்காங்கே பறக்க அந்த கொடிகளின் கீழே ஆயிரக்கணக்கில் போர் வீரர்களும்.அவர்களுடன்  குதிரைபடைகளும் யானைபடைகளும் பாண்டிய நாட்டை நோக்கி சென்றுகொண்டு இருந்தனர்.இதை கண்ட முடிநாகனுக்கு புரிந்தது.தந்தை கூறியது உண்மைதான்  என்று எண்ணி குதிரையில் ஏறி அமர்ந்து பாண்டியநாட்டு அரண்மனையை நோக்கி விரட்டினான் முடிநாகபாண்டியன் .


       அரண்மையை அடைந்த முடிநாகன் தந்தை தேடி அரண்மணை முழுவதும் அலைந்தான்.எங்கு தேடியும் காணவில்லை.அரண்மனை காவலாளியிடம் தந்தை எங்கே  விசாரித்தான் முடிநாகன்,அதற்கு காவலாளி மன்னர் முன்னோர்களை அடக்கம் செய்திருக்கும்  இடத்திற்கு சென்றுள்ளார் இளவரசே என்று பதில் அளித்தான்.சிறிதும் நிற்காமல் குதிரை மீது ஏறி தந்தை இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான் முடிநாகபாண்டியன்  .சென்ற இடத்தில் சில வீரர்களுடன் மன்னர் குமரவேலபாண்டியன்   அவரது முன்னோரை நோக்கி பிராத்தனை செய்து கொண்டு இருந்தார்.முடிநாகனும் உள்ளே வந்து எதுவும் பேசாமல் பிராத்தனை மேற்கொண்டான்.பிராத்தனை முடித்த மன்னர் முடிநாகப்பாண்டியனிடம்  எப்போது வந்தாய் என்று வினவ இப்போதுதான் தந்தையே என்று கூறினான்.உடனே மன்னர் தளபதியை நோக்கி படைகளை பற்றி விசாரித்தார்.அதற்கு தளபதி படைகள் தயாராகி போர்நடக்கும் இடத்தை நோக்கி விரைந்து சென்றுகொண்டு இருக்கிறது மன்னா என்று கூறினார்.உடனே மன்னர் குமரவேலபாண்டியன் ,இளவரசன் முடிநாகபாண்டியன்  ,படை தளபதி,உடன் இருந்த வீரர்கள் அனைவரும் போர் நடக்கும் திசையை நோக்கி புறப்பட்டனர்.குமரவேலப்பாண்டியன் முடிநாகனை பார்த்து நலம் விசாரிக்க முடிநாகனும் பதில் அளித்தவாறு ஒளி நாட்டு படைகளை வரும் வழியில் கண்டேன் அவர்கள் மிக பெரிய படையை திரட்டி வருகின்றனர் போர் படும் உக்கிரமாய் இருக்கும் என்று கூறினான் முடிநாகன்,அதற்கு தந்தை குமரவேலன் போருக்கு நீ தயாரா என கேட்க   அதற்கு முடிநாகன்                                                                                                                                             

தொடரும் ...........                                                                                                                                                                                                                                                                                     அதியன்                      

  இது ஒரு கற்பனை கதை,யார் மனதையும் புண்படுத்த அல்ல               

 கதையை பற்றின கருத்துக்களை கீழே பதிவிடவும்                                                                                                               

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

ATHIYAN 2

                                                               அதியன் பாகம் 2 

அவன் போர்க்களம் புகுந்தால் ................எதிரி படைகளை நாசம் செய்வான் மன்னா.அவனது வயதிற்கும்  அவனது போர் கலைக்கும் சம்மந்தம் இல்லாததை போல் இருக்கும் இத்தனைக்கும் அவனது வயது 18 வயதுதான் மன்னா.அவனது பெயர்  மாயோன் .உடனே மன்னர் பருளிப்புற மன்னர் ஆதன்  படை தளபதி களன்கண்டானை நோக்கி தெரியும் அவனது தந்தை பெயர் முடிநாகன் .அவன்  போர்களத்தில்  மிக வேகமாகவும் விவேகமாகவும் செயல்படுவார் அவரை நேருக்கு நேரராக மோதி வெற்றிபெற இந்த குமரி கண்டத்தில்  யாரும் இல்லை என்று கூறுவார்.அதே போல் மக்களிடமும் மிகவும் அன்பாக செயல்படுவர் மக்களின் குறைகளை நேராக சென்று அதை அறிந்து செயல்படுவர் அது மட்டுமல்லாமல் இந்த குமரி  கண்டமே மெய்சிலிர்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட ஏரி அமைத்து அதனுள் நீர் கோவிலை அமைத்தவர் என்று கூறி ஒரே ரத்தம் அல்லவா அப்டித்தான் இருக்கும் என்று கூறினார் மன்னர்.    முடிநாகனை பற்றி ஒரு குறிப்பு.                                                                                                                                                                                                                            முடிநாகன்  போர்கலைகளை முழுதும் கற்றவன். அவனது தந்தை அவனிற்கு  அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்தார்.சிறு வயதிலேயே தாயை இழந்தவன் .அதனால் அவன்  நிம்மதியற்ற இருந்தான்.இதை சரி செய்ய அவனை ஒரு பயணத்திற்கு தயார் செய்தர் முடிநாகனின்  தந்தை.வெகுதூர பயணத்திற்கு தயாரானான் முடிநாகன்.தனது 20 வயதில் தனித்து பயணம் செய்ய தொடங்கினான்.பல ஊர்களுக்கு சென்றான் பல நாடுகளுக்கு சென்றான் அவன் ஒவ்வொரு இடத்தை பார்க்கும் போது அவனுக்கு ஒரு திகைப்பு.மக்கள் படும் அவதிகள் கண்டான் பலரது பேச்சு அவனை ஈர்த்தது.அதையும் தாண்டி ஆறுகளின் நீரோட்டமும்,மலைகளும் மலைகளில் இருந்து பார்க்கும் போது ஆறுகளின் வளைவுகளும்,காட்டு மிருகங்களும் அவனை ஈர்த்தன.அதையும் தாண்டி கடற்பயணம் மேற்கொண்டான் கடல் வாழ் உயிரினங்களை கண்டு அவன் பிரமித்து போனான்.5 வருடங்கள் பயணத்தை மேற்கொண்டான் ஒருநாள் அவனது தந்தையிடம் இருந்து செய்தி வந்தது நமது நாட்டிற்கு எதிராக போர் மேகம் சூழ்ந்து உள்ளது உடனே வர வேண்டும் என்று செய்தியில்  கூறப்பட்டிருந்தது.முடிநாகனும் புறப்பட்டான்                                                                                                                                                                             


  தொடரும் ......                                                                                                             அதியன்                                                                                                                                                

இது ஒரு கற்பனை கதை யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.                                                                                                                                                                              

கதையை பற்றின உங்கள்  கருத்துக்களை பதிவிடவும்                           

திங்கள், 25 ஏப்ரல், 2022

ATHIYAN 1

                                                       அதியன் பாகம் 1

                                            கார்மேகம் சூழ்ந்த இரவு . இடியும் மின்னலும் அந்த இரவு நேரத்தை நடுங்க வைக்க  அந்த இடி மின்னலையே மிரளவைக்கும்  அளவிற்கு தூரத்தில் இருந்து ஒரு விதமான நீண்ட மரண  சத்தம் சுற்றி இருந்த காடுகளையே மிரள வைத்தது.இந்த மரண சத்தம் கேட்டு காடுகளில் இருந்த  பறவைகள் பயத்தில் மரக்கிளைகளை இறுக்கி பிடித்தவரும், தாய் பறவைகள் அதன் கூடுகளில் இருக்கும் குஞ்சிகளை இறுக்கி அணைத்தவாறு  பதற்றத்தில் இருந்தன

.                                அந்த இரவு நேரத்தில்  வௌவால்  ஒன்று  மரத்தில் தலைகீழாய் தொங்கியவாறு சத்தம் வரும் திசையை உற்றுநோக்கி பார்த்துக்கொண்டு இருந்தது.


                                                     மனிதர்கள் சிலர்  தீ  பந்தங்களோடு  அவர்களுக்குள் பேசிக்கொண்டு கைகளில் சில மூலிகைகளை எடுத்துக்கொண்டு வேகமாக செல்கின்றனர்.அவர்கள் சென்ற இடத்தில் பல கூடாரங்கள் அமைந்து இருக்க மூலிகைகளை முதன்மை மருத்துவரிடம் கொடுக்க சென்றனர். உள்ளே சென்றதும் ஒரே ரத்த வாடை வீச உடனே கூடார காவலாளிகள், மன்னார்  பருளிப்புற  மாமன்னர் ஆதன் வருகிறார் என்று கூற மன்னரும் படை தளபதியுமான களங்கண்டனும் சில முக்கிய அமைச்சர்களும் வீரர்களும் அரசருடன் மருத்துவ கூடாரத்திற்குள் நுழைகின்றனர்.

  அங்கு பல வீரர்கள் வெட்டுப்பட்டு பெரிய காயங்களுடனும் இன்னும் சிலர் கைகளை இழந்தும்,கால்களை இழந்தும் உயிருக்காக போராடி கொண்டு இருந்தனர் மன்னர் அவர்களின் நிலையை கண்டு சோகமா கூடாரத்தின் பின்புறமாய் வந்து பார்க்கிறார் பல வீரர்கள் பிணமாய் எரிந்து கொண்டு இருந்தனர்.இதை கண்ட மன்னர் தளபதியை களங்கண்டனை நோக்கி என்ன நடக்கிறது.இரண்டு நாளாக போர் நடக்கிறது.நமது பக்கத்தில் இருந்து பல வீரர்களை நாம் இழந்து விட்டோம் இதற்கு என்ன கரணம் தளபதி என மன்னர் ஆதன் தளபதி களங்கண்டனை நோக்கி கேட்க அதற்கு தளபதி  

                          அவன் பெயர் கூறினால் 

                                                இடியும் மின்னலும் ஆர்ப்பரிக்கும் , 

                       கர்ஜிக்கும் சிங்கமும் பூனையை மாறும்,                                                       ,                                                                                                                                                                                                                 ஆழி பேரலையும் அமைதியாகும்                                                                                                                                                                                                                                                    ஆயுதம் இன்றி போர்க்களம் புகுவான்                                                                                                                                                                                                                                                                                    அவன் போர்க்களம் புகுந்தால் 

தொடரும்...                             

                                                                                                                                          

                                                                                                                                  அதியன் 

                                                                                                                                                                                                                                                                   

                                                        

                                                                                                                                                                     

   இது ஒரு கற்பனை கதை ,யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல 

கதையை பற்றின உங்கள்  கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 

A STORY OF CREATION (1)

பூமியில் மனிதன் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை பல கேள்விகள் அவனில் ஓடுவதுண்டு.நாம்  ஏன் பிறக்கின்றோம் நாம்  ஏன் மரணிக்கின்றோம் நாம் இந்த பூம...